Thursday, July 19, 2012

69% இடஒதுக்கீடு


தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத் தப்பட்டோருக்கென இட ஒதுக்கீடு என்பது செயல்பட்டு வருகிறது.
76 ஆவது இந்திய அரசியல் சாசனத் திருத்தம் பெற்று, ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்புடன் இருந்து வருகிறது. இந்த அளவு பாதுகாப்பாக வேறு எந்த மாநிலத்திலும் இட ஒதுக்கீடு இல்லை.
இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன் முதலாக நீதிக்கட்சி ஆட்சிக் கால கட்டத்தில் தான் தமிழ்நாட்டில் சமூக நீதிக் கொடி உயர்த்தப்பட்டது. அந்த ஆணை செல்லாது என்று உச்சநீதிமன்றம் வரை தீர்ப்புக் கூறிய நிலையில், எதிர்த்துப் போராடி, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முதல் திருத்தம் கொண்டு வருவதற்குக் காரணம் தமிழ்நாடே - தந்தை பெரியாரே - திராவிடர் இயக்கமே!
கடந்த 60 ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டுக்கு எவ்வளவோ இடர்பாடுகள் - முட்டுக் கட்டைகள் இருந்தன என்றாலும்,  சமூக நீதி வளம் - பலம் வாய்ந்த தந்தை பெரியார் அவர்களின் தமிழ் மண் அவற்றையெல்லாம் முறியடித்து, இந்தியாவுக்கே வழிகாட்டிக் கொண்டுள்ளது.
50 விழுக்காட்டுக்கு மேல் இட ஒதுக்கீடு செய்யக் கூடாது என்று இந்திரா-சகானி வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு ஒன்றை வழங்கிய நிலையிலும் கூட, அதிலிருந்து மீண்டிட, புதிய சட்டம் ஒன்றினைக் கொண்டு வர வரைவுச் சட்டம் ஒன்றைத் தயாரித்துக் கொடுத்தவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களே!
முதல் சட்டத்திருத்தம் என்று வருகிறபோது எப்படி தந்தை பெரியார் நினைவு கூரப்படு கிறார்களோ, அது போல 76 ஆவது சட்டத் திருத்தம் என்கிறபோது, தந்தை பெரியார் அவர்களின் அருமைச் சீடர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நினைவு கூரப்படுவார் என்பது வரலாற்றுக் கல்வெட்டே!
இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. என்றாலும், இதுவரை இந்தச் சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறிடவில்லை. 69 சதவிகித இட ஒதுக்கீடு கறாராகச் செயல்பட்டுதான் வருகிறது.
13-7-2010 முற்பகலில் இந்தப் பிரச் சினையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கபாடியா, ராதாகிருஷ்ணன், சுதந்திர குமார் ஆகியோர் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் முக்கியமாகக் குறிப்பிட்டு இருப்பதாவது:
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் கருத்து - மொத்த மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர் விகிதாசாரம் இவற்றையெல்லாம் ஆராய்ந்து 50 சதவிகி தத்திற்கு மேல் இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து ஓராண்டுக்குப் பின் முடிவு செய்யலாம் என்று மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கூறியது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நடைமுறை யில் இருந்து வரும் 69 விழுக்காடு இட ஒதுக் கீட்டை எதிர்த்து 12 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். 12 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது, உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கினை அனு மதிக்கலாமா என்ற வினா ஒரு பக்கம் இருந் தாலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு இன்னும் முற்றுப் பெறாத நிலையில், இது தொடர்பான எந்த ஆணையையும் நீதிமன்றம் வழங்கிட வாய்ப்பில்லை என்பதுதான் இன்றைய நிலை யாக இருக்க முடியும்.
தமிழ்நாடு அரசும் உரிய முறையில் ஆய்வு செய்து, போதிய கவனம் எடுத்துக் கொண்டு செயல்படவேண்டும் என்பதே நமது முக்கிய வேண்டுகோளாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...