Friday, December 16, 2011

வரவேற்கத்தக்கது!


முல்லைப் பெரியாறு அணை தொடர்பான தீர்மானம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டின் பொதுப் பிரச்சினைகளிலும் இந்த நிலை தொடரும் என்று எதிர்பார்க்கலாம். மற்ற மற்ற மாநிலங்களும் இதற்கு முன்பே இவ்வாறு தான் நடந்து கொண்டு இருக் கின்றன.
தீர்மானத்தின் சாரம்:
(1) முல்லைப் பெரியாறு அணை பாது காப்பாகவே இருக்கிறது. உடைந்து விடும் என்று சொல்லுவது உண்மையல்ல.
2) இன்றைய நிலையில் நீர் மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திட வேண் டும். எஞ்சிய பலப்படுத்தும் நடவடிக்கைகள் முடிக்கப்பட்ட பின் 152 அடிக்கு நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் (இது உச்சநீதி மன்றத்தின் ஆணையும் கூட!)
3) கேரள நீர்ப்பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு திருத்தச் சட்டம் - 2006 எனும் சட்டம் உச்சநீதிமன்றத்தை அவமதிக்கக் கூடியதாகும்.
4) அணையின் நீர் மட்டத்தினை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்ற கேரள சட்டப் பேரவையின் தீர்மானம் (9.12.2011) வருந்தத்தக்கது.
5) அணையின் பாதுகாப்பு மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
6) 2006 இல் கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் திருத்தப்பட வேண்டும்.
7) எந்த வகையிலும் தமிழ்நாடு அரசு தன் உரிமையை இந்தப் பிரச்சினையில் விட்டுக் கொடுக்காது.
இந்த ஏழினையும் உள்ளடக்கிய செறிவான தீர்மானம் இது என்பதில் எட்டுணையும் அய்யமில்லை.
தொழில் நுட்ப விற்பன்னர்களோ, உச்சநீதி மன்றமோ, நடுவண் அரசோ இந்தத் தீர்மானத் தின் எந்த வரிக்கு மாறாகக் கருத்துக் கொள்ள வாய்ப்பு அறவே கிடையாது.
இன்னும் சொல்லப் போனால் இந்த மூன்று அமைப்புகளால் ஏற்கனவே தெளிவாக சொல்லப் பட்டவைகளை உள்ளடக்கமாகக் கொண்டது தான் இந்தத் தீர்மானம்.
இந்தப் பிரச்சினையில் இரு மாநிலங்களிலும் பதற்றமான நிலை உருவாகி விட்டது. வன்முறைகள், தலை தூக்கி நிற்கின்றன.
கேரள மாநில முதல் அமைச்சரிடம், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இதுபற்றித் தெளி வாகவே கூறிவிட்டார்; போராட்டங்களை உடனடியாக நிறுத்தச் செய்யுங்கள் என்பது தான் அந்த அறிவுரை! தமிழ்நாடு அரசின் நிலைப்பாடும் அதுதான்; வன்முறைக்கு இடம் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
எவ்வளவு சீக்கிரம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நல்லதாகும்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை அமைதி யின்மை பதற்றம் நிலவினாலும் அணையின் நீர் மட்டம் குறைக்கப்பட்டதால் தென் மாவட்டங்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தப் பாசனத்தால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய அய்ந்து மாவட்டங்களில் 17 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யப்படுகிறது. மதுரை மாநகர மக்களுக்கு மட்டுமல்ல; சேடப்பட்டி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதி மக்களின் குடிநீர்ப் பிரச்சினையும் இந்த அணைப் பிரச்சினையில் அடங்கியுள்ளது.
இந்த மாவட்டங்களில் பயிராகும் காய்கறிகள் தான் கேரளாவையும் வாழ வைக்கிறது என்பதையும் கேரள மாநில அரசு மறந்து விடக் கூடாது.
மக்களைத் தவறான வழிக்குத் திசை திருப்பினால் பூமராங் (Boomerang) மாதிரி தன்னையே திருப்பித் தாக்கும் - எச்சரிக்கை!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...