Monday, March 5, 2012

குஜராத்தை அடுத்து கருநாடக மாநிலத்தில் இந்துத்துவ பரிசோதனை


ஆபத்து நிறைந்த பா.ஜ.க. ஆட்சியில் உள்ள  மதத் தீவிரவாதப் பாதையில் கருநாடக மாநிலம் சென்று கொண்டி ருக்கிறது என்பதை அங்கு நிகழும் பல்வேறு நிகழ்வுகள் காட்டுவதாக ராணா அயூப் என்பவர் தெஹல்கா வார இதழில் ஹிந்துத்வாவின் இரண்டாவது பரிசோதனைச் சாலை என்ற தலைப்பில் எழுதியுள்ள தனது கட்டுரையில் தெரி வித்துள்ளார்.
குஜராத்துக்கு அடுத்தபடியாக தங்களின் இந்துத்துவா பரிசோதனையை நடத்த பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் கருநாடக மாநிலத்தைத் தேர்வு செய்திருப்பதாகவே தெரிகிறது.
இந்துக்களின் சங்கமமாம்!
இந்துக்களின் பலத்தைக் காட்டும் விதத்தில் மாபெரும் சங்கமம் என்ற ஒரு நிகழ்ச்சியை ஆர்.எஸ்.எஸ். இம்மாநிலத் தின் ஹூப்ளி நகரில் நடத்தியது. இது போன்ற சங்கமம் நிகழ்ச்சியை கருநாடக மாநிலம் முழுவதிலும் நடத்திடவும் திட்ட மிட்டிருந்தது. ஆனால், கடந்த சில நாள்களுக்கு முன்பு சட்டமன்றத்தில், முக்கியமான பிரச்சினை பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, மூன்று அமைச்சர்கள் பாலுறவுக் காட்சியை தங்கள் செல்போனில் பார்த்துக் கொண்டிருந்த பிரச்சினை எழுந்தவுடன் இத்திட்டம் கைவிடப்பட்டது.
ஹூப்ளியில் நடந்த சங்கமம் விழாவில் முதலமைச்சர் சதானந்த கவுடா கலந்து கொண்டார். அதுவும் எப்படி? ஆர்.எஸ்.எஸ். சீருடையான காக்கி அரைக்கால் சட்டை,  வெள்ளை நிற மேல் சட்டை அணிந்து கொண்டு ஆஜரானார். ஒரு முதலமைச்சர் இது போன்று ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்து வருவது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.
கிறிஸ்துவர்கள்மீதான தாக்குதல்
கருநாடகத்தின் வடக்கு மற்றும் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்களின் மீதான தாக்குதல் அன்றாட நிகழ்ச்சி யாகவே ஆகிவிட்டது. தெகல்கா இதழின் செய்தியாளர் இப்பகுதிகளில் பயணம் செய்துவிட்டு, இத்தகைய தாக்குதல் பற்றி திரட்டி வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கத்தக்கவையாக உள்ளன. இந்த விவரங்கள் தனியே தரப்பட்டுள்ளன.
மங்களூர் அருகே உள்ள உப்பனங்குடி என்ற ஊரில் 22-1-2012 அன்று  முதல்வர் சதானந்த கவுடா, எடியூரப்பா ஆகியோருக்கு நெருக்கமான பட் என்ற ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசும்போது, முஸ்லிம் பெண்களின் பர்தாவை எடுத்து விட்டு  கொடுப்பதற்கு அவர் களிடம் என்ன இருக்கிறது என்று பாருங்கள் என்று அருவருக்கத்தக்க முறையில் கூறியுள்ளார். கூட்டத்தினர் ஆரவாரத்துடன் அதைக் கேட்டு மகிழ்ந் துள்ளனர்; காவல்துறையினர் மவுனம் காத்தனர். இது பற்றி காவல் துறையிடம் புகார் செய்தபிறகு பட் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால், புகார் அளித்த  முஸ்லிம் மத்திய கமிட்டி உறுப்பினர் முகமது மசூத் மீதே மக்களிடையே விரோதத்தைத் தூண்டி விட்டு வளர்க்கிறார் என்று இந்திய குற்றவியல் சட்டம் 153 (அ) பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டுள்ளது. பட் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இதில் வேடிக்கை என்னவென் றால், மங்களூர் காவல்துறை ஆணை யர் அலுவலகக் கட்டடத்தையே இந்த பட்தான் திறந்து வைத்தார் என்பது தான். இது பற்றி யாருமே வாய் திறக்க வில்லை. கரவாலி ஆலே என்ற பத்திரிகை மட்டுமே இதனை வெளியிட்டது. மாநிலத் தில் மத மூடநம்பிக்கைகள் வளர்ந்து வருவதற்கு எதிராகக் குரல் கொடுத்தது இந்த பத்திரிகை. அதன் ஆசிரியர் சீதாராம் என்பவர் கடந்த 20 ஆண்டு காலத்தில் மாநிலத்தில் நடைபெற்ற பெரியதும், சிறியதுமான மதக் கலவரங் களைப் பற்றி ஆவணப் படுத்தியிருக்கிறார்; அதற்காக அவர் துன்பப்பட்டும் இருக் கிறார்.
பத்து நாள்களுக்கு ஒருமுறை தேவாலயம்மீது தாக்குதல்
தனது பத்திரிகைக் குவியலில் இருந்து சிலவற்றை  எடுத்துக் காட்டும் அவர்,  அன்றாடம் எங்காவது ஓரிடத்தில் முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மற்றும் தேவாலயங்கள், மசூதிகள் மீது தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்று கூறுகிறார். கடந்த 3 ஆண்டுகளில்  10 நாள்களுக்கு ஒரு முறை ஒரு தேவாலயம் தாக்கப்பட்டிருப்ப தாக அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு இந்து பெண் ணுடன் ஒரு முஸ்லிம் இளைஞன் இருந்து விட்டால் போதும், உடனே கலவரம் தொடங்கிவிடும்.
இந்து பெண் - முஸ்லிம் இளைஞன் காதலை காதல் ஜிகாட் (புனிதப்போர்) என்று சங்பரிவாரங்கள் முத்திரை குத்தியுள்ளன. இக்கோட்பாட்டில் மிகுந்த தீவிரம் கொண்ட பட் 2011 டிசம்பரில் சுல்லியாவில் ஒரு மாபெரும் கண்டனப் பேரணி நடத்தினார். இந்துக்களுக்கு எதிரான உணர்வு கொண்டிருப்பதாக காவல்துறையைக் குறை கூறிய அவர், காதல் புனிதப்போர், தீவிரவாதம், பசுவதை ஆகியவை எவ்வாறு மாநிலத்தில் அதிகரித்துள்ளது என்று பேசினார்.
அவருடன் பேசிய இந்து ஜாக்ரன் வேடிகேயின் மண்டல அமைப்பாளர், முஸ்லிம்கள் எங்களைக் கோபப் படுத்தியபோதெல்லாம் நாங்கள் தக்க பதிலடி கொடுத்துவிட்டோம். இன்னமும் அவர்களுக்குத் தேவை என்றாலும் கிடைக்கும். காவல்துறை அவர்களுடன் கைகோர்த்துக் கொண்டால், அவர்களுக் கும் பாடம் கற்பிப்போம் என்று கூறினார்.
அக்கூட்டத்தில் பேசியவர்கள் காவல்துறை உதவி ஆய்வாளர் ரவிகுமார், கண்காணிப்பாளர், உதவி கண்காணிப் பாளர் மீது வழக்குகள் பதிவு செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசி
நன்றி: தெஹல்கா 25.2.2012 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
- (தொடரும்)


.
 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...