Saturday, December 31, 2011

நாத்திகம் பற்றி வினோபா



திரு. வினோபாபாவே அவர்கள் 22.8.1956 காலை 10 மணிக்கு பவானி கூடுதுறையிலுள்ள திருமுறைக் கழகக் கட்டடத்தில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்ட சில கருத்துக்களை இங்கே தருகிறோம்:-
நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனல்ல, எல்லாக் கட்சியினரும் எனக்கு வேண்டும். நாஸ்திகன் தான் மக்களுக்கு உண்மையான சேவை செய்பவன். ஆத்திகனால் சேவை செய்ய முடியாது. உதாரணமாக, ஒருவன் பீடி குடிக்கிறானென்றால், அவனுக்கு பீடி கொடுத்துக் கொண்டிருப்பது சேவை செய்வதாகாது. அவனுடைய மனத்தை மாற்றி பீடி குடிப்பதை நிறுத்துவது தான் உண்மையான சேவையாகும். எந்த அரசாங்கமும் நாத்திகத் தன்மையில் இருந்தால்தான் மக்களுடைய தேவைகளை அனுசரித்து சேவை செய்ய முடியும்.

கிருஸ்தவர்கள் பாதரட்சை அணியலாமா?


(அப்போஸ்தலர்: 7:33)இல் பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப் போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது என்றும்.
(அப்போஸ்தலர்: 12:79)இல் தூதன் பேதுருவை எழுப்பி; பேதுருவை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக் கொள் என்றான். அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின் சென்று.... என்றும் இருக்கிறது. இதிலிருந்து பேதுரு இயேசுவின் கட்டளையை நம்பவில்லை என்றுதானே தெரியவருகிறது?
ஒரு வானொலி நிலையத்தின் ஒலிபரப்பில் கிருஸ்தவர்கள் கோவிலுக்குள்ளும் செருப்பு அணிந்து செல்கின்றனரே? என்ற கேள்வி எழுந்தது. இதிலிருந்து இயேசுவை கிருஸ்தவர்கள் கூட நம்பவில்லை என்று தெரியவில்லையா? (ஆதாரம்: இந்திய வேதாகமச் சங்கத்தாரால் 1978இல் வெளியிடப்பட்ட புதிய ஏற்பாடு)
தகவல்: ர.பார்த்தசாரதி, சென்னை - 34

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (25) யார் இந்த சந்தானம் அய்யங்கார்?


-கலி.பூங்குன்றன்
மக்களை ஏமாற்றிய துரோகி என்றெல்லாம் அண்ணாவைப் பற்றி அர்ச்சித்த திருவாளர் கே.சி.லட்சுமி நாராயண அய்யர்வாள் கடந்த வார துக்ளக்கில் (28.-12.-2011) கொஞ்சம் உசத்தியாக எழுது ஆரம்பித்துள்ளார்.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் க.சந்தானம் அய்யங்காரை  சந்தித்து, தமிழ் நாட்டில் கூட்டுறவு இயக்கத்தின் செயல்முறை குறித்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றைக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டாராம்.
அதனால்தான் அண்ணாவுக்குப் பாராட்டு, -வேறு காரணம் இல்லை.
சந்தானம் குழு அறிக்கை பற்றி மாநில மந்திரிசபை கூட்டத்தில் பேசப் பட்டது. சந்தானம் ஒரு பார்ப்பனர் என்று ஓர் அமைச்சர் குறிப்பிட்டார்.
உடனே, முதல்வர் அண்ணாதுரை அதற்கும் பதில் அளித்தார். ஆம். சந்தானம் பார்ப்பனர்; அவர் நம்மவர்; நம்மிலே ஒருவர்; சிறந்த தமிழர்; அறிவும் ஆற்றலும் அனுபவமும் மிக்கவர். அத்தகைய பெரியவரின் ஆலோசனைகள் நமக்குக் கிடைத் திருக்கின்றன.
உண்மையிலே நாம் மகிழ்ச்சி அடையவேண்டும் என்று அண்ணாதுரை அழுத்தமாகக் கூறினார் என்று எழுதியுள்ளார்!
இப்படி அண்ணா கூறியதற்கு எந்த ஆதாரத்தையும் எடுத்துக் காட்ட வில்லை துக்ளக் கட்டுரையாளர்.
ஏதோ மானாவாரியாக மனக்குரங்கு பாய்ந்த திசையில் எழுதியுள்ளார்.
ஒரு அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரைவிட ஒரு வி.எல். எதிராஜ் சிறந்த வழக்கறிஞர் என்று கூறுகிறது என் இனப்பற்று; ஒரு அரியக்குடி அய்யங்காரை விட ஒரு நாயனாப் பிள்ளை சிறந்த பாடகர் என்று கூறுகிறது எனது இனப்பற்று; ஒரு ரெங்காச்சாரியைவிட ஒரு லட்சுமண சாமி சிறந்த டாக்டர் என்று கூறுகிறது எனது இனப்பற்று; ஒரு சத்தியமூர்த்தி அய்யரை விட ஒரு ஆர்.கே. ஷண்முகம் சிறந்த பேச்சாளர் என்று கூறுகிறது என் இனப்பற்று; ஒரு பாரதியாரை விட ஒரு கனகசுப் புரத்தினம் சிறந்த கவிஞர் என்கிறது என் இனப்பற்று. (விடுதலை 15-.10.-1958) என்று சொன்னவர் அறிஞர் அண்ணா என்பதை ஆரியர் மறக்கவேண்டாம்.
