Monday, December 19, 2011

ஓய்வூதியர்கள் பிரச்சினை:


ஓய்வூதியர்கள் பிரச்சினை: அரசுகள் மனிதாபிமானத்துடன் பார்க்கவேண்டும் அகில இந்திய ஓய்வூதியர் மாநாட்டில் தமிழர் தலைவர் பேச்சு

சென்னை, டிச. 18- ஓய்வூதியர்கள் பிரச்சினையை மத்திய, மாநில அரசுகள் மனிதாபிமான பிரச்சினையாகக் கருதி நிறைவேற்றித்தர வேண்டுமென்று திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத் தின் முதல் மாநாடு சென்னை பெரம்பூர் ஆர்.கே. மகாலில் 17.12.2011 சனிக்கிழமை அன்று இரவு நடைபெற்றது.
பொதுச்செயலாளர் எம்.அழகர்சாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.நடனசிகாமணி, பொருளாளர் என்.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பொதுச் செயலாளர் ஆவின் கே.கனகராஜ் வரவேற்புரை யாற்றினார். துணை தலைவர் எஸ்.மோகன் ராம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங் கினார். துணைத் தலைவர் ஆர்.சிவராமன் மாநாட்டு தீர்மானங்களை விளக்கி உரையாற்றினார்.
உரையாற்றியோர்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.எஸ். அழகிரி, டி.கே.எஸ்.இளங்கோவன், பி.விஸ் வநாதன்,  எஸ்.ஜானகிராவ் (பொதுச் செயலாளர், போக்குவரத்து கழக தொழி லாளர் ஓய்வூதியர் சங்கம், ஆந்திரா), வி.டி. துர்க்கையா (துணைத் தலைவர் தேசிய பெடரேசன், கருநாடகா), உதய்பட் (பொதுச் செயலாளர்) ஆகியோர் ஓய்வூ தியர்களின் பொருளாதார நிலையினை விளக்கியும், ஓய்வூதியம் உயர்த்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியு றுத்தி உரையாற்றினார்கள்.
தமிழர் தலைவர் உரை
தமிழர் தலைவர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விழாப் பேருரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில் குறிப் பிட்டதாவது:-
இங்கே நடைபெறக் கூடிய மாநாட் டில் மிகுந்த சிரமப்பட்டு கொண்டு இருக்கும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் கோரிக்கைகளை மனிதாபிமானத்தோடு அணுகி தீர்வு காண வேண்டி மாநாடு நடத்துகிறார்கள். நமது நாட்டில் அறவழி யில் ஜனநாயக முறையில் போராடக் கூடியவர்களை விளம்பரப்படுத்துவ தில்லை. அரசுகளும் கண்டு கொள்வ தில்லை. திடீரென்று சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தால்தான் விளம் பரப்படுத்தப்படுகிறது. அரசு பலவீனமாகக் இருக்கக்கூடாது
அரசு அதிகாரிகள் கவனம் செலுத் துகிறார்கள் என்கிற போக்கு பெருகி வருவது ஆபத்தான ஒன்றாகும். உங் களது ஜனநாயக ரீதியான போராட் டத்தை அரசு பலவீனமாக கருதக் கூடாது. உங்களுடைய நியாயமான போராட்டத்திற்கு நாங்கள் எப்போ தும் ஆதரவாக இருப்போம். உங்களு டைய தீர்மானங்கள் எல்லாம் மனிதா பிமானத்தோடு அணுக வேண்டிய தீர்மானங்களாகும்.
சிங்கப்பூர் போன்ற சிறிய நாடு களிலெல்லாம் ஓய்வூதியர்கள், மூத்த குடிமக்களுக்கு ஏராளமான சலுகை கள் வழங்கி சிறப்பாக செய்து வரு கிறார்கள்.
