சூரியனிலிருந்து கிளம்பி பூமியை வந்தடை
வது ஒளிக் கதிர்களும், வெப்பமும் மட்டுமல்ல, அதிசக்தி வாய்ந்த காந்தத்
துகள்களும் பூமியின் பரப்பை வந்தடைகின்றன. ஆனால், சில சமயம் இந்த துகள்கள்
அதிக சக்தி வாய்ந்தவையாக இருப்பதுண்டு. இதை விஞ்ஞானிகள் சூரியப் புயல்
என்று அழைக்கின்றனர்.
இத்தகைய புயல்கள் பூமியை வந்தடைந்தால்
பூமியின் மின்னனு கருவிகளின் செயல்பாடு பாதிக்கப் பட்டு பழுதடையும் ஆபத்து
உண்டு. அண்மையில் சூரியப் புயல்கள் குறித்து பிரிட்டன் விஞ்ஞானிகள் விரிவாக
ஆராய்ந்துள்ளனர்.
கடந்த, 150 ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட
தகவல்களை ஆராய்ந்த அவர்கள், மூன்று ஆண்டு களுக்கு ஒரு முறை சூரியப்
புயல்கள் பூமியை தாக்குவதாகவும், 25 ஆண்டு களுக்கு ஒரு முறை அதிக சக்தி
வாய்ந்த சூரியப் புயல்கள் தாக்குவதாகவும் கண்டறிந்துள் ளனர். மிக மிக சக்தி
வாய்ந்த சூரியப் புயல், 1859இல் பூமியை தாக்கியதாக அவர்கள்
தெரிவித்துள்ளனர்.
அதைப் போன்ற சூரியப் புயல், இப்போது
பூமியைத் தாக்கினால், ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்கள் முதல், பூமியிலுள்ள
கோடிக் கணக்கான தகவல் தொடர்புக் கருவிகள் வரை பாதிக் கப்படும் என,
பிரிட்டன் ஆய்வா ளர்கள் கணித்துள்ளனர்.
No comments:
Post a Comment