Tuesday, December 20, 2011

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி . . .


மார்கழி மாதம் பிறந்து விட்டது. ஆரம்பித்து விட்டார்கள் பஜனை களை.
வைஷ்ணவர்கள் திருப் பாவைக் கடையையும் சைவர்கள் திருவெம் பாவைக் கடையையும் விரித்து விட்டார்கள்.
பார்ப்பன ஏடுகள் ஆண்டாள் பாடலையும், மாணிக்க வாசகர் பாட லையும் வெளியிட்டு பஜனை பாட ஆரம்பித்து விட்டன.
கடவுளும், மதமும் கெட்டாக வேண்டுமா னால், பார்ப்பான் கெட் டாக (இல்லாமல் போக) வேண்டும். அவன் கெட்ட இடம்தான் கடவுள், மதம் கெட்ட இடமாகும். (விடு தலை 24.4.1967) என்றார் தந்தை பெரியார்.
பார்ப்பனர்கள் இந்தப் பாழாய்ப் போன கடவுளை யும், குட்டிச் சுவர் மதத் தையும் ஏன் கட்டி அழு கின்றனர் என்பது இப் பொழுது புரிகிறதா? தினமலர் ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்ற பாடலை வெளியிட்டு பொழிப்புரையையும் வழங்கியுள்ளது.
ஓங்கி உலகளந்த அந்த உத்தமன் யார்? அவன் ஓங்கி உலகளந்தது என்பது பற்றிய கதை என்ன?
மூன்று உலகங்களையும் நலமுடன் ஆட்சி செய்து கொண்டிருந்தவன் மாவலிச் சக்ரவர்த்தி. அந்த மூன்று உலகங்களையும் ஆளுவ தற்கு அதிகாரத்தைக் கொடுத்தவனோ சிவன்.
மாவலிச் சக்ரவர்த்தி நல்லாட்சி புரிந்தானாம். அது தேவர்களுக்குப் பொறுக்கவில்லையாம். விஷ்ணுவிடம் முறையிட் டார்களாம். விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து (குள்ளப்பார்ப்பான்) யாகம் செய்ய மாவலியிடம் மூன் றடி மண் கேட்டானாம். வாரி வழங்கும் வள்ள லான மாவலியோ அக் கணமே அளித்தானாம்.
அந்தக் குள்ளப் பார்ப் பானாகிய விஷ்ணுவோ ஆகாயம் வரை உயர்ந்து ஓர் அடியால் பூமியையும், ஓர் அடியால் விண்ணையும்  அளந்து மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று கேட்டானாம். (ஏன் அவாள் புராணத்தில் ஏழு  லோகம் இருக்கிறதே. அவையெல்லாம் வசதியாக மறந்து போய்விட்டதோ!)
மாவலி மன்னனோ தன் தலையைக் காட்டினானாம்.  விஷமியான அந்த விஷ்ணு தம் காலை மாவலியின் தலையில் வைத்து அழுத் தினானாம்.
கதை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? நல்லாட்சி செய்பவனை அழிப்பது தான் கடவுள் வேலையா? அதுவும் சூழ்ச்சியாக அழிப் பதுதான் கடவுள் யோக் கியதையா?
சரி. . . மூன்று லோகத் தையும் மாவலி ஆள்வதற்கு அருள் பாலித்து அதிகாரம் கொடுத்தவன் சிவன் அல் லவா? சிவனால் அருள் பாலிக்கப்பட்டவனை விஷ்ணு எப்படி அழிக்கலாம்?
ஒன்று புரிகிறதா? இது சிவனை முதற்கடவுளாக ஏற்றுக் கொண்ட கோஷ் டிக்கும்,  விஷ்ணுவை முதல் கடவுளாக ஏற்றுக் கொண்ட நாமதாரிக் கோஷ்டிக்கும் சிண்டுமுடிச் சண்டை என்று புரிகிறதா?
இந்தக் குப்பையைக் கிளற மார்கழி மாதம் முழு வதும் பாடப்போகிறார்கள்.
பெண்களை நீராட அழைக்கிறார்களாம். அதற்குத்தான் இந்தப் பாட்டுகள். தேர்வு நேரம் பிள்ளைகளைப் படிக்க விடாமல் கோவில்களில் ஒலி பெருக்கி வைத்து, இந்தக் குப்பைகளை ஒலிபரப்புகிறார்கள். சரி. . . 
இந்த ஒலி பெருக் கியைக் கண்டுபிடித்த வன் விஷ்ணுவா, சிவனா?  ஒலி பெருக்கி வைத்து கோவில் களில் பஜனைப் பாடல் களை ஒலி பரப்பிட எந்த ஆகமத்தில் கூறப்பட்டு இருக்கிறது?
பதில் சொல்வார்களா பஜனைப்பாடிகள்?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...