இங்கே வந்திருக்கக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் இவர்களது நியாயமான தீர்மானங்களை உரியவர்களிடம் நேரில் சென்று வலியுறுத்தி அதனை நிறைவேற்றித் தரவேண்டும். அந்த வகையிலே நாங்கள் உங்களுக்கு உறு துணையாக இருப்போம். ஓய்வூதிய தாரர்களது தீர்மானங்களை மத்திய, மாநில அரசுகள் மனிதாபிமான பிரச் சினையாக கருதி நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கே.எஸ்.அழகிரி
விழாவில் உரையாற்றிய கே.எஸ். அழகிரி தமது உரையில், உங்கள் கோரிக்கைகளை எடுத்து வைக்க வேண்டிய இடத்தில் எடுத்து வைத்து நிறைவேற்ற உறுதுணையாக இருப் போம். உங்கள் கோரிக்கைகள் நிறை வேற்றினால் எங்களுக்கு உங்கள் மூலமாக வாக்கு கிடைக்கும் என்ற ஆசை உண்டு. ஆனால் எதையும் எதிர்பார்க்காமல் உங்களுக்கு குரல் கொடுக்க கூடியவர் அய்யா வீரமணி அவர்கள். தந்தை பெரியாருக்குப் பிறகு, காமராசருக்குப் பிறகு நமக் கெல்லாம் ஒருவர் இருக்கிறார் என் றால் ஆசிரியர் அவர்கள்தான். உங்கள் கோரிக்கைகள் நிறைவேற துணை புரிவோம் என எடுத்துக் கூறினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. மத்திய அரசு 16.11.1995 முதல் வருங்கால வைப்பு நிதியின் மூலம் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை சட்டமாக அமல்படுத் தியது. இத்திட்டம் அமுல்படுத்தி 16 ஆண்டுகளில் 1996இல் 4 சதவிகிதம், 1998இல் 5.5 சதவிகிதம், 1999இல் 4 சதவிகிதம், 2000இல் 4 சதவிகிதம் ஆக மொத்தம் 17.5 சதவிகிதம் மட்டுமே உயர்த்தி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விலைவாசியோ கடந்த 16 ஆண்டுகளில் 600 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. பணத்தின் மதிப்பு குறைந்து 500க்கும் கீழாக 16 லட்சம் பேரும் ரூ.501லிருந்து 1000 வரை 14 லட்சம் பேரும் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். மாநில அரசு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.3050 என்றும் மத்திய அரசின் குறைந்தபட்ச ஓய் வூதியம் ரூ.3500 என்று வழங்கி வரு கிறது. அதிக அளவாக இன்றைய நிலையில் மாநில அரசு ஓய்வூதியமாக ரூ.67,000 என்றும் மத்திய அரசில் ஓய்வூதியம் பெறுவர்கள் ரூ.72,000 பெற்று வருகிறார்கள். எனவே தொழி லாளர்களின் குறைந்தபட்ச அடிப் படை தேவைகளை கருத்தில் கொண் டும், தற்போது நிலவி வரும் விலை வாசியினை கருத்தில் கொண்டும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.3000 வழங்க வேண்டுமென இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
2. தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டம் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் வங்கித் துறை ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறுகின்றபோது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி என்ற அடிப்படையில் கணக்கிட்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு அகவிலைப் படி உயர்வதுபோல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் அகவிலைப்படி ஆண்டுக்கு இரு முறை உயர்த்தி வழங்கப்படுகிறது. அதனால் விலை வாசி உயர்வு இத்திட்டத்தின்படி ஓய்வூதியம் பெறுபவர்களை பாதிப்ப தில்லை. ஆனால் தொழிலாளர் மற்றும் நிருவாக பங்களிப்புடன் 16.11.1995 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் மேற்குறிப்பிட்ட அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் நிர்ணயம் செய்யப்படுவது போல் இத்திட்டத் தின் கீழ் வரும் தொழிலாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்படுவதில்லை. எனவே இவ் ஓய்வூதிய திட்டம் அடிப் படை ஊதியம் மற்றும் அகவிலைப் படி என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதன் அடிப் படையில் மத்திய மாநில அரசு ஓய் வூதியதாரர்களுக்கு வழங்கப்படுவது போல் ஆண்டுக்கு இரு முறை விலை வாசி உயர்வுக்கு ஏற்றாற்போல் அக விலைப்படியும் உயர்த்தித் தரவேண்டு மென மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
