Saturday, October 8, 2011

நம்பிக்கையாளர்களை மாற்ற நாம் விரும்புகிறோமா? 2


நம்பிக்கையாளர்களை மாற்ற நாம் விரும்புகிறோமா? 2

ரொனால்ட் ஏ. லின்ட்சே

மதநம்பிக்கைகளைத் திணிப்பதில் நேரடியாகத் தொடர்பு அற்ற, மிகுந்த தீங்குகளை விளைவிக்கும் நட வடிக்கை பக்கம் நமது கவனத்தைத் திருப்பினால்,  மத நம்பிக்கைகளின் செல்வாக்கினால் குறிப்பிடத்தக்க அளவில் வடிவமைக்கப்பட்ட நடத்தை யின் மூலம்  அன்றாடம் தனிப்பட்ட முறையில் ஒருவருடன் ஒருவர் பழகுவதை நாம் முதலில் வேறுபடுத்திக் காண்போம்.  மற்றவர்களுடன் வழக்க மாக அவர்கள் பழகுவதைப் பொறுத்த மட்டில் மதநம்பிக்கையாளர் மற்றும் மத நம்பிக்கை அற்றவர் ஆகியோரிடையே பெருத்த வேறுபாடு ஏதுமில்லை.

கடவுள் நம்பிக்கை எவரையும் கெட்டவராக ஆக்கி விடுவதுமில்லை. அதே போல கடவுள் நம்பிக்கையை நிராகரிப்பது சிறந்த வாழ்க்கைக்குக் கட்டாயமாக வழி கோலும் என்பதுமில்லை.

மனிதநேயர்கள் குறிப்பிட்ட நன் னெறிக் கொள்கைகளை ஏற்று வாழ்கின்றனர். ஆனால் மனித நேயர் களான நம்முள் சிலர், நாம் பேசி ஆதரிக்கும் நன்னெறிக் கோட்பாடு களின்படி எப்போதுமே செயல் படுவதில்லை.  மனித நேய மதிப்பீடு களைப் பற்றி வாய் கிழியப் பேசியும், எழுதியும் வரும்  பச்சோந்தி போன்ற சில மனிதநேயர்களை நானறிவேன். ஒருவரது பேச்சு மட்டுமே அவரது ஒழுக்க நெறியை நம்பிக்கையுடன் சுட்டிக் காட்டுவதாக ஆகிவிட முடியாது.

அதன்படி, தனிப்பட்டவரின் ஒழுக்க நெறிக் குறைபாடுகளே, மதநம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகள் தவறானவை என்று கூறுவதற்கான காரணமாகவும் ஆகிவிடமுடியாது.

மதநம்பிக்கை உள்ளவர்க்கும், அற்றவர்க்கும் தனிபட்ட மனித ஒழுக்க நெறி அளவில் அதிக வேறுபாடில்லை

எவ்வாறாயினும், ஒருவர் மத நம்பிக்கை கொண்டவராகவோ அற்றவராகவோ இருப்பது, ஒரு தனிப்பட்ட மனிதரின் ஒழுக்க நெறிப் பண்பாட்டில் அதிக அளவு வேறுபாட்டை உண்டாக்குவதில்லை. ஒழுக்க நெறியின்படி சரியானது எனக் கருதி, முக்கியமாக இன்றும் பொதுக் கொள் கையில் ஒருவர் ஆதரித்து மேற்கொள்ளும் பழக்க வழக்கங்களின் தன்மையில் வேண்டுமானால் அதனால் ஓரளவு வேறுபாட்டை உண்டாக்க இயலும்.