முதல் அமைச்சர் என்ற முறையில் சந்தானம் அய்யங்காரைச் சந்திப்பதோ, கருத்துக்களைக் கேட்பதோ சாதாரண மானதுதான்.  அந்தக் காரணத்தாலேயே சந்தானம் அய்யங்கார் தமிழர் ஆகி விட மாட்டார். அண்ணா அதை ஏற்றுக் கொள்வதும் இல்லை.
தமிழர் என்றால் தமிழகத்திலே பிறந்து தமிழ் பேசும் அனைவரும் தமிழர் என்பர். ஆனால் உள்ளுற உணர்வர் தமிழர் என்றால் தமிழ் மொழியினர் மட்டுமல்ல; மொழி வழி விழி, மூன்றிலும் தமிழர்! நோக்கம், நெறி இரண்டும் (விழி, வழி) தமிழர்க்குத் தனி! ஆரிய நோக்கம் வேறு, மார்க்கம் வேறு! தமிழர் எனில் தனி இனம் என்ற கருத்தே தவிர மொழியிலே மட்டுமல்ல! (விடுதலைப் போர் பக்கம் 27 - அந்தத் தைரியம் எனும் தலைப்பில்) என்றார் அண்ணா.
தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழ் மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்தில் அன்பும் பற்றும் கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியாகக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வட மொழியாகிய சமஸ்கிருதத்தின் மீது தான்.         (திராவிட நாடு 2-1.1-.1947)
பார்ப்பனர்கள் பற்றி இவ்வளவு துல் லியமாகப் படம் பிடித்தவர் அண்ணா.
சந்தானம் அய்யங்காரை தமிழ ரெனச் சொல்லி விட்டாராம் அண்ணா. ஆரியம் அடேயப்பா எவ்வளவுத் துள்ளு துள்ளுகிறது.
தமிழ் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்கும் கூட லாயக்காக மாட் டோம் (துக்ளக் 23.-6.-2010) என்று எழுதவில்லையா?
தை முதல் நாள்தான் தமிழர்ப் புத்தாண்டு என்ற தமிழ் அறிஞர்களின் கோரிக்கையை ஏற்று தி.மு.க.ஆட்சி அதற்கான சட்டத்தை நிறைவேற் றியபோது இதே துக்ளக் என்ன எழுதியது?
தமிழ்ப் புத்தாண்டு இதெல்லாம் வழக்கத்திற்கு விரோதமானது, நம்பிக் கைக்கு விரோதமானது என்று எழுதவில்லையா? (துக்ளக் 27-.1.-2010). இதுதான் இவர்கள் தமிழர்கள் என்பதற்கு அடையாளமா?
மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது. சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகின்ற காலம் வரை இந்திக்கே நாம் முன்னுரிமை தந்து நமது வசதிக்காக ஆட்சி மொழி யாக்கிக் கொள்ள வேண்டும் என்று இவர்கள் குருநாதர் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களுள் ஒருவரான கோல் வாக்கர் கூறவில்லையா?(Bunch of Thoughts) - அத்தியாயம் 3  பக்கம் 113).
தொழிலாளர்களின் மிகப் பெரிய தலைவர் என்றும் முற்போக்குப் பேர்வழி என்றும் பார்ப்பனர்களால் பரணில் வைத்துக் கூத்தாடப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி என்ன சொன்னார் தெரியுமா?
சமஸ்கிருதம் நாட்டு மொழியாக ஆக்கப்பட்டால் மொழிப் பிரச் சினையே இருக்காது. இதை நான் 1955 முதல் பிரச்சாரம் செய்து வந்திருக் கிறேன் என்று பேசினாரே!
(சிலப்பதிகார சமஸ்கிருத மொழி பெயர்ப்புப் புத்தக வெளியீட்டு விழா வில் ஆற்றிய உரையிலிருந்து 2-.1.-1963).
நான் சர்வாதிகாரியாக இருந்தால் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாகப் படிக்கச் செய்வேன் என்று சொன்ன வர்தானே திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்வாள் (மெயில் 25.-1.-1938)
அண்ணா சொன்னதை இவற் றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உண் மைப் பூனைக்குட்டி கோணிப் பைக் குள் இருந்து வெளியில் வந்துவிடுமே!
இந்தத் தமிழர் க.சந்தானம் அய்யங் கார் யார் தெரியுமா?
சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனர்களுக்கு தனிப் பந்தி - பார்ப் பனர் அல்லாதாருக்குத் தனி பந்தி என்று பேதம் செய்த திருவாளர் வ.வே.சு. அய்யருக்குப் பக்க பலமாக இருந்தவர்தான்.
குருகுலம் ஜாதிவெறி பிடித்து கூத்தாடுவதால் காங்கிரஸ்  நிதியி லிருந்து ஏற்கனவே அளிக்கப்பட்ட அய்யாயிரம் ரூபாய் போக, மீதி அய்யாயிரத்தை அளிக்கக்கூடாது என்று அன்றைய  தமிழ் மாநில காங் கிரஸ் தலைவர் டாக்டர் பி.வரத ராஜூலு நாயுடுவும், செயலாளர் பெரியார் ஈ.வெ.ரா.வும் முடிவெடுத்த நிலையில் அதனை அறிந்த வ.வே.சு. அய்யர் என்ன செய்தார் தெரியுமா? தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டியின் இணை செயலாளராக இருந்த க.சந் தானம் அய்யங்காரிடம் இருந்து மீதி அய்யாயிரம் ரூபாய்க்கான காசோலையை (Cheque) தந்திரமாகப் பெற்றுக் கொண்டுவிட்டார்.