3. மத்திய மாநில அரசில் ஓய்வூதி யம் பெறும் தொழிலாளர்கள் தனது ஓய்வூதிய மூலதனத்திலிருந்து திட்டத் தின் சட்ட விதிகளுக்குட்பட்ட ஒரு பகுதி தொகையினை (கம்டேசன்) முன் பணமாக பெற்றுக் கொள்ளலாம். இம் முன் பணத்தொகையினை நிர்ண யம் செய்யப்பட்ட காலக் கெடுவிற் குள் ஓய்வூதியதாரர், தான் பெறுகின்ற ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்ய ஒப்புதல் அளிக்க அனுமதிக்கப்படு கிறது. முன் பணத் தொகையை முழு மையாக, குறிப்பிட்ட காலக் கெடு விற்குள் பிடித்தம் செய்யப்பட்ட பின்பு ஓய்வூதிய தொகை முழுமையாக வழங்கப்படுகிறது. ஆனால் இ.பி.எஸ். 1995 திட்டத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் பெறுபவர்கள் மூலதனத்தி லிருந்து ஒரு பகுதியை முன் பணமாக (கம்டேசன்) பெற்று அதனை குறிப் பிட்ட காலக் கெடுவிற்குள், தான் பெறுகின்ற ஓய்வூதியத்திலிருந்து திரும்ப செலுத்திய பின்னரும் முழு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. எனவே ஓய்வூதிய சட்டவிதிகளின்படி மூலதனத்தில் பெற்ற தொகையினை முழுமையாக திரும்பச் செலுத்திய பின்னர் முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு கேட்டு கொள்கிறது.
4. இ.பி.எஸ். 1995 ஓய்வூதிய திட்டத் தின்படி ஒரு ஊழியர் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்ற நாளில் பெற்ற அடிப்படை ஊதியத்தில் ரூ.6500 மட்டுமே ஓய்வூதியத்திற்கான தகுதி ஊதியமாக கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் ஓய்வூதியம் வழங் கப்படுகிறது. ஆனால் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் நாளில் பெறுகின்ற அடிப் படை ஊதியம் மற்றும் அகவிலைப் படியுடன் கூடிய மொத்த தொகையில் சரிபாதி ஓய்வூதியத்திற்கான தகுதி ஊதியமாக கணக்கிடப்படுகிறது. எனவே இ.பி.எஸ். 1995 ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு உச்சவரம்பு தொகை யான ரூ.6500 என்பதை நீக்கி அவர்கள் ஓய்வு பெறும் நாளில் பெறப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் ஓய் வூதியம் பெறுவதற்கான தகுதி ஊதிய மாக நிர்ணயம் செய்ய வேண்டுமாய் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
ஓய்வூதியர்கள் மாநாட்டில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகிறார் (சென்னை - பெரம்பூர், 17.12.2011)
5. வருங்கால வைப்பு நிதியின் பங்காக தொழிலாளர்களுக்கு கொடுக் கக்கூடிய நிறுவனங்களின் பங்கு 8.33 சதவிகிதமும், மய்ய அரசினால் வழங் கக்கூடிய 1.16 சதவிகித பங்களிப்பினை யும் மூலதனமாகக் கொண்டுதான் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. உறுப்பினரோ அல்லது துணைவரோ மரணமடைய நேரிட்டல் - உறுப்பின ரின் தேர்வுப்படி அவரின் மூலத னத்தை அவர்களின் வாரிசுகளுக்குத் தரவேண்டும். ஆனால் கடந்த 26.9.2008 முதல் மூலதன திருப்பம் என்ற இத்திட்டத்தினை நிறுத்தி விட்டது. அதுவும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தால் - மய்ய நிருவாகக் குழு உறுப்பினர்களின் கருத்தினையும் கேட்காமல் நடை முறைப்படுத்திவிட்டது. இந்த மூல தனம் என்பது தொழிலாளியின் பண மாகும் என்பதை அரசுக்கு நினை வூட்டுவதுடன், தொழிலாளியின் மூலதனத்தினை திருப்பி, தரவேண்டு மானால் அவர்கள் பெற்று வருகின்ற மாத ஓய்வூதியத்தில் 12 சதவிகிதம் பிடித்தம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கையினை எடுக்கும்படியும் இந்திய அரசினை கேட்டுக்கொள் கிறது.
