Sunday, December 11, 2011

தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம்... (5)

திராவிடர் பெருந்தகை டி.எம். நாயர் 
தொகுப்பாளர்: திராவிடர் இயக்க ஆய்வாளர் அருணாஅரசுகோ பாவேந்தன்

இரிகேஷன் கமிஷன் ரிபோர்டில் எழுதியிருக்கிறார்கள்:-    புதியவையான பாசன வேலைகள் ஆரம்பிக்க தகுந்த இடங்கள் அதிகம் இல்லாவிட்டாலும், ஏற்கெனவே இருப்பவைகளை அதிகப்படுத்தவாவது, சீர்திருத்தவாவது அதிகப் பணம் செலவழிக்க ஒவ்வொரு மாகாணத்திலும் ஹேதுவுண்டு. இது விஷயமாய் ஏற்படும் செலவை பாசனவேலைகளின் மூலதனச் செலவாக எண்ணினாலும் அநேகமாய் தக்க வட்டி கட்டுமென்பதில் ஸந்தேக மில்லை என்று எழுதியிருக்கிறார்கள்.; கமிஷன் மெம்பர்களும் லாபம் வரத்தக்க வேலைகளில் அதிகப் பணம் செல வழிக்கலாமென்று சொல்லியிருக் கிறார்கள்.

இந்த ராஜதானியில் கவர்ன் மெண்டார் பாசன வேலைகள் செய் வதில் ரொம்பவும் மெதுவாயிருக் கிறார்கள். காவேரி நீராரம்ப விஷயத் தில் பாசன வேலைகளுக்கு பணம் கொடுப்பதா யிருந்தாலும் வேலை யாட்கள் அகப்படுவது அரிதாயிருக் கிறது என்று எப்பொழுதும் சொல்லி வருகிறார்கள். ஸரியான கூலி கொடுத் தால் இந்தியாவில் வேலையாட்கள் கிடைப்பார்கள். 

தஞ்சாவூர் ஜில்லாவி லிருந்து பர்மா, லங்கை, ஸ்ட்ரெய்ட் ஸெட்டில்மெண்டுகள் இவைகளுக்கு வேலையாட்கள் குடியேறிப் போகி றார்கள். ஸரியான கூலி கொடுத்தால் வேலையாட்களை தஞ்சாவூரிலேயே இருக்கும்படி செய்துவிடலாம். கூலி வித்யாஸப்படுவதால் தான் கூலி யாட்கள் ஊர்விட்டூர் போகிறார்கள். தஞ்சாவூர் பாசன ஏற்பாட்டில் சீர்தி ருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அதோடு வேலையாட்கள் வேறு நாடுகளுக்குப் போகிறார்கள் என்றும், அதை நிறுத்த ஏதாவது செய்து ஜில்லாவில் ஜனத்தொகை குறைவதைத் தடுக்க வேண்டுமென்றும், கூச்சல்பாடு உண்டாகி யிருக்கிறது. இந்த இரண்டு குறைகளையும் ஒரே வழியில் நிவர்த்தி செய்யலாம். பாசன ஏற்பாடுகளை சீர் திருத்த வேலை தொடங்கி வேலை யாட்களுக்கு  தக்க கூலி கொடுக்க வேண்டும்.

பாசன வேலைக்கு வேண்டிய மூலதனமும் வேலையாட்களையும் தவிர, பாசன சீர்திருத்த ஏற்பாட்டில் இன் னொரு விஷயமும் கவனிக் கத்தக்கது. நீராரம்பங்களில் பாசன வேலைகளை சீர்திருத்த வேண்டு மானால் டெல்டாவிலுள்ள ஜனங் களையும் கலந்து யோசனை செய்ய வேண்டும். அவர்கள் நாளது வரையில் அந்தப் பாசன விஷயத்தில் அவரவ ருக்குத் தக்கபடி ஒருவகை பாத்யத்தை அனுபவித்து வருகிறார்கள். அவர் களுக்கு நஷ்டமுண்டாகாதபடி பார்த் துக் கொள்ள வேண்டும். வேண்டிய சீர்திருத்தங்களைச் செய்து முடிக்க கவர்ன்மெண்டார் தக்க ஏற்பாட்டுடன் ஆரம்பிக்க வேண்டும். அதனோடு ஜனங்களுடைய அபிப்ராயத்தையும் அறிந்து அதை அனுஸரித்து சீர்திருத் தங்கள் செய்ய வேண்டும்.

கான்பரென்ஸில் அக்ராஸனாதிபதி பேசிய பிறகு பின்வரும் தீர்மானங்கள் செய்யப்பட்டன.

1. காலஞ்சென்ற மிஸ்டர் ஹியூம், ஆர்.ரகுநாதராவ், வி.க்ருஷ்ணஸாமி அய்யர், இவர்களுடைய மரணத்துக்காக அனுதாபங்காட்டித் தீர்மானங்கள் செய்யப்பட்டன.

2. ஆனரபில் மிஸ்டர் பி.எஸ். சிவஸ் வாமி அய்யர் நிர்வாக ஸபையில் மெம்பராக நியமிக்கப்பட்டதைப் பற்றி ஸந்தோஷங்காட்டி ஒரு தீர்மானம் செய்யப்பட்டது.

3. தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள ஸிவில் கோர்ட்டுகளின் ஜூரிஸ்டிக் ஷனை அதாவது, அதிகார ப்ரதேசத்தை மாற்றப் போவதாகத் தெரிகிறது. அதனால் ஜனங்களுக்கு அஸௌ கரியமும் செலவும் ஏற்படாதபடி செய்யவேண்டும். அதற்கு மாற்றப் போகும் ஜூரிஸ்டிக்ஷன் ரெவினியூ தாலுகாவை அனுஸரித்தி ருக்க வேண்டும். ரெயில், ஸாதாரண ரோட்டுகள், இவைகளின் ஸௌகரியங் களைஅனுஸரித்து மிருக்க வேண்டும். ஜூரிஸ்டிக்ஷனுக்குபடும் ஒவ்வொரு இடத்திலும் வழக்குகள் இருக்கும் நிலமையை உத்தேசித்து ஜூரிஸ்டிக் ஷனை மாற்ற வேண்டும்.

4. இந்தக் கான்பரென்ஸினுடைய நிர்வாகக் கமிட்டியாரும் இன்னும் சில குறிப்பிட்ட மெம்பர்களும் சேர்ந்து ஒரு கமிட்டியாக ஏற்படவேண்டும். அவர்கள் வேண்டுமானால் இன்னும் மெம்பர்களைச் சேர்த்துக் கொள்ள லாம். அந்தக் கமிட்டி இந்த ஜில்லா வில் கோர்ட்டுகளின் ஜூரிஸ்டிக்ஷனை மாற்றுவதைக் குறித்து நல்ல வழிகளை ஆலோசித்து ஒரு ரிபோர்ட் எழுதி ஸ்பெஷல் கமிஷனர் தமது ஆலோ சனைகளைச் சொல்லு முன் அந்த ரிப்போர்ட்டை தக்க அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.

5. கவர்ன்மெண்டார் சென்னை லெஜிஸ்லேடிவ் கௌன்ஸில் நடவடிக் கைகளை ஸ்வதேச பாஷைகளில் ப்ரசுரம் செய்து ஜில்லா கெஜட்டிலும் அவைகளை வெளிப்படுத்த வேண்டும். அப்படிச் செய்வதனால் நேரிடும் பணச் செலவைக் காட்டிலும் நன்மை அதிகமா யிருக்கிறது. ஆகையால் கவர்ன்மெண் டார் தங்கள் அபிப்ராயத்தை மறுபடியும் ஆலோசித்துப் பார்க்க வேண்டும்.

6. இந்திய நாட்டுக் கைத்தொழில் களை ஜனங்கள் ஆதரிக்க வேண்டு மென்று இந்தக் கான்பரென்ஸ் ஜனங்களை வேண்டிக் கொண்டது.

7. இந்தியாவிலிருந்து தென்னாப் பிரிக்காவுக்குப் போன இந்தியர்களுக்கு ஸௌகர்யமுண்டாக்கும் பொருட்டு கனம் கோக்லே அவர்கள் அங்கு சென்றதற்காக கான்பரென்ஸ் அவருக்கு வந்தனம் அளித்தது.

8. சென்ற ஸெட்டில்மெண்டின் போது கவர்ன்மெண்டார் தஞ்சாவூர் நீராரம்ப நீர்ப்பாசனத்தை சீர்திருத் துவதாகவும், வடிகால்களை ஸரிப் படுத்துவதாகவும் சொன்னார்கள். நாளது வரையில் தக்க ஏற்பாடுகள் ஒன்றும் செய்யவில்லை. ஆகையால் கவர்ன்மெண்டார் இதைப் பற்றி சீக்ரம் கவனிக்க வேண்டும்.

9. வேறு தேசம் போக விரும்பு கிறவன் தான் போகும் போது தன்னி ருப்பிடத்தில் ஒருவருடனும் வேலை செய்ய ஒப்பந்தம் செய்திருக்கவில்லை என்று வில்லேஜ் மாஜிஸ்ட்ரேட்டி னிடமிருந்து ஒரு ஸர்டிபிகேட் கொண்டு வரவேண்டும். அதை ப்ரொடெக்டரிடமாவது ரெஜ்ஸ்டர் செய்யும் உத்யோகஸ்தரிடமாவது காட்ட வேண்டும் என்று 1908 ஆம் வருஷத்து 17 ஆவது ஆக்டின் படிக்கு கவர்ன்மெண் டார் சட்டம் ஏற்படுத்த வேண்டும்.

10. நிலவரி:- (1) நிலத்திலிருந்து ஸர்க் காருக்குச் சேரவேண்டிய நிலவரி எவ்வளவு என்பது சட்டத்தால் நிர்ணயம் செய்யப் படவேண்டும்.

(2) 60 வருஷத்துக்கு ஒரு தடவை தான் நிலவரியை சட்டத்தால் அதிகப்படுத்த வேண்டும்.

(3) டிமார்க்கேஷன் கல்லுகள் நடு வதைக் குறித்த ரூல்கள் மிராசுதாரர் களுக்கு கஷ்டமாயிருக்கின்றன வாகை யால் அவைகளை மாற்றி விட வேண் டும்.

(4) க்ராமத்துக்கு வெளியே வாய்க் கால்களுள்ள இடங்களில் கவர்ன் மெண்டார் வாய்க்கால் வெட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.

(5) புறம்போக்கு நிலங்களை ஆடுமாடு மேய்வதற்காக ரிஸெர்வ் செய்யவேண்டும். கூடியமட்டில் ஜனங்கள் ஒதுங்குவதற்கும் பசுந்தாள் எருவுக்கும் வேண்டிய ஸௌகர்யங்கள் கவர்ன்மெண்டார் செய்து கொடுக்க வேண்டும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...