தேர்தல் விதிமுறையை மீறியதாக விஜயகாந்த் மனைவி மீது வழக்கு
தே.மு.தி.க. சார்பில் மதுரை மேயர் வேட்பா ளராக கவியரசு போட்டி யிடுகிறார். அவரை ஆத ரித்து பிரசாரம் செய்வ தற்காக விஜயகாந்த் மனைவி பிரேமலதா நேற்று முன்தினம் இரவு மதுரை வந்தார். அவர் மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள ஜின்னா திடல், மகபூப்பாளை யம் உள்ளிட்ட பகுதியில் தீவிர பிரசாரம் மேற் கொண்டார்.
அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறிய தாக கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தம் எஸ்.எஸ்.காலனி போலீ சில் புகார் செய்தார். அதில், அனுமதிக்கப் பட்ட 6 வாகனங்களுக்கு மேல் சென்றதாகவும், தேர்தல் அதிகாரிகள் வழங்கிய அனுமதி கடி தங்களை வாகனங்களில் ஓட்டவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
அதன்பேரில் போலீ சார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மத்திய தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சுந்தரராஜன், மேயர் வேட்பாளர் கவி யரசு உள்பட சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதே போன்று நேற்று முன்தினம் இரவு சிம்மக் கல் மற்றும் திருமலை ராயர் படித்துறை பகுதி யில் மேயர் வேட்பாளர் கவியரசுக்கு பிரேமலதா தீவிர வாக்குச் சேகரிப் பில் ஈடுபட்டார். அப் போது தேர்தல் விதி முறையை மீறி அவரு டன் 6 கார்களுக்கு மேல் சென்றதாக தெற்கு மண் டல தேர்தல் அதிகாரி பழனிச்சாமி திலகர் திடல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பிரேமலதா, தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சுந்தர ராஜன்(மத்தி) ஏ.கே.டி. ராஜா (திருப்பரங்குன் றம்) வேட்பாளர் கவி யரசு மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment