Sunday, December 18, 2011

தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம்... (7)


திராவிடர் பெருந்தகை டி.எம். நாயர்
தொகுப்பாளர்: திராவிடர் இயக்க ஆய்வாளர் அருணாஅரசுகோ பாவேந்தன்

தென்னார்க்காட்டின்  ஜனத் தொகையோ 1891-ம் வருஷ ஸென்ஸஸில் 2,56,757 பேரும், அடுத்த ஸென்ஸஸில், 1,41,361 பேரும், 1911ம் வருஷ ஸென்ஸஸில் 4,05,118 பேரும் அதிகமாய் வ்ருத்தியாயிருக்கிறது. இந்த இரண்டு ஜில்லாக்களின் நிலைமையும் கிட்டத் தட்ட ஒரே மாதிரியாயிருக்க, ஒரு ஜில்லாவில் ஜனத்தொகை ரொம்ப அதிகரித்தும் மற்றொரு ஜில்லாவில் அப்படி ரொம்ப அதிகரிக்காமலும் இருக்கிறது. அதனால் என்ன தெரி கிறது? ஜனத்தொகை ரொம்ப அதி கரிக்கும் ஜில்லாவில் குடிகள் வெளி நாடுகளுக்குப் போகாதபடி சில தடங்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று சொல்ல வேண்டியிருக்கிறது.
ஜனத்தொகை அதிகமானதை இன்னும் ஆராய்ந்துப் பார்ப்பதால் இந்த விஷயம் நன்றாய் விளங்கும். 1891-லிருந்து 1901-வரையில் உள்ள கணக்கு களை எடுத்துக் கொள்வோம். தென் னாற்காட்டில் ஆண்கள் 70,000 பேர் அதிகமானார்கள். தஞ்சாவூரிலோ ஆண்கள் 78 பேர் தான் அதிகமானார் கள். இப்படி தஞ்சாவூரில் ஜனத்தொகை மிகவும் கொஞ்சமாய் அதிகரித்தது புருஷர்களில்தான். அதிலும் எத்தனை வயதில் ஜனங்கள் எவ்வளவு பேர் அதிகரித்திருக்கிறார்கள் என்று கணக்குகளைப் பார்த்தால் வயது வந்த ஆண்கள்தான் குறைவடைந்திருக்கும் என்று தெரியும். இப்படி ஜனங்களின் தொகை கொஞ்சமாய் வ்ருத்தியாவது கிராமங்களில்தான் என்பதல்ல. சென்னை ராஜதானில் 50,000-த்துக்கு மேற்பட்ட ஜனத்தொகையுடைய பட்டணங்களெல்லாம் 3,4 ஸென்ஸஸ் கணக்குகளின்படி ஜனத்தொகையில் அதிகரித்திருக்கின்றன. 1891ம் வருஷத்து ஸென்ஸஸில் தஞ்சாவூரும், 1901ம் வருஷத்து ஸென்ஸஸில் நாகப்பட்டண மும், 1911ம் வருஷத்து ஸென்ஸஸில் சேலமும் இப்படி அதிகரிக்கவில்லை. இந்த விஷயங்களையெல்லாம் கவனித் துப் பார்க்கும்போது தஞ்சாவூரிலுள்ள வயதுவந்த ஆண்கள் வெளிநாடு செல்வதாகத் தெரிகிறது. மேலும் அவர்கள் இப்படிச் செல்வது ராஜதானி முழுவதும் ஜனங்கள் வெளியேறுவதைப் போன்றதல்ல. இந்த ஜில்லாவில் பொருளாதார ஸம்பந்தமான சில காரணங்களால் இப்படி ஜனங்கள் வெளிநாடுகளுக்குப் போகிறார்கள் என்று தெரிகிறது.
இப்படி ஜனங்கள் வெளியேறுவதற்கு ஸரியான காரணம் என்னவென்றால், நீர்ப்பாசனமும், வடிகாலும், குறை பாடுள்ளனவாயிருப்பதால், விவசாயம் ஸரியான நிலைமையில் இல்லாமலி ருப்பதே, இப்படி ஜனங்கள் வெளி யேறுவதை நிறுத்த வழி, நீர்ப்பாசனத் தையும் வடிகாலையும் ஸரியான நிலைமையில் வைத்து விவஸாயத்தை வ்ருத்தி செய்வதுதான்.
கல்வி விஷயத்தில் தஞ்சாவூர் ஜில்லாவையும் மற்ற ஜில்லாக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், தஞ்சாவூர் ஜில்லா நல்ல ஸ்திதியிலிருக்கிறதென்றே சொல்லலாம். இதனால் தஞ்சாவூர் ஜில்லாவைப்பற்றி ரொம்ப ப்ரமாதமாய் எண்ணி விடக் கூடாது. இந்த ஜில்லாவில் 23,62,689 பேர் இருப்பதில் 2,64,485 பேரே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். அவர்களில், 22,526 பேர்தான் இங்கிலீஷ் கற்றவர்கள். ஆகவே எழுதப் படிக்கத் தெரியாத வர்கள் 20,98,204 