செயலாளர் இருக்கும் பொழுது அவருக்குத் தெரியாமல் குருகுலம் மிகப்  பெரிய சர்ச்சைக்கு ஆளாகிக் கொண்டிருந்த போது இப்படி அறிவு நாணயமின்றி நடந்து கொண்ட பெரிய மனிதர்தான். கே.சி. லட்சுமி நாராயண அய்யர்வாள் தூக்கி வைத்து முத்தம் கொடுக்கும் சந்தானம் அய்யங்கார்.
சேரன்மாதேவி குருகுலப் போராட் டம் குறித்து விவாதிக்க 1925ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் தமிழ் நாடு காங்கிரஸ் செயற்குழு கூடியது. இந்தப் பிரச்சினை மிகக் கடுமையாக சூடு பிடித்தது.
பாரத கலாச்சாரம் என்பது வேதக் கலாச்சாரம்தான். அதன்படி தானே நடந்து கொண்டார் அய்யர்? இதில் என்ன குற்றம் இருக்கிறது என்று ஒரு பார்ப்பனர் பேசிய நேரத்தில், ஜாதி பாகுபாட்டுக்கும், உயர்வு தாழ்வுக்கும் வேதமும், சாஸ்திரமும் விதி வகுத்திருந்தால் அந்த வேதத்தையும் சாஸ்திரத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று தந்தை பெரியார் தன்மான எரிமலையாக வெடித்தார்.
பிறப்பினால் கற்பிக்கப்படும் ஏற்றத் தாழ்வுகளை இந்திய சமூக வாழ்க்கையில் பாராட்டக் கூடாது என்று இந்தக் குழு கருதுகிறது. இந்தக் கொள்கையை தேசிய  இயக்கம் தொடர்பான எல்லா நிறுவனங்களும் பின்பற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது. சேரன்மாதேவி குருகுலத் தில் இந்தக் கொள்கையை நடைமுறைப் படுத்த உதவியாக இந்தக் குழு (1) தேவக்கோட்டை வி.தியாகராசச் செட்டியார் (2) எஸ். இராமநாதன் (3) ஈரோடு வெ.இராமசாமி. ஆகியவர் களைக் கண் காணிப்புக் குழுவாக நியமனம் செய்கிறது என்பது எஸ்.இராமநாதன் அவர்களால் கொண்டுவரப்பட்ட தீர்மானமாகும். வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் மொத்தம் 26 பேர்களில் 19 பேர் ஆதரித்தனர். ராஜாஜி உட்பட ஏழு பேர் எதிர்த்தனர்.
இந்த நிலையில் நான்குபேர் காங் கிரஸ் செயற் குழுவிலிருந்து விலகுவதாகக் கடிதம் கொடுத்தார்கள். இந்த நான்கு பேர்களும் பார்ப்பனர்கள்; அதில் ஒருவர்தான் துக்ளக் துதிபாடும் தமிழர்(?) க.சந்தானம் அய்யங்கார்.
(ஆதாரம்: குருகுலப் போராட்டம் - நாரா. நாச்சியப்பன்)
இந்த சந்தானம் அய்யங்கார் எப்படிப்பட்ட பார்ப்பன வெறியர் என்கிற விடயம் காந்தியார் வரை சென்று சிரிப்பாய் சிரித்ததுமுண்டு.
இதுகுறித்து குடிஅரசு (6-.3.-1927) விரிவாக எழுதி வெளியிட்டிருந்தது. அது இதோ.
மகாத்மாவிற்கு இந்தப் பார்ப்பனர் களின் யோக்கியதை நன்றாய்த் தெரியும் என்பதற்கு நாம் ஒரு உதாரணம் சொல்லுவோம். பெல்காம் காங்கிரசின் போது மகாத்மாவிடம் நாம் பேசிக் கொண்டிருந்த சமயம் அதாவது கதர் போர்டு சம்பந்தமாக அதிலுள்ள உத்தி யோகங்கள் மிகுதியும் பார்ப்பனர் களுக்கே கொடுக்கப்பட்டு வருகிறது என்கிற காரணத்தால் நமக்கும் கதர் போர்டு காரியதரிசி என்ற முறையில் ஸ்ரீமான் கே.சந்தானம் அவர்களுக்கும் அபிப்பிராய பேதம் ஏற்பட்டுவிட்டது. இதில் ஸ்ரீமான் இராஜ கோபாலாச் சாரியார் ஸ்ரீமான் சந்தானத்திற்குப் பக்க பலமாயிருந்தார். இது விஷயமாய் எங்களுக்குள் ஒரு முடிவும் ஏற்பட இடமில்லாமல் போகவே கடைசியாக காரியதரிசி ஸ்ரீமான் சந்தானம் அவர்கள் ராஜினாமா கொடுத்துவிட்டார்.
ராஜினாமா கொடுத்துவிட்டதோடு (சும்மா இராமல்  இந்த ராஜினாமாவை மகாத்மா தகவலுக்கே கொண்டு போய் ஸ்ரீமான் சந்தானத்தின் ராஜினாமாவை பின்வாங்கிக் கொள்ளும்படி செய்ய மகாத்மாவையும்  தூண்டப்பட்டது). மகாத்மா நம்மைக் கூப்பிட்டு ஸ்ரீமான் சந்தானம் ஏன் ராஜினாமா கொடுத்தார் என்று கேட்டார்.
