Sunday, December 18, 2011

பூமியின் வடிவம் எது என்று இடைக்கால மக்கள் கருதியிருந்தனர்?


கி.மு. நான்காம் நூற்றாண்டு முதற்கொண்டு பூமி தட்டையான வடிவம் கொண்டது என்று எவருமே நம்பி இருக்கவில்லை.
பூமி தட்டையானது என்ற நம்பிக்கை உண்மையில் 19 ஆம் நூற்றாண்டு வரை தொடக்கம் பெற்றிருக்கவில்லை. வாஷிங்டன் இர்வினின் கிறிஸ்டபர் கொலம்பசின் வாழ்க்கையும் பயணங் களும் (The Life and Voyages of Christopher Columbus by Washington Irving) என்ற நூல்தான் இத் தவறைச் செய்த குற்றவாளி. உலகம் உருண்டை என்பதை நிரூபிக்கவே கொலம்பஸ் தனது பயணத்தை மேற்கொண்டார் என்று அதில் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரைவில் கோபம் கொள்ளும் குணம் கொண்ட  சாமுவேல் பிர்லி ரோவ்போதம் என்ற ஆங்கிலேயரால் 1838 இல் முதன் முதலாக பூமி தட்டை வடிவமானது என்ற கருத்து விதைக்கப்பட்டது. அவர் பதினாறு பக்கம் கொண்ட  (Zetetic  Astronomy.  A Description of Several Experiments which Prove that the surface of the sea is a Perfect Plane and that the Earth is Not a Globe’ என்ற கட்டுரையை வெளியிட்டார். Zetetic   என்னும் சொல் தேடு அல்லது விசாரி என்ற பொருள் கொண்ட  Zetein என்ற கிரேக்க சொல்லில் இருந்து தோன்றியது. Universal Zetetic  Sopciety யின் பெயரை  International Flat Earth Society என்று மாற்றினார்.
சந்திரனுக்கு விண்வெளிக் கலங்களை 1960 இல் அனுப்பிய நாசா  NASA விண்வெளி ஆய்வுத் திட்டத்தினால் இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட்டிருக்க முடியும். என்றாலும் ஷென்டான் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் ஒளிப்படத்தில் அது கூம்பு வடிவில் இருப்பதைக் கண்ட அவர், இது போன்ற ஒளிப்படத்தினால் பயிற்சியற்ற கண்களை  எவ்வாறு ஏமாற்றமுடியும் என்று காண்பது எளிதானதே என்று குறிப்பிட்டார்.  ஹாலிவுட் திரைப்படங்களைப் போன்ற கட்டுக் கதைதான் சந்திரனில் அப்பல்லோ விண்கலங்கள் இறங்கியதும் என்றும், இக்கதையை ஆர்தர் சி. கிளார்கி எழுதினார் என்றும்  கூறப்பட்டது.  இந்த அமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கை பெரும் அளவில் அதிகரித்தது.
தனக்குப் பின் இந்த அமைப்பின் வாரிசை நியமித்த பின்னர் ஷென்டான் 1971 இல் இறந்தார். வயது முதிர்ந்த, கவர்ச்சி மிக்க சார்லஸ் கே. ஜான்சன் என்பவர் அதன் பின் இந்த அமைப்பின் தலைவரானார். அறிவியலுக்கு எதிரான ஒரு பெரிய இயக்கத்தை உள்நாட்டில் உருவாக்கிய அவர் அதற்கு ஆதரவினைத் திரட்டினார். 1990இல் இந்த அமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கை 3,500 என உயர்ந்தது.
மோஜாவி பாலைவனத்தின் பெரும் பரப்பில் வாழ்ந்து பணியாற்றி வந்த ஜான்சன்,   வடதுருவத்தை மய்யமாகக் கொண்டு, 150 அடி உயரம் கொண்ட பனிச்சுவரால் சூழப்பட்ட,  ஒரு வட்டத் தகடு வடிவம் கொண்டது  நாம் வாழும் பூமி என்று கூறினார். சூரியனும், சந்திரனும் ஒவ்வொன்றும் 32 மைல் விட்டம் கொண்டவை என்றும் நட்சத்திரங்கள் பாஸ்டனில் இருந்து சான்பிரான்சிஸ்கோ இருக்கும் தொலைவில் இருப்பவைதான் நட்சத்திரங்கள் என்றும் கூறினார்.
ஜான்சனின் ரகசிய பதுங்குமிடம் 1995 இல் எரிக்கப்பட்டது. அத்துடன் அந்த அமைப்பின் ஆவணக் காப்பகமும், உறுப்பினர் பட்டியலும் சேர்ந்து எரிந்தன. 2001 இல் ஜான்சன் இறந்தார். அந்த நேரத்தில் அந்த அமைப்பு ஒரு சில நூறு உறுப்பினர்களை மட்டுமே கொண்ட அளவில் சுருங்கி விட்டது. இன்று வளைதளத்தில் மட்டுமே இந்த அமைப்பு எஞ்சியிருக்கிறது. பதிவு செய்யப்பட்ட 800 பேர் இந்த வளைதளத்தைப் பயன்படுத்துகின்றனர்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’   பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...