Monday, December 19, 2011

கீதைக்குத் தடை!


கீதைக்குத் தடை!


இஸ்கான் என்று அழைக்கப்படும் ஹரே கிருஷ்ணா அமைப்பைச் சேர்ந்த பக்தி வேதாந்த சாமி என்பவரால் எழுதப்பட்ட உள்ளபடியே கீதை என்ற நூலின் ருசிய  மொழிபெயர்ப்பு நூலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப் பட்ட வழக்கில் ருசியாவில் உள்ள சைபீரிய நீதி மன்றம் இடைக்காலத் தடை ஒன்றை விதித்துள் ளது - பெரிதும் வரவேற்கத்தக்கது - நிரந்தர தடை விதிக்கப்படுவதே சாலச் சிறந்ததாகும்.
சமுதாயத்தின் நல்லிணக்கத்தை சிதைக்கக் கூடியது, வன்முறைக் கலாச்சாரத்தைத் தூண்டக் கூடியது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து டோமாஸ் பல்கலைக் கழக நிபுணர் களின் கருத்தையும் நீதிமன்றம் கேட்டுள்ளது.
அந்தப் பல்கலைக் கழகம் கூறிய கருத்தின் அடிப்படையில்தான் இந்த ஆணை வழங்கப் பட்டுள்ளது. இஸ்கான் என்று கூறப்படும் ஹரே கிருஷ்ணா அமைப்பின் பிரச்சாரமும் தடைப் படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.
கீதை கொலைகார நூல் என்பது வெளிப்படை! காந்தியாரைக் கொலை செய்த ஆர்.எஸ்.எஸ். பேர் வழியான நாதுராம் கோட்சேகூட கீதையின் சுலோகத்தை எடுத்துக்காட்டிதான் காந்தியாரைச் சுட்டது நியாயம் என்று வாதாடினான் என்பது இந்த நேரத்தில் நினைவூட்டுவது மிகவும் பொருத்த மானதாகும்.
கீதையில் கூறப்பட்டுள்ள உண்மையான கருத்தினை வெளிப்படுத்தாமலேயே, உண்மைக்கு மாறான பிரச்சாரத்தை பார்ப்பனர்களும் அவர்களின் - அடி வருடிகளும் உலகம் பூராவும் பரப்பி வருகிறார்கள். அறக்கட்டளைகளை ஏற்படுத்தி மலிவு விலையில் விற்பனை செய்தும் வரு கிறார்கள்.
தன் சுற்றத்தார்களான துரியோதனாதியர்களை யுத்தத்தில் கொன்று குவிக்க அர்ச்சுனன் தயங்கியபோது கொலை செய் அழியப் போவது அவர்களின் உடல் தானே தவிர ஆத்மா அல்ல; ஆத்மாவுக்கு அழிவு இல்லை என்று துணிச்சலை ஊட்டுகிறான் கடவுள் என்று கூறப்படும் கிருஷ்ணன்.
ஆத்மா என்ற ஒன்று இருக்கிறதா? அதற்கு என்ன நிரூபணம்? இல்லாத ஒன்றைக் கற்பித்துப் பச்சையான படுகொலைகளைச் செய்யத் தூண்டு வதுதான் தெய்வீக நூலா?
கீதை சொல்லுவதை ஏற்றுக் கொண்டால் இப்போது கொலைக் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் எப்படி குற்றவாளி ஆவார்கள்?
அவர்கள் எதிரியின் உடல்களைத்தானே அழித்தார்கள் - ஆத்மாக்களை அல்லவே!
கீதையின்மீது சத்தியம் செய்து நீதிமன்றத்தில் வாதாடினாலும் இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா?
கீதை கொலைக்கு வக்காலத்து வாங்கும் நீதி கெட்ட நூல் மட்டுமல்ல; பிறப்பின் அடிப்படையில் ஜாதியை நிலை நிறுத்தும் மோசமான - மனித குல விரோத நூலும் ஆகும்.
நான்கு வருணங்கள் (பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரர்கள்) என்னால் உண்டாக்கப் பட்டவை அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும்; அதனை மாற்றிச் செயல்பட வைக்க  அந்த வர்ணதர்ம உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது (அத்தியாயம் - 4, சுலோகம் - 13) என்று கீதையில் கிருஷ்ணன் கூறுவதாகக் கூறப்பட்டுள்ளது என்றால், பிறப்பிலேயே பேதம் கற்பிக்கும் இந்த நூலை விட்டு வைக்கலாமா?
அது மட்டுமல்ல; பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும், பாவ யோனியிலிருந்து பிறந்த வர்கள். (அத்தியாயம் 18, சுலோகம் 44) என்று கூறுவது தான் கீதை.
எந்த வகையில் பார்த்தாலும் கீதை என்ற நூல் மனித குலத்தின் மகா மகா எதிரி.
இந்த உண்மையைத் தெளிவாக உணர்ந்து ருசியாவில் கீதை தடை செய்யப்பட்டது வரவேற்கத் தக்கது. இடைக்காலத் தடை மட்டுமல்ல நிரந்தர மாகவே தடை செய்யப்பட வேண்டும்.
உலகத்தில் ஒரு நாடாவது உண்மையை புரிந்து கொண்டு தடை செய்ததைப் பாராட்ட வேண்டும்.
இந்தியாவிலும் இது செய்யப்பட்டால், அது மனித குலத்துக்குச் செய்யப்பட்ட மகத்தான தொண்டாகக் கருதப்பட  முடியும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...