Monday, December 12, 2011

மனிதர்கள் இறந்த பிறகு அவர்களது மயிரும்-நகமும் எந்த அளவுக்கு வளரும்?


இறப்புக்குப் பிறகு மயிரும், நகமும் மூன்று நாள்கள் வரை வளரும் என்று முன்னாள் பேரறிஞர் ஜானி கார்சான் கூறியிருக்கிறார்.
ஆனால் இறப்புக்குப் பிறகு மயிரோ, நகமோ வளர்வதே இல்லை என்பதுதான் உண்மை. வளரும் என்று கூறுவது கட்டுக் கதையேயாகும். நாம் இறக்கும் போது, நமது உடலில் உள்ள நீர் வற்றிப் போகிறது. அதனால் நமது தோல் இறுகுவதால், நகமும் மயிரும் வளர்வது போன்ற மாயத் தோற்றத்தைத் தருகிறது.
இந்தக் கருத்துக்கு பெரிதும் காரணமாக இருப்பது எரிக் மரியா ரிமார்க் அவர்களின்  All quiet on the Western Front    என்ற இலக்கிய புதினத்தில் தனது நண்பன் கெம்மரிச்சின் இறப்பின்போது பால் பாமர் கூறுவதாக அமைந்துள்ளது: கெம்மரிச் இறந்து நீண்ட நாள்களுக்குப் பிறகும் அவரது நகங்கள் நிலவறைச் செடிகள் போல நீண்டு வளர்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. கார்க் திறப்பான்களைப் போல அவை சுருண்டு வளர்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றுடன் அழுகிக் கொண்டிருக்கும் தலையில், நல்ல நிலத்தில் புல் வளர்வது போல், மயிரும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
இது மட்டுமல்லாமல் இறப்புக்குப் பிறகு மிகுந்த செயல்பாடுகள் உள்ளன. உங்கள் உடலில் எண்ணற்ற நுண்ணுயிரிகள், வண்டுகள், பூச்சிகள், புழுக்கள் போன்ற  உயிரினங்கள் குடிகொண்டு வாழலாம். அவை உடல் அழிவதற்கு பெரிதும் துணை புரியும். உங்கள் உடம்பை மிகவும் விரும்பும் ஓர் உயிரினம் சவப்பெட்டி ஈ என்று அழைக்கப்படும் உயிரினமாகும். சரியாக பறக்க முடியாத இந்த ஈ ஓர் இறந்த உடலின் கீழ் தனது வாழ்நாள் முழுவதையும் கழிக்கிறது.
மனித சதையைப் பொறுத்தவரை இந்த சவப்பெட்டி ஈக்கள் பேராசை கொண்டவையாக இருப்பவையாகும். புதைக்கப்பட்ட ஓர் சவப்பெட்டியை அடைய மண்ணில் ஒரு மீட்டர் (3 அடி வரை) இவை தோண்டிச் செல்லும்.
1930 இல் பிரேசில் நாட்டு சரக்குக் கப்பல் ஒன்றின் மூலம் அமெரிக்காவின் தெற்குக் கடற்கரையை வந்தடைந்து பெருகிப் போன மூர்க்கத்தனம் நிறைந்த தீ எறும்பு இனத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், அபோசெபலாஸ் என்ற இனத்தைச் சேர்ந்த ஈ போன்ற பூச்சி உயிரினம் அண்மையில் பரவச் செய்யப்பட்டது. இந்த ஈ எறும்பின் தலையில் முட்டையிடும். பின்னர் பல நாள் கழித்து முட்டை  உடைந்து ஈக் குஞ்சு வெளிவரும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ 
'பொதுவான அறியாமைகள் தமிழில்' : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...