நான் (தந்தை பெரியார்)  கதர் போர்டு சம்பந்தமான உத்தியோகங் களைப் பெரிதும் பார்ப்பனர்களுக்கே அவர் கொடுப்பதால் அதன் தலைவர் என்ற முறையில் பார்ப்பனரல்லா தாருக்கும் கொடுக்க வேண்டும் என்பதாகச் சொன்னதனால் அவருக்குத் திருப்தி இல்லாமல் அவர் ராஜினா மாவைக் கொடுத்து விட்டார் என்று சொன்னேன்.
மகாத்மா: - இது ஸ்ரீமான் ராஜகோ பாலாச்சாரியாருக்குத் தெரியாதா என்றார்.
நான்:- இதுவிஷயத்தில் அவர்கள் எல்லோரும் ஒன்று தான் என்று சொன்னேன்.
மகாத்மா: - அப்படியானால் உமக்கு ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாரிடம் கூட நம்பிக்கை இல்லையா என்றார்.
நான்:- பார்ப்பனர்களுக்கு அவர் களிடம் இருக்கும் நம்பிக்கை அவ்வளவு எனக்கு அவரிடம் இல்லை என்று சொன்னேன்.
மகாத்மா:- அப்படியானால் பார்ப் பனர்களிடத்திலேயே உனக்கு நம்பிக்கை யில்லையா என்றார்.
நான்: இந்த விஷயத்தில் நம்பிக் கையே உண்டாவதில்லையே என்றேன்.
மகாத்மா:- அப்படியானால் உலகத் திலேயே நல்ல பார்ப்பனர் இல்லை என்பது உமது அபிப்பிராயமா என்றார்.
நான்:- என் கண்ணுக்குத் தென் படுவதில்லையே நான் என்ன செய்யட்டும் என்றேன்.
மகாத்மா: அப்படிச்சொல்லாதீர்கள். நான் ஒரு நல்ல பார்ப்பனரைக் கண்டிருக்கிறேன். அவர்தான் கோகலே. அவர் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக்கொண்டதே கிடையாது. யாராவது அவரை பிராமணன் என்று கூப்பிட்டாலும், மரியாதை செய்தாலும் ஒப்புக் கொள்ளாததோடு உடனே ஆட்சேபித்துத் தனக்கு அந்த யோக்கியதை இல்லை என்பதை எடுத்துக் காட்டுவார்.
நான் :- மகாத்மா கண்ணுக்கே ஒரே ஒரு யோக்கியமான பிராமணன் மாத்திரம் தென்பட்டு இருக்கும்போது என்போன்றவர்கள் கண்ணுக்கு எப்படிதென்படக் கூடும் என்றேன்.
மகாத்மா: - (வேடிக்கையாய் சிரித்து விட்டு) மறுபடியும் ஸ்ரீமான் சந்தானம் ராஜினாமாவை வாபீஸ் பெற்றுக் கொண்டு காரியதரிசி வேலை பார்க்கக் கூடாதா என்று என்னைக் கேட்டார்.
நான்:- நன்றாய் பார்க்கலாம் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் பார்ப்பனரல்லா தாருக்கு சரிபகுதி அதாவது 100க்கு 50 உத்தி யோகமாவதுகொடுக்க கட்டுப்பட வேண்டும் என்றேன். ஸ்ரீமான் பாங்கர் ஆச்சரியப்பட்டு 100க்கு 50 வீதம் போதுமா? அது கூடவா இப்போது கொடுக் கப்படவில்லை என்கிறீர் என்று கேட்டார்
நான்: ஆம் என்றேன்,
சங்கர்லால் பாங்கர்:- ஸ்ரீமான் இராமசாமி நாயக்கர் 100க்கு 50 போது மென்கிறாரே இது என்ன அதிசயம்? என்றார்.
மகாத்மா:- நான் ஒருபோதும் சம்மதி யேன் 100க்கு 90 கொடுக்கவேண்டும்.
நான் :- 100-க்கு 50 கொடுப்பதாய் தீர் மானம் போட ஒப்புக்கொள்ள முடி யாது என்கிறவர்கள் 100-க்கு 90- கொடுப்பதெப்படி? என்றேன்.
மகாத்மா:- தீர்மானம் போட வேண்டும் என்று நான் சொல்லவர வில்லை ஆனால், 100க்கு 90 கொடுக்க வேண்டியது கிரமம் என்று சொல் லுவேன் என்று சொல்லி விட்டு ஸ்ரீமான் சந்தானத்தைப் பார்த்து பார்ப்பனரல்லாதாருக்கு உத்தியோகம் கொடுப்பதில் உமக்கென்ன ஆட் சேபணை என்று கேட்டார்.
சந்தானம் :- எனக்கு ஒன்றும் ஆட்சே பணை இல்லை. ஒருவரும் வருவ தில்லையே நான் என்ன செய்யட்டும் என்று சொன்னார்.
மகாத்மா:- என்னைப் பார்த்து என்ன நாயக்கர் ஜீ? யாரும் வருதில்லை என்கிறாரே என்ன சொல்லுகிறீர்?
நான்;- அது சரியல்ல, ஏன் வருவ தில்லை என்பதற்கே காரணம் வேண்டும். முதலாவது வேலை கொடுக்க வேண்டும். வேலை கொடுத்து அவனை மரியாதையாக நடத்த வேண்டும். இந்த இரண்டு காரியம் இருந்தால் எவ் வளவோ பேர் வேண்டுமானாலும் கிடைப்பார்கள்.
மகாத்மா:- அப்படியானால் இனி மேல் உத்தியோகஸ்தர்களை நியமிக்கும் அதிகாரம் நீங்கள் வைத்துக் கொள் ளுகிறீர்களா?
நான்:- ஸ்ரீமான் சந்தானம் அவர்கள் தன்னால் முடியாதென்றால் நானே பார்த்துக் கொள்ளுகிறேன்.
மகாத்மா:- ஸ்ரீமான் சந்தானத்தைப் பார்த்து இனி உத்தியோகஸ்தர்கள் நியமனம் நாயக்கரிடம் விட்டுவிடுங்கள் என்றார்.
சந்தானம்;- எனக்கு ஆட்சேபனை யில்லை- சி.ராஜகோபாலாச்சாரியார் - குறுக்கே தலையிட்டு அது முடியாத காரியம். ஏனென்றால் யார் வேலை வாங்குகிறார்களோ அவர்கள் தான் வேலைக்காரரை நியமிக்கவேண்டும். அப்படிக்கில்லாமல் ஒருவர் நியமிப்பது, ஒருவர் வேலைவாங்குவதுமாயுமிருந் தால் வேலை நடக்காது என்றார்.
மகாத்மா:- உடனே (சிரித்துக் கொண்டு) நாயக்கர் சொல்லுவதில் ஏதோ உண்மை இருக்கும்போல் தோன்றுகிறது. இப்போது நான் காங்கிரஸ் பிரசி டெண்ட் ஸ்ரீமான் ஜவகர்லால்நேரு காரியதரிசி, நான் நியமித்த ஆளைக் கொண்டு ஜவகர்லால் வேலைவாங்க முடியாவிட்டால் நானாவது குற்ற வாளியாக வேண்டும், அல்லது ஜவகர்லாலாவது குற்றவாளியாக வேண்டும். நியமிக்கப்பட்ட ஆளிடம் குற்றமிருக்க நியாயமில்லை. சர்க்காரில் கூட நியமிப்பவர் ஒருவர். வேலை வாங்குபவர் ஒருவர்; அப்படிக்கிருக்க அதில் எங்கேயாவது வேலை வாங்கு பவர் நியமிக்காததால் வேலைக் காரர்கள் சரியாய் நடக்கவில்லை என்று ஏற்பட்டிருக்கிறதா? என்று கேட்டார்.
சி.ராஜகோபாலாச்சாரியார்: - வகுப்பு பிரிவினை பார்த்தால் போதுமா, வேலை நடக்க வேண்டாமா? தகுதியும் கூட பார்க்க வேண்டாமா என்றார்.
மகாத்மா:- நாயக்கர் அதையும் பார்த்துக்கொள்வார் என்றே நினைக் கிறேன். அப்படி பார்ப்பனரல்லாதாரை நியமித்ததின் மூலம் ஏதாவது வேலைகள் கொஞ்சம் கெட்டுப் போனாலும் குற்றமில்லை. இரண்டு காரியங்களும் நடக்கவேண்டியது தான். அதாவது கதர் விஷயம் எப்படி முக்கிய மானதோ அதுபோல வகுப்பு அதிருப்திகளும் நீங்க வேண்டியதும் மிக முக்கியமானது. ஆதலால் கதர்போர்டு சம்பந்தமான உத்தியோக நியமனம் நாயக்கர் கையில் இருக் கட்டும் என்று சொன்னார் காந்தியார்.
பிறகு எல்லோரும் சரி என்று ஒப்புக் கொண்டதாக அவருக்கு ஜாடை காட்டிவிட்டு வந்து விட் டோம். பிறகு எப்படி எப்படியோ பாடுபட்டு கதர் ஆதிக்கம் முழுவதும் தங்கள் கைக்கே வரும் படியாக பார்ப்பனர்கள் செய்து கொண் டார்கள். அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை.  நாமும் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் கதருக்காக எவ்வளவு உழைக்கவேண்டுமோ அவ்வளவும் உழைத்தோம்; உழைத்துக் கொண்டு மிருக்கிறோம்; இனியும் உழைக்கப் போகிறோம். எனவே மகாத்மா காந்தி இவர்களை சரியானபடி அறிந்து கொள்ளவில்லை என நாம் நினைப் பது தப்பு என்றே சொல்லுவோம்.(குடிஅரசு 6.3.1927)
நாயக்கர் (பெரியார்) சொல்வதில் உண்மை இருப்பதுபோல் தோன்று கிறது என்று காந்தியார் சொல்லும் அளவுக்கு ராஜாஜி உட்பட பார்ப் பனர்களில் தலைவர்களாக இருந்தவர் கள் நடந்து கொண்டனர் என்பது அம்பலமாகி விட்டதே!
- (வளரும்)







திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று யாராவது சொன்னால் தாயை அடையாளம் காணத் தெரியவில்லை என்று பொருள்!


சென்னை கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கம்
சென்னை, டிச.31- திராவிடத்தால் வீழ்ந்தோம், திராவிடர் என்று சொல்லக்கூடாது என்று இப்படிச் சொல்லுகிறவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும் தாயை அடையாளம் காணத் தெரியவில்லை என்றுதான் பொருள் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி உரை யாற்றினார்.
சென்னை பெரியார் திடலில் 24.12.2011 அன்று இரவு விடுதலை சந்தாக்கள் வழங்கிய நிறைவு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
பெரியார் சொல்லுகிறார். உண்மை யில் நான் அக்காரியங்களில் மறை வாகவோ, வெளிப்படை யாகவோ சம்பந்தம் வைத்திருப்பே னேயானால் அவை அவ்வளவு வெற்றி கரமாக முடியும் என்று இருக்காது. மக்கள் ஏமாற்றப்பட்டே போயிருப் பார்கள்.
