Tuesday, December 20, 2011

மது (சாராயம்) நம் மூளை மீது எந்த வகையான பாதிப்பை ஏற்படுத்துகிறது?


சாராயம் மூளை செல்களை சாகடிப்ப தில்லை. புதிய செல்கள் உருவாவதை அவை தாமதப்படுத்த மட்டுமே செய்கின்றன.
சாராயப் பொருள்களைத் தடை செய்ய வேண்டும் என்று 19 ஆம் நூற்றாண்டில் கோரிய சுயகட்டுப்பாட்டுப் பிரச்சாரகர்கள் காலத்திலிருந்தே சாராயம் மூளையின் செல்களை அழிக்கிறது என்ற கருத்து நிலவி வந்தது. ஆனால் இந்தக் கூற்றுக்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை.
சாராயம் குடிப்பவர்கள், குடிக்காத வர்கள் இரு வகை மனிதர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளைச் சோதனை செய்து பார்த்தபோது, மூளையில் இருக்கும் மொத்த செல்களின் எண்ணிக்கையிலோ அல்லது இரண்டு குழுக்களிடையே உள்ள நியூரான்களின் அடர்த்தியிலோ எந்த பெரிய வேறுபாட்டையும் காண இயலவில்லை.
அளவுடன் சாராயம் குடிப்பது அறியும் ஆற்றல் அதிகரிக்க உதவுகிறது என்று மற்ற சில ஆய்வுகள் காட்டியுள்ளன. சாராயம் கொடுக்கப்பட்ட எலிகளில் அதிக எண்ணிக்கையிலான மூளை செல்கள் வளருகின்றன என்பதை சுவீடன் நாட்டு ஆய்வு ஒன்று காட்டியுள்ளது.
சாராயம் அருந்துவது உடலுக்கு, மூளைக்கும் கூட,  மிகுந்த கேட்டினை விளைவிக்கும். ஆனால் இந்தப் பிரச்சினைகளுக்கும் செல்கள் இறந்துபோவதற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. சாராயம் மூளை செயல்படும் நடைமுறையில் குறுக்கிடுகிறது என்று கூறுவதே சரியாக இருக்கும்.
உடலில் ஏற்படும் நீர்க்குறைவால் மூளை சுருங்கிப் போவதால் மது அருந்திய நாளைக்கு அடுத்த நாளில் தலை வலியும் நோய்கண்டது போன்ற உணர்வும் (Hangover) ஏற்படுகிறது. மூளையை மூடியிருக்கும் மெல்லிய சவ்வில்தான் இந்த உணர்வு ஏற்படுகிறது; ஆனால் மூளையில் நீங்கள் ஒரு கத்தியை செருகினாலும், அது எதையும் உணர்வதில்லை. உங்களது மூக்குக்கும் மேல் உதட்டிற்கும் இடையில் உள்ள சிறு பள்ளம்தான், நீங்கள் பாட்டிலில் இருந்து பீர் குடிக்கும் போது, காற்றை சுவாசிக்க உங்களுக்கு உதவுகிறது.
புவிஈர்ப்பு விசை அற்ற ஓரிடத்தில் நீங்கள் ஒரு பீர் டப்பாவைத் திறந்தால், அதில் இருக்கும் மொத்த பீரும் ஒரே நேரத்தில் வெளியே வந்து கூம்பு வடிவிலான துளிகளாகக் காற்றில் மிதக்கும்.
நமது பால்வெளி வீதியில் நம் பக்கத்தில் பெரிய அளவில், 469 பில்லியன் கி.மீ. (288 பில்லியன் மைல்) அளவு கொண்ட மாபெரும் மெத்தனால் என்னும் சாராயம் மேகமாக,  இவ்வாறு மிதந்துகொண்டிருந்ததை நமது  விண்வெளி வீரர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.
நாம் குடிக்க விரும்புவது எதில் ஆல்கஹால் என்று அறியப்படும் தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் சாராயம்தான், மெத்தனால் நமக்கு விஷமாக ஆகிவிடும். என்றாலும், இந்த பிரபஞ்சம் இருப்பதால் நாம் குடிக்கவும் செய்யலாம் என்ற தத்துவத்துக்கு ஒரு வகையில் ஆதரவு அளிப்பதாகவும் இது உள்ளது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...