Sunday, December 18, 2011

சு(கு)ட்டிக் காட்டுவது நமது கடமை!


அ.இ.அ.தி.மு.க. அதிகாரப்ப பூர்வ மான நாளேடு Dr நமது எம்.ஜி.ஆர். அதன் ஆறாம் பக்கத்தில் அப்படிப் போடு... என்னும் தலைப்பில் கார்ட்டூன் செய்தி இன்று.
சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் பாராட்டியுள்ளதைப் பற்றிச் சிலாகித்து விட்டு, சட்டமன்ற கூட்டத்திற்கு திமுக தலைவர் கலைஞர் வராதது குறித்து ஒன்றும் சொல்லவில்லையே என்று குத்திக் காட்டியுள்ளது.
கடந்த ஆட்சியில் சட்டமன்றக் கூட்டங்களில் எத்தனை முறை செல்வி ஜெயலலிதா வந்தார்? முக்கியமான பிரச்சினைகளில் எல்லாம் கலந்து கொண்டாரா என்பது பற்றியெல்லாம்.. திராவிடர் கழகத் தலைவர்  சொல்லி யிருந்தால், இப்பொழுது இந்தக் கேள்வியையும் கேட்கலாம்.
இப்பொழுது அந்தப் பிரச்சினைகள் தேவையற்ற ஒன்றே.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழ்நாடு ஒன்றாகவே நிமிர்ந்து நிற்கிறது என்று காட்ட வேண் டிய தருணத்தில் இன்னார் வரவில்லை - என்றெல்லாம் எழுத ஆரம்பிப்பது தேவை யற்ற வேலை - இந்தப் பிரச்சினையில் ஒன்றாகவே இருக்கிறது தமிழ்நாடு என்கிற பலூனைக் குத்தி விட்டு வேடிக்கைப் பார்க்கும் சிறுபிள்ளைத்தனம்.
ஆப்பதனை அசைத்து விடும் வேலை ஆளும் கட்சிக்குத் தேவையா?
அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு, அவர் கொள்கைகளை ஆழத் தோண்டிப் புதைக்கும் இராசி பலனை முதலில் நமது எம்.ஜி.ஆர் ஏட்டில் நிறுத்துங்கள்! தாய்க் கழகம் பற்றிக் குறிப்பிட்டுள்ளதால், தாய்க்கழகம் என்கிற முறையில் இதனைச் சு(கு)ட்டிக் காட்டு வதும் நமது கடமையாகும்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...