விடுதலை பல நேரங்களில் சந்தித்திருக்கிறது. அவ்வப்பொழுது சில பேருக்கு காழ்ப்புணர்ச்சி, சங் கடங்கள் வருகிறது. எப்பொழுது அவர்களால் தாக்குப்பிடிக்க முடிய வில்லையோ அப்பொழுது வெளியே போய்விடுகிறார்கள்.
ஏன் தாடி வைத்திருக்கிறீர்கள்?
போகிறவன் சும்மா போவதில்லை. ஏன் வந்துவிட்டீர்கள் என்று கேட்டால் ஏதாவது காரணத்தைக் கண்டுபிடித்து சொல்லுவான். தந்தை பெரியார் அவர்கள் சொல்லியிருக் கின்றார்.
நான் சமாதானம் சொல்ல மாட்டேன் என்று சொல்லி விட்டார். இன்னொரு இடத்திலே சொல்லு கிறார். நீ ஏன் தாடி வைத்திருக்கிறாய் என்று கேள்வி கேட்டான். நான் உடனே பதில் சொன்னேன். முளைக் கிறது. அதனாலே வைத்திருக்கிறேன். இது என்ன பெரிய கேள்வியா? (கைதட்டல்). நான் பேசின விசயத்தில் ஏதாவது சந்தேகம் வந்தால் எடுத்துக் கேள். அதைப் பற்றித்தான் நான் சொல்ல வேண்டும் என்று நினைத் தேன். அதனால் சில குற்றச்சாட்டுகள் வந்தால் நான் பதில் சொல்ல மாட்டேன் என்று அய்யா அவர்கள் சொல்லுவார்.
சொல்லவேண்டியவர்களுக்கு விளக்கம் சொல்லுவார். பதில் சொன் னால் எதிரி வளர்ந்து விடுவான் என்பது அவருக்குத் தெரியும். சில நேரங்களில் நினைக்கலாம். என்னய்யா விடுதலை யில் இதற்கு உடனே பதில் வரவில் லையே என்று ஆனால் நாங்கள் பெரியாரின் அந்த அணுகுமுறையை வைத்துக் கொண்டு பார்க்கும்பொழுது எதிரிகள் எங்களை சீண்டி வளர்ந்து விடுவதற்கும் இடம் கொடுக்க மாட்டோம்.
விடுதலையின் வரலாற்றின் எத்தனையோ சம்பவங்களும், நிகழ்வுகளும் உண்டு.
உண்மைப் பெயரைச் சொல்லாமல்
பெரியார் சொல்லுகிறார். மேற் கண்ட மூன்று மாநாடுகளைக் கூட்டிய வர்களின் எண்ணம் கைகூடாமல் போனதற்கு காரணம் என்னவென்றால் அம்மூன்று கூட்டத்தாரும் தமிழர் பெயரை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்ற ஆரம்பித்ததால் தோல்வி அடைந்தார்களே ஒழிய அவர்கள் கூட்டிய மாநாட்டின் உண்மைப் பெயர்களைச் சொல்லி காட்டியிருப் பார்களேயானால் ஆட்சேபணையே இருக்காது என்று அய்யா சொல்லு கிறார்.
மதத்தைப் பரப்புகிறவன். மூட நம்பிக்கையைப் பரப்புகிறவன் தமிழர் மாநாடு என்று பெயர் போடுகிறான். அந்த காலத்திலே அப்படி வந்தார்கள்.
அரசியலில் பிழைக்கிறவர்கள்
இந்த காலத்தில் அரசியலில் பிழைக்கிறவர்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி திராவிடத்தால் வீழ்ந் தோம். திராவிடர் என்று சொல்லக் கூடாது என்று இப்படிச் சொன்னால் அவர்களுக்குத் தாயை அடையாளம் தெரியவில்லை என்பதுதான் பொருளே. தவிர வேறு ஒன்றும் இல்லை. (கைதட்டல்).
திராவிடர் கழகம், தந்தை பெரியார் தனது இயக்கத்திற்குப் பெயர் வைத்தார். சூத்திரர் கழகம் என்று பெயர் வைக்க முடியுமா? திராவிடர் என்று பெயர் வைத்தால் தான் பார்ப்பான் உள்ளே நுழைய முடியாது என்பது பெரியாருக்குத் தெரியும்.
புத்தருக்கு ஏற்பட்ட ஆபத்து
இந்த நாட்டில் பார்ப்பனர் பிரவே சிக்க முடியாத ஒரு அமைப்பாக இருக்கிற காரணத்தால்தான் புத்தருக் கும், புத்த மார்க்கத்திற்கும் ஏற்பட்ட ஆபத்து திராவிடர் கழகத்திற்கோ, பெரியார் கொள்கைக்கோ ஒரு போதும் வராது. (கைதட்டல்).
பெரியார் கொள்கையைப் பாதுகாப்பதே
இனிமேல் நாம் பெரியார் கொள் கையைப் பரப்ப வேண்டும் என்பதை விட, நமது ஆயுதம் எதற்குப் பயன்பட வேண்டுமென்றால் பெரியார் கொள் கையைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆயுதம் பயன்பட வேண்டும் என்று சொல்லக் கூடிய நிலை.
