Monday, March 5, 2012

திராவிடர் இயக்கம் (3)


திராவிடர் இயக்கமான நீதிக் கட்சியும் சரி, சுயமரியாதை இயக்கமும் சரி, திராவிடர் கழகமும் சரி - அரசியலில் கால் பதித்த தி.மு.க.வானாலும் சரி, சமூகத்தில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது என்பதற்கு எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.
நீதிக்கட்சி, பார்ப்பனர் அல்லாதார் கல்வி, வேலை வாய்ப்புகளில் கவனம் செலுத்தி - பார்ப்பனர் அல்லாதார் இவற்றில் உரிமைகளைப் பெற்றுத் தந்தது என்றால், சுயமரியாதை இயக்கமோ நான் ஏன் தாழ்ந்த ஜாதி? நீ எப்படி உயர் ஜாதி? நான் ஏன் உழைக்க வேண்டும்? நீ ஏன் பிழைக்க வேண்டும்? என்ற அடிப்படை வினாவை எழுப்பி ஆண்டாண்டுக் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள் மத்தியிலே தன்மானப் புயலைத் தட்டி எழுப்பியது.
இந்த ஏற்றத் தாழ்வை கடவுள்தான் படைத்தார் என்று பதில் வந்த நிலையில், அந்தக் கடவுளையே ஒரு கை பார்க்கிறேன் என்று கிளர்ந்து எழுந்தது. சாஸ்திரம் சொல்லுகிறது என்று சொன்னபோது, இந்த இயக்கத்தின் ஆசான் தந்தை பெரியார் அந்த சாஸ்திரங்களுக்கு நெருப்பு வைப்பேன் என்று சொன்னது மாத்திரமல்லாமல், அதனைச் செய்தும் காட்டினார்.
இந்(து)த மதக் கடவுள், மதம், சாஸ்திரம் சம்பிரதாயங்கள் எல்லாம் பார்ப்பான் பிழைக்கவும், அவர்களின் உயர் ஜாதித் தன்மையைக் கட்டிக் காக்கவும், பெரும்பாலான இந்நாட்டுக்குரிய மக்களைச் சுரண்டவும் கற்பிக்கப்பட்ட ஏற்பாடுகள் என்பதை மக்கள் மத்தியில் பல வகைகளிலும் பிரச்சாரம் செய்து, மக்களின் சிந்தனையில் புரட்சித் தீயை உருவாக்கினார் தந்தை பெரியார்.
எப்படி இருந்த நாடு இது? தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலேயே உணவு விடுதிகளில் எப்படி விளம்பரம் செய்து இருந்தனர்?
பஞ்சமர்களும், நாயர்களும், பெரு நோய்க்காரர் களும் நுழையக் கூடாது என்று விளம்பரப்படுத்தி யிருந்தார்களே! (குடிஅரசு 3.5.1936).
இரயில்வே உணவு விடுதிகளில்கூட பிரா மணாள் சூத்திராள் என்று இடம் பிரித்து வைக்கப் பட்டு இருந்ததே!
1924இல் கோவை சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் அவர்கள் இரயில்வே உணவு விடுதி களில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பேதம் இருக்கக் கூடாது என்று இரயில்வே ஆலோசனைக் குழுவில் தீர்மானம் கொண்டு வந்தபோது, காளிதாச அய்யர் என்ற பார்ப்பனர் பிடிவாதம் செய்து கெடுத்தார். ஆனால் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை பெரியார் அவர்கள் அந்த முயற்சியிலே ஈடுபட்டு, வெற்றியும் கண்டாரே! 27.1.1941 நாளிட்ட விடுதலையில் இந்திய கவர்ன்மென்ட் கவனிப் பார்களா? என்ற தலையங்கத்திலே பிராமணன், சூத்திரர் பேத நிலையைக் கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தார். தந்தை பெரியார் அவர்களின் அந்தத் தலையங்கத்திலே உள்ள நியாய உணர்வைக் கண்ட அரசினர் 8.2.1941 அன்று முதல் இரயில்வே உணவு விடுதியில் உள்ள பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பேத நிலையை ஒழிக்க உத்தரவிட்டிருந்தனர். ஆனால், இது இரயில்வேயில் உள்ள எல்லா உணவு விடுதிகளுக்கும் அல்லாமல் எம்.எஸ்.எம். உணவு விடுதி என்ற அளவிலே இருந்தது;  ஆனால் தந்தை பெரியார் அவர்களின் தொடர் போராட்டத்தினால் 20.3.1941 முதல் எல்லா இரயில்வே விடுதிகளுக்கும் இது நடைமுறைப் படுத்தப்பட்டது. 30.3.1941-ஆம் நாளை இரயில்வே உணவு விடுதிகளில் பேதம் ஒழிந்த நாளாகக் கொண்டாடுமாறு விடுதலை ஏட்டின் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார் தந்தை பெரியார்.
தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் சேலத்தில் கலந்து கொண்டனர் என்பது தெரியுமா?
திராவிடர் இயக்கத்தின் இந்த அடிப்படை வரலாறு எல்லாம் தெரிந்து கொள்ளாமல் வாய்ப் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று உளற வேண்டாம். வீண் வம்புக்கு வந்தால் அதற்கான பதிலடி கொடுக்கப்படும் - எச்சரிக்கை!


.
 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...