Thursday, July 19, 2012

பெரிய - வாள் சொன்ன பெரியார்


ஆனந்தவிகடன் இதழில் சு.சாமி யின் பேட்டிகள் வந்து கொண்டு இருக்கின்றன. அதில் ஒரு கேள்வி. நீங்கள் யாரை அதிகம் நேசிக் கிறீர்கள்? என்ற கேள்விக்கு காஞ்சி மகாபெரியவரை என்று பதில் சொல்லியுள்ளார்.
அவர் அப்படித்தான் சொல்லு வார். பார்ப்பனர்கள் வேறு யாரைத் தான் சொல்லுவார்கள்?
உத்தரப் பிரதேசம் கான்பூரில் சு.சாமி முன்னின்று ஒரு பார்ப்பன மாநாட்டையே நடத்தியவராயிற்றே!
பிராமண சுயாபிமான் அந் தோலன் சமிதி என்ற அமைப்பு தான் என்றாலும் (1995 பிப்ரவரி) அதன் முதுகெலும்பாக இருந்து பல பகுதிகளில் இருந்தும் பார்ப்பனர் களைக் கொண்டு வந்து சேர்க்க மிகவும் பாடுபட்டவர் சு.சாமிதான் என்று இந்துஸ்தான் டைம்ஸ் (8-2-1995) ஏடு வெளியிட்டுள்ளதே!
அப்படிப்பட்டவர் காஞ்சிப் பெரிய-வாளைத்தான் நேசிப்பார்.
இந்த நேரத்தில் இன்னொன் றையும் நாம் நினைவூட்ட வேண்டும். ஒரு முறை இதே சு.சாமி இதே காஞ்சி - பெரியவாளிடம் நான் யாரைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று கேட்டபோது, பெரியாரைப் பின்பற்று என்று சொன்னதாக இதே சு.சாமி சொன்னது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் வெளிவந்த துண்டே! அதையும் ஆனந்த விகடன் பேட்டியில் சு.சாமி சொல்லி இருக்கலாமே!
அடிக்குறிப்பு: இந்தச் சு.சாமி பற்றி கலைஞர் சொன்னது  ஒரு மன நோயாளி! இராமகிருஷ்ண ஹெக்டே சொன்னதோ - கழிவறைச் சுவர் களில் ஆபாசப் படங்களை வரை கின்ற மனநோயாளி!
ஆகக் கூட்டிக் கழித்துப் பார்த் தால் இருவரும் சொன்னது மனநோயாளி   என்பதே!


நடிகைகளுக்கு கடவுள் பக்தி
சினிமா நடிகைகள் சிலருக்கு ஆன்மீகத்தின் மீது நாட்டம் ஏற் பட்டு, கோயில்கள் கூட கட்டு கிறார்களாம் - வார இதழ் ஒன்று ஒரு பட்டியலையே வெளியிட் டுள்ளது.
சினிமா உலகில் திருமணம் - விவாகரத்து - இத்தியாதி இத்தி யாதி நடப்புகள் எல்லாம் சர்வ சாதாரணம்தான். இப்படி வாழ்க் கையையே தீர்மானித்துக் கொள்ள முடியாதவர்கள் தடுமாற்றத்தின் காரணமாக எதையாவது ஒரு பிடிமானம் என்று கருதி, குளிக்கப் போய் சேற்றில் விழுந்த கதைதான் இது.
இமயமலைச் சாரல் என்றும், பாபா என்றும் ஓடித் திரியும் ஆனானப்பட்ட ரஜினிகாந்தே என்ன சொன்னார் தெரியுமா?
எல்லாம் தெய்வச் செயல், கடவுளே எல்லாம் பார்த்திருப்பா ருன்னு விட்டிருந்தா நான் இன்னும் கண்டக்டராகவே இருந்திருப்பேன். அந்தச் சூழ்நிலையில் உத்தியோ கத்தை விட்டுவிட்டு தைரியமாக சென்னைக்கு வந்து, ஒரு வாசல்ல காத்திருந்தது என் முயற்சிதான் - (ராணி 20-7-2008) என்று இதே ராணிதான் செய்தி வெளியிட்டி ருந்தது.
பக்தி என்பது ஒரு மனநோய் அவ்வளவுதான். தன்மானக்காரனி டத்திலும், தன்புத்திக்காரனிடத்தி லும்  இந்நோய் அண்டாது - அண் டவே அண்டாது!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...