நமது பொதுக்குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களைப் பாருங்கள். உலக அளவிலே இதை கொண்டு செலுத்த வேண்டும். அதற்குத் தோழர்கள் ஒத்துழைக்க வேண்டும். என்னைப் பொறுத்த வரையிலே நீங்கள் எவ்வளவு உற்சாக மாக இருந்தாலும் ஏராளமான பேச்சாளர்களை நாம் உற்பத்தி செய்ய வேண்டும். பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும். தோழர்கள் தமிழ்நாட்டிலே தெரு முனைப் பிரச்சாரம் உள்பட தொடர்ந்து நீங்கள் செய்வதற்கு ஆயத்தமாக வேண்டும்.
அடுத்து அனைத்திந்திய களம்
அடுத்த களம் நம்முடைய களம். அனைத்திந்திய களமாக இருக்க வேண்டும். சமூகநீதியிலே மூட நம்பிக்கை ஒழிப்பிலே, ஜாதி ஒழிப் பிலே, மதவெறி ஒழிப்பிலே இத்த னையும் செய்ய வேண்டும்.
அதையும் தாண்டி உலகளாவிய நிலையில் பெரியாருடைய கொள்கை பரவவேண்டும். சுயமரியாதை இயக் கத்தை தோற்றுவித்தது ஏன் என்று தந்தை பெரியார் அவர்கள் எழுதி யிருக்கின்ற அந்த கருத்திலே அழகாக தந்தை பெரியார் அவர்கள் சொல்லு கின்றார். இது ஒரு குறுகிய நோக்கத் தோடு ஒரு வட்டாரத்திற்காகத் தொடங்கப்பட்ட இயக்கமல்ல.
உலக மானிடத்திற்காகத் தொடங்கப்பட்ட இயக்கம்
உலக மானிடத்திற்காகத் தொடங் கப்பட்ட இயக்கம். இது ஒரு மானிட இயக்கம் என்று அற்புதமாகச் சொல்லு கிறார்கள். எனவே மனிதர்களிடையே பெண்ணடிமை ஒழிக்கப்பட வேண் டும். சிந்தனைக்கு விலங்கு போடக் கூடிய நிலை மாற வேண்டும். மனித சமுதாயத்திலே மிகப்பெரிய மாற் றத்தை உருவாக்கக்கூடிய அளவிலே செய்து ஒரு பெரிய சமுதாயப் புரட் சியை உருவாக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.
மத உதாரணம் தவறாக இருக்க லாம். ஆனால் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றோம்.
ஏசு-கிறிஸ்து
ஏசுநாதர் கிறிஸ்த்துவ மதத்தை இன்றைக்கு மிகப் பெரிய அளவுக்குக் காட்டுகிறார்கள். உலகம் பூராவும்  கொண்டாடக் கூடிய அளவுக்கு இருக்கிறதே.
அது எவ்வளவு பெரிய மூட நம்பிக்கையாக இருந்தாலும், எல்லோ ரும் ஒரே மாதிரியாகப் பரப்பியிருக்கி றார்களே. ஏசுநாதர் செய்ததைவிட அவருடைய தொண்டர்கள் தானே செய்திருக்கிறார்கள். அதைப் பரப்பிய வர்கள் அவர்கள்தானே.!
யார் அதிகமாக முத்தம் கொடுக்கின்றானோ
ஒருவன் முத்தம் கொடுத்தான். யார் தன்னை அதிகமாக முத்தம் கொடுக் கிறார்களோ அவர்களிடம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும். பெரியார் அவர்களுடைய காலத்தி லிருந்து நாம் பார்த்திருக்கிறோம். பதின்மூன்றாவது சீடனை அடையா ளம் தெரியவில்லை என்று சொன்ன வுடனே  என்ன செய்தார்கள்?
அடையாளம் எப்படி கண்டு பிடிக்கிறது என்று கேட்டார்கள். இது கதையா? நடந்ததா? என்றால் தத்துவம் முக்கியம். நான் யாரைத் தழுவி கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கின்றேனோ அவர்தான் என்று தெரிந்துகொள் ளுங்கள். அவரை கைது பண்ணுங்கள் என்று சொன்னார்.
எச்சரிக்கையாக இருங்கள்!
அதே மாதிரி நம்மைக் கட்டித் தழுவுகிறவர்களிடமும் நீங்கள் எச்சரிக் கையாக இருக்க வேண்டும்.
ஆரியம் நேரடியாக வராது. (கைதட்டல்). பல யூதாஸ்களைத் தயாரித்துக் கொண்டு வரும். அதையும் எல்லா கோணங்களிலும் அடை யாளம் காணவேண்டும்.
அனைத்து ஜாதியினர் நீதிமன்றத்தில்
எல்லா திசைகளை நோக்கியும்  நமது விழிகள் அகலமாக விரிந்து செயல்பட வேண்டிய கட்டம் இருக் கிறது. ஆகவே நமக்கு ஏராளமான பணிகள் இருக்கின்றன.
ஜாதி ஒழிப்பிற்காக அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் வழக்கு இன்ன மும் நீதிமன்றங்களிலே நிலுவையில் இருக்கிறது. ஆனால் இதுவரை நாம் எடுத்த சமூகநீதிக்கொள்கை எதுவும் தோற்றுப் போகவில்லை. ஜாதி ஒழிப்பு தோற்காது. அதற்கான முயற்சிகளை நாம் எடுப்போம்.
அதற்கெல்லாம் தூண்டுகோல். அதற்கெல்லாம் மூலாதாரம் எங்கே யிருக்கிறது. என்றால் நம்முடைய இயக்கத்தில் அந்த இயக்கத்தினுடைய ஒரு கருவியாகத்தான் கருத்தைப் பரப்பக்கூடிய ஏடாகத்தான் விடுதலை அமைந்திருக்கிறது.