6. மத்திய மாநில அரசுகளின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்காக தொழிலாளர் களின் பங்களிப்பு மற்றும் நிறுவனங் களின் பங்களிப்புடன் கூடிய மூல தனத்தில் ஈ.எஸ்.அய். மருத்துவ வசதி திட்டம் நடைமுறையில் செயல்படுத் தப்பட்டு வருகிறது. ஆனால் இ.பி.எஸ். 1995 திட்டத்தின் அடிப்படையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஈ.எஸ்.அய். மருத்துவமனையில் சிகிச்சை பெறவோ அல்லது நோயின் தன்மைக் கேற்ப அரசு நிர்ணயம் செய்துள்ள சிறப்பு மருத்துவமனைகளில் மருத் துவ வசதி செய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆகவே மத்திய மாநில அரசுகளில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மருத் துவ வசதிக்கான செலவினத்தை அரசே ஏற்றுக் கொள்வதுபோல் இ.பி.எஸ். 1995 திட்டத்தின்படி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கும் ஈ.எஸ்.அய். மருத்துவமனை மூலமாகவோ அல் லது தனியார் மருத்துவமனை மூலமா கவோ மருத்துவ வசதி பெறுவதற்கான வழி வகையினை செய்திட வேண்டு மாய் மத்திய அரசினை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
7. மத்திய அரசின் நிருவாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் வருங்கால வைப்பு நிதி அலுவல கங்களில் மண்டல மற்றும் துணை மண்டல அலுவலகங்களில் முறை யான கணக்குகள் பராமரிக்கப்படுவ தில்லை. உதாரணமாக 8ஆவது மதிப் பீட்டு அறிக்கை 2003-2004இன்படி அன்றைய தேதியிலிருந்த உறுப்பினர் களின் எண்ணிக்கை 2,80,90,458 உறுப்பினர்கள். ஆனால் மண்டல அலுவலகங்கள் தெரிவித்த கணக் கின்படி 1,47,30,730 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இது மொத்த உறுப் பினர்களில் 52 சதவிகிதம் மட்டுமே. இதிலும் முழுமையான தகவல்கள் 35,84,342 உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மொத்த உறுப்பினர்களில் 12 சதவிகித உறுப் பினர்களுக்கு மட்டுமே முறையான கணக்குகள் பராமரிக்கப்படுவதாக தெரிகிறது. இதன் அடிப்படை யில்தான் 2003-2004இல் மதிப்பிட்டு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தொழிலாளர்களின் ஓய்வூதிய மூலதனத்திலிருந்து திரும்பச் செலுத்தும் முன் பணம் திட்டத்தினை 26.9.2009 முதல் மத்திய அரசு நிறுத்தி விட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் வழங்கப் பட்டுள்ளது. ஆனால் பல துணை மண்டல அலுவலகங்களில் 2010-2011 வரை கம்டேசன் வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஓய்வு பெற்ற தொழிலா ளர்களின் ஓய்வு பெறும் நாளில் அவரது கணக்கில் ஓய்வூதியத்திற்கான மூலதனத்தின் தொகையின் அளவை வருங்கால வைப்பு நிதி அலுவல கங்கள் தெரிவிக்க மறுக்கின்றன. இதனால் தொழிலாளர்களின் வருங் கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய திட்டத்திற்கான நிதி விவரங்கள் சரியாக பராமரிக்கவில்லை என்பது கண்கூடாக அறியமுடிகிறது. இக் குறைபாட்டினை நீக்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