பொதுக் கொள்கைகள் மதஅடிப்படையில் அமையவேண்டும் என்ற பேராசை

மதநம்பிக்கையாளர்களில் பலர், (அனைவரும் அல்ல என்பதை மறுபடியும் இங்கு கவனிக்கவும்,) பொதுக் கொள்கை களை தங்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைக்க வேண்டுமென்று பேராசைப் படுகின்றனர். அமெரிக்காவில் மத நம்பிக்கையினால் தூண்டப்பட்ட தனிப்பட்டவர்கள்தான் ஓரினத் திருமணத் திற்குத் தடை, கருக்கலைப்புக்குக் கட்டுப்பாடு  அல்லது முழுமை யான தடை, ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு தடை, பாலியல் கல்விக்கு எதிர்ப்பு ஆகியவற் றிற்கு பெரும் ஆதரவு அளித்தவர்கள் ஆவர்.   பெண்களை கீழானவர்களாக நடத்துவதை நியாயப்படுத்தல், மதசார்பற்ற கல்வி கற்பிப்பதை அடக்கி ஒடுக்குதல், தனிமனித சுதந்திரத்தை மறுப்பது என்ற வழிகளில் மற்ற நாடுகளில் காணப்படும் மதத்தின் கொடிய செல்வாக்கு வெளிப் படையாகத் தோற்றமளிக்கிறது.

அனைவரும் விரும்புவது மதச்சார்பற்ற அரசும், மதச்சார்பற்ற கண்ணோட்டத்தில் அமைந்த பொதுக் கொள்கைகளும்தான்!

தீங்கு விளைவிக்கும் மதநம்பிக்கை யாளர்களைப் பொருத்தவரை, தங்களின் நடவடிக்கைகளை அவர்களை மாற்றிக் கொள்ளச்  செய்வதே பயன்நிறைந்ததாக இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.

ஆனால், அவசரப்பட்டு, பொத்தாம் பொதுவில் அனைவரையும் இது போல் கருதி செயல்பட்டுவிடாமல்,  நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் பல மத நம்பிக்கையாளர்கள் தங்களின் கருத்து களை மற்றவர்கள் மீது திணிக்கவோ, பொதுக் கொள்கைக்கு அடிப்படையாக மதமூடநம்பிக்கைகளைக் கொள்ள வேண்டும் என்றோ கோருவதில்லை. (அவர்களது நம்பிக்கைகளில் அதிக மூடத்தனம் இல்லை போலும்).

மனிதநேயர் களுடன் சேர்ந்து மத நம்பிக்கையாளர் களும், மதச் சார்பற்ற அரசு ஒன்று நமக்கு வேண்டும் என்றும், பொதுக் கொள்கை களை மதச் சார்பின்மை என்ற கண்ணோட் டத்தின் அடிப்படையிலும், சோதனை செய்து மெய்ப்பிக்க இயன்ற ஆதாரங் களின் அடிப்படையிலும் அமைய வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.

மதநம்பிக்கையாளர்களின் மனநிலை மாறவேண்டும்

மத நம்பிக்கை கொண்டிருப்பது என்ற ஒன்று மட்டுமே நமக்குக் கவலை அளிப்ப தாக இருப்பது அல்ல. தங்களின் மதக் கோட்பாடுகள் நம்மை ஆட்சி செய்யும் நாட்டின் சட்ட திட்டங்களில் எதிரொலிக்க வேண்டும் என்ற மனநிலையை பல மதநம்பிக்கையாளர்கள் கொண்டிருப்பதும் மிகுந்த கவலை அளிப்பதுமாகும். ஒரு குறிப்பிட்ட பொதுக் கொள்கையை ஆதரிப் பதை நியாயப்படுத்துவதற்கு கடவுள் இவ்வாறு கூறுகிறார் என்பதைத் தவிர வேறு எதனையும் அவர்கள் அளிக்கத் தேவையில்லை.