எனவே விடுதலை மிகப்பெரிய அளவுக்குப் பரவ வேண்டும். பல கருத் தாழமிக்க புதிய பகுதிகள் விடுதலை யிலே சேர்க்கப்படும்.
இனி பெரும்பகுதி விடுதலை அலுவலகத்தில்
என்னைப் பொறுத்தவரையிலே நான் சுற்றுப்பயணத்தில் கவனம் செலுத்துகிற நேரத்திலே கவிஞர் அவர்கள் விடுதலையை ஓரளவுக்குப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவரும் வெளியே போக வேண்டி யிருக்கிறது. மற்றத் தோழர்களும் போக வேண்டிய நிலையிலே முன்பு இருந்ததை விட ஏனென்றால் ஏராள மான அளவுக்கு சந்தாக்களைச் சேர்த்து அதனுடைய தரம்-நிலை-பணி இவை அத்தனையையும் இன்னும் அதிகப் படுத்த வேண்டும் என்று சொன்னால் நான் இனி என்னுடைய நேரத்திலே மிகப்பெரும் பகுதியை விடுதலை அலுவலகத்திலேயே கழிப்பேன் என்பதை உங்களுக்கு  மகிழ்ச்சியோடு சொல்லிக்கொண்டு (கைதட்டல்). அதற்கு நீங்கள் கொஞ்சம் ஒத்து ழைப்புத் தரவேண்டும்.
ஒத்துழைப்புத் தரவேண்டுமென் றால் வேறு ஒன்றும் நான் உங்களிடம் கேட்கவில்லை. கொஞ்சம் இங்கே வேலை செய்யவிடவேண்டும். இங்கே தங்கி இருக்கும் படியாகச் செய்ய வேண்டும்.
ஒரு அனுபவம்
நமது தோழர்கள் வருவார்கள். வழக்கமாக எனக்கு  ஏற்படுகின்ற ஒரு அனுபவம். நேரம் ஆகிவிட்டது. சுருக்கமாகச் சொல்கிறேன். அய்யா நீங்கள் உடம்பைப் பார்த்துக்கொள்ள வேண்டும். (சிரிப்பு). நீங்கள் ரொம்ப அலைகிறீர்கள். நீங்கள் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது.
நீங்கள் ஒரு மாதத்திற்கு எங் கெங்கோ போய்க்கொண்டு வரு கிறீர்கள். அப்படி அலைய வேண்டாம் என்று சொல்லிவிட்டு எங்கவீட்டுக்கு ஒரு கல்யாணத்திற்கு வரவேண்டும். எங்க ஊருக்கு வரவேண்டும். (கைதட் டல்).
அய்யா முதல் நாள் நான் கன்னியாகுமரியில் இருக்கின்றேனே எப்படி என்று கேட்பேன். இருந் தாலும் எங்க வீட்டில் இதுதான் கடைசி கல்யாணம் அல்லது இதுதான் எங்கள் வீட்டில் முதல் கல்யாணம். எதிரிகளுக்கு இதுதான் பிரச்சாரம் என்று சொல்லி தேதி கேட்பார்கள்.  நான் மாற்றி மறுப்பு சொல்ல முடியாது.
தலைமை நிலையமே பொறுப்பு
இதை எல்லாம் பார்த்துவிட்டு தலைமை நிலையமே அந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டு விட்டது. நீங்கள் பாட்டுக்கு சுற்றுப் பயண தேதிகளை ஒத்துக்கொள்கிறீர் கள். அதை நாங்கள் ஒழுங்குப்படுத்து கிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.
இருந்தாலும் தோழர்கள் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். தோழர்கள் ஒத்துழைத்து அதிக நேரத்தை, அதிக நாளை விடுதலை அலுவலகத்திலே இருந்து நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கின்றேன்.
புத்தகங்கள் எழுதி வெளியே வரவேண்டும். இப்பொழுது நிறைய ஆய்வுகள் வந்திருக்கிறது. அந்த ஆய்வுகளை எல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என்பது மிக, மிக முக்கியம்.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் வரலாற்று ரீதியாக பல பேராசிரியர்கள் கிடைத்திருக் கிறார்கள். அந்தப் பணிகள் நடக்கிறது. இன்னொரு மிக முக்கியமான பணி.
கவிஞர், மற்றத் தோழர்கள் மத்தியிலே நாங்கள் பேசினோம். என்ன அந்தப் பணி நேரத்தின் நெருக்கடி யினாலே விரிவாக அதைப் பற்றிச் சொல்ல முடியவில்லை.
பெரியாரின் கருத்துகள் திரிபுவாதம்
இருந்தாலும் உங்களுக்குச் சொல்லு கின்றேன். இப்பொழுது அய்யா அவர்களுடைய கருத்தை திரிபுவாதம் செய்யக்கூடியவர்கள் ஏராளம். வரலாற்றில் அய்யா அவர் களுடைய பகுதியை மறைக்கக்கூடிய வர்கள். பெரியாருக்கும்-வைக்கத் திற்கும் சம்பந்தமில்லை என்று கூட பார்ப்பான் எழுதுகிறான்.
வைக்கம் வீரர் என்று திரு.வி.க. அவர்களாலே அழைக்கப்பட்ட வர லாறு உண்டு. நமது காலத்திலேயே இப்படி எழுதுகிறார்கள். நமது காலத்திற்குப் பிறகு என்ன நடக்கும்?
பெரியார் ஆய்வுப் புலம்
ஆகவே இவை அத்தனைக்கும் பதில் சொல்ல