பேர்கள் இருக் கிறார்கள். அதாவது 9 பேருக்கு 8 பேர் எழுதப்படிக்கத் தெரியாதவர்களா யிருக்கிறார்கள். அப்படியிருந்தும் இந்த ஜில்லா கல்வி அதிகம் பரவியிருக்கும் ஜில்லாக்களில் ஒன்றாம்! நம் தேசத்துப் பையன்களில் பெரும்பாலார் தரித்ரத் தோடும், கல்வியறிவு இல்லாமலும் ஜீவனம் தொடங்க வேண்டியிருக்கிறது. இந்தப் பையன்களுடைய கஷ்டங்களில் ரொம்பவும் கெடுதலான கல்வியறிவு இல்லாமையை இன்னும் நீக்காமலிருக் கிறோம். இந்தக் குறையை நீக்க மிஸ்டர் கோகலே கீழ்தரக்கல்வி மசோதா ஒன்று இம்பீரியல் லெஜிஸ்லெடிவ் கௌன் ஸிலில், கொண்டு வந்தார். அந்த மசோதா எவ்வளவோ ஸௌகர்யமான தாயிருந்தும் அது சட்டமாக்கப்படாமல் போயிற்று.
கீழ்தரக்கல்வி பரவச் செய்வது ராஜாங்கத்தாரின் பொறுப்பாகும். இது விஷயமாய் ஸ்தல ஸ்தானபங்கள் (லோகல் போர்டு, முனிஸிபாலிடிகள்) இம்பீரியல் கவர்ன்மெண்டாரோடு சேர்ந்து ராஜாங்கத்தின் ப்ரதம கடமையைச் செலுத்த வேண்டும். ஜனங்களின் கல்வியறிவு இல்லா மையைப் போக்குவதற்கும் குறைப்ப தற்கும் க்ராமவாஸிகளும், பட்டண வாஸிகளும், நகர வாஸிகளும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும். தஞ்சாவூர் ஜனங்கள், இந்தக் காரியத்தில் முன் வருவார்களென்று தாம் நம்புவதாக டாக்டர் நாயர் சொன்னார்.
டாக்டர் நாயர் அவர்கள் வட ஆற்காடு டிஸ்ட்ரிக்ட் கான்பரென்ஸில் இது விஷயமாய் ஒரு யோசனை சொன் னார். மடங்கள், தேவஸ்தானங்களில் வரும் வரும்படிகளில் அவ்வவை களுக்குள்ள ந்யாயமான கார்யங் களுக்குச் செலவழிந்தது போக பாக்கிப் பணத்தை கீழ்தரக்கல்வியை வ்ருத்தி செய்ய செலவழிக்கலாம் என்றார். இதைத் தஞ்சாவூர் ஜில்லா ஜனங்கள் ஆலோசித்துப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்.
ஸ்தல சுய ஆட்சி
முனிஸிபல் ஸ்தாபனங்கள் லார்ட் மேயோ, லார்ட் ரிப்பன் இவர்களால் ஏற்படுத்தப்பட்டன. 1882ஆம் வருஷத் தில் லார்டு ரிப்பன் அவர்களுடைய ஸ்தல சுய ஆட்சி தீர்மானத்தால்தான் ஸ்தல சுய ஆட்சி ஆரம்பமாயிற்று. சென்ற முப்பது வருஷங்களாக இந்த ராஜதானியில் முனிஸிபல் ஸ்தாப னங்கள் ரொம்பவும் அபிவ்ருத்தி யடைந்திருக்கின்றன. ஆனால் சிலர் நாம் முனிஸிபல் சுய ஆட்சிக்குத் தகுதியானவர்களென்று நாம் காட் டவில்லை என்று சொல்லுகிறார்கள். டீஸெண்ட்ரலை ஸேஷன் கமிஷன் மெம்பர்கள் இது விஷயமாய்ச் சொல்லுவது: முனிஸிபாலிடிகளும், டிஸ்ட்ரிக்ட் போர்டுகளும் கார்யங்கள் செய்ய அதிக ஸ்வதந்திரம் பெற வேண்டும். வித்யாசாலைகளுடைய மானேஜ்மெண்டு அவர்கள் கையில் இருக்க வேண்டும் வித்யா சட்ட டிபார்ட்மெண்டு ரூல்களும் அவர் களை நிர்ப்பந்திக்கக் கூடாது. வரவு _ செலவு கணக்குகளில் அவர்களுக்கு அதிக ஸ்வதந்திரம் கொடுக்க வேண்டும் என்று கமிஷன் மெம்பர்கள் அபிப்ராயப்பட்டிருக்கிறார்கள். முனிஸிபாசிடிகளுக்கு பணம் செ லவிடுவதற்கு ஸ்வதந்த்ரம் இல்லாவிட் டால் அவைகள் வ்ருத்தியடைய மாட்டா. ஸ்தல ஸ்தாபனங்கள் பிசகு செய்யுமோ என்று அவைகளைக் கங்காணிக்க ரொம்ப ஜாக்ரதை செய்தாலும் ஸ்தல சுய ஆட்சி என்பது வாஸ்தவமாய் ஏற்படாது. ஸ்தல ஸ்தாபனங்களை அதிகக் கட்டுப்பாட் டில் வைப்பதைவிட அவைகளுக்கு ஆலோசனை சொல்வது ரொம்பவும் உசிதமாகும்.
(நிறைவு)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...