8. மத்திய அரசு 6ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் படி ஊழியர் களுக்கு 1.1.2006 முதல் ஊதியம் நிர்ணயம் செய்து 1.1.2007 முதல் பணப் பலன் வழங்கப்பட்டு அதன் அடிப் படையில் பணிக்கொடையும் ரூ.10 லட்சம் வரை வழங்க அனுமதி வழங் கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய மாநில அரசுகளை சார்ந்த பொதுத் துறை நிறுவன ஊழியர்கள் 6ஆவது ஊதிய குழுவின் முழு பரிந்துரையை யும் ஊழியர்களுக்கு வழங்கிய நிலை யில் பணிக்கொடை தொகையினை மட்டும் 29.4.2010க்கு பின்னர் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கிட ஆணை வழங்கியுள்ளது. இதன் காரணமாக 1.1.2006 முதல் 28.4.2010 வரை ஓய்வு பெற்றவர்கள் 6ஆவது ஊதிய குழு பரிந்துரையின் படி பணிக்கொடை அதிகபட்சமாக 10 லட்சம் பெற முடியாமல் ஊதிய குழு பரிந்துரைக்கு முன்னர் அமலில் இருந்த ரூ.3.5 லட்சம் மட்டுமே பணிக் கொடையாக பெற்று உள்ளனர். பணிக்கொடை தொகை வழங்கல் தொடர்பாக பாரபட்சமான இரண்டு விதமான ஆணையினை மாற்றி அமைத்து அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 1.1.2006 முதல் அமல்படுத்தப்பட்ட பணிக்கொடை தொகையினை ரூ.10 லட்சத்தை உச்சவரம்பாக கணக்கிட்டு வழங்க தேவையான திருத்தப்பட்ட ஆணை வழங்கிட மத்திய அரசினை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
9. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தினால் 1971 முதல் நடைமுறைபடுத்தப்பட்டு வந்த குடும்ப ஓய்வூதிய திட்டத்தில் உறுப் பினராய் இருந்தவர்கள் 16.11.1995 முதல் முழுமையான ஓய்வூதியத் திட்டமாக மாற்றப்பட்டபொழுது, பல்வேறு காரணங்களால் இத்திட்டத்தில் சேர முடியாமல் போனவர்களுக்கு (போதிய கால வாய்ப்பு இ.பி.எஃப். நிறுவனத்தினால் கொடுக்கப்படாத நிலையில்) மீண்டும் இத்திட்டத்தில் இணைந்து ஓய்வூதியம் பெறுவதற்கு - ஒரு வாய்ப்பினை வழங்குமாறு தொழி லாளர் நலத்துறை அமைச்சரையும், இந்திய அரசையும் கேட்டுக்கொள் கிறது. உதாரணமாக என்.எல்.சி. ஓய்வூ தியர் சங்கம் சென்னை உயர்நீதிமன் றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கில் உயர்நீதின்றம் இவர்களின் கோரிக் கையினை மறு பரிசீலனைக்கு எடுத் துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள் ளது. ஆனால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. எனவே மத்திய அரசு - குறிப்பாக தொழிலா ளர் நல அமைச்சர் இதில் கவனம் செலுத்தி வாய்ப்பினை வழங்கிட நடவடிக்கை எடுக்கும்படி இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு சென்னை மண்டல செயலாளர் ஞானசேகரன், நெய்வேலி ஜெ.ஜெயராமன், ஆவடி பா.தென்ன ரசு, செம்பியம் கி.இராமலிங்கம், தங்க மணி, தனலட்சுமி, டெய்சி மணி யம்மை, ஜீவா, பெரம்பூர் தியாக ராசன், கோபால், ராஜி, ரவிச்சந்திரன், வாசு, மணியம்மை, பிரபு உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். ஏராளமான தோழர்கள் இந்தியா முழுவதும் இருந்து வருகை தந்திருந் தனர். விழாவிற்கு வருகை தந்த பல் வேறு மாவட்ட ஓய்வூதியதாரர்கள் தமிழர் தலைவருக்கு சால்வை அணி வித்தும், மாலை அணிவித்தும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை உற்சாகமாக வரவேற்றனர்.
மாபெரும் பேரணி
பெரம்பூர் திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகிலிருந்து காலை 10.30 மணிக்கு உதவி பொதுச்செயலாளர் எம்.வீரமுத்து தலைமையிலும், ஜி.தாமோதரன், கே.கலியபெருமாள் ஆகியோர் முன்னிலையிலும், கோரிக்கை விளக்க பேரணியினர் புறப்பட்டு அரங்கத் திற்கு வந்தனர். பேரணியை எம்.எல்.யு. சங்க செயலா ளர் டி.புகழேந்தி துவக்கி வைத்தார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...