ஜனநாயக நடைமுறை வெற்றிபெறத் தேவையான முன் நிபந்தனை

உண்மையான ஜனநாயக சமூகம் ஒன்றை நாம் பெற்றிருக்க வேண்டுமா னால், பெரும்பாலான மக்களிடம் நிலவும் இத்தகைய மனநிலை நீங்கி, அவர்கள் சிந்தனைச் சுதந்திரம் பெற்றவர்களாக ஆக வேண்டும். இத்தகைய ஜனநாயக நடை முறை பெருவெற்றி பெற்றதாக இருப்பதற்கு ஒரு தெளிவான முன் நிபந்தனை உள்ளது. மற்றவர்கள் தெரிவிக்கும் கருத்துகளைப் புரிந்து கொண்டு, அவற்றை மதிப்பீடு செய்து, காரண காரியங்களுடன் அவை பற்றி விவாதம் செய்வதற்கான ஆற்றல் கொண்டவர்களாக ஜனநாயக நடை முறையில் பங்கேற்பவர்கள் இருக்க வேண்டும்.

பொதுக் கொள்கை நிலைப்பாட்டை மதக் கோட்பாடுகளைக் கொண்டு நியாயப்படுத்த முனைந்தால்,  ஜனநாயக நடைமுறையில் அத்தகைய ஆற்றல் பெற்றவர்களின் பங்கேற்பு உண்மையான நடைமுறையில் இயலாத தாகவே ஆகிவிடும். ஏனென்றால் யாரோ ஒருவரின் நம்பிக்கையுடன் விவாதிக்க உங்களால் முடியாது.

எனவே, பொதுக் கொள்கை முற்றிலு மாக மதச் சார்பற்ற தன்மையிலேயே வடிவமைக்கப்பட வேண்டும், பொதுக் கொள்கை பற்றிய முடிவுகள் மதச் சார்பற்ற கருத்துகளின் அடிப்படை யிலேயே முற்றிலுமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற  வாதத்தை மதநம்பிக் கையாளர்களை நாம் ஏற்றுக் கொள்ளச் செய்வது அவசியமானதாகும். அவ் வாறு ஏற்றுக்கொள்ள சிலருக்கு, இயற்கையை மீறிய சக்தி ஒன்று உள்ளது என்று தாங்கள் நம்புவதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றே கருதுவர். 

அவர்களின் மதம் அந்த அளவுக்கு அவர்களின் சிந்தனை மற்றும் வாழ்க்கையில் ஊடுருவி நிலைத்து நிற்பதால், அத்தகைய இயற்கையை மீறிய சக்திகளை நம்பு வதை அவர்கள் நிறுத்தாதவரையில், நன்னெறி மற்றும் மதச்சார்பற்ற தன்மை கொண்ட பொதுக் கொள்கைகள் பற்றி எந்தக் காரண காரியத்தையும் அவர் களால் சிந்திக்க முடியாது என்பதுதான் அதன் காரணம். இத்தகைய பிடிவாத மான மத நம்பிக்கை கொண்டவர் களுடன் காரண காரியங்களைப் பற்றி விவாதித்து அவர்களை ஒப்புக் கொள் ளச் செய்வது எளிதானதல்ல.

எனவே, அவர்களது மதநம்பிக்கைகள்  அடிப் படை ஆதாரங்கள் ஏதுமற்றவை என்று அவர்களை ஒப்புக் கொள்ளச் செய்வதற் கான வாய்ப்பு மிகமிகக் குறைவே. என்றாலும் அத்தகைய வாய்ப்பே இல்லை என்றும் கூறிவிடமுடியாது.
(தொடரும்)
(நன்றி: ஃப்ரீ என்கொயரி - ஏப்ரல் , மே -2011
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்)

1 comment:

SURYAJEEVA said...

கடவுள் கொள்கைகளை நன்கு கற்று தேர்ந்து, அவற்றின் சந்தேகங்களை கேள்விகளாய் வடித்து, அதற்க்கு பதிலாய் பகுத்தறிவில் பெற்று அளித்தால் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.. எவ்வளவுக்கு எவ்வளவு கடவுள் நம்பிக்கை வளர்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு கடவுள் மறுப்பு கொள்கை வளர வாய்ப்பு உள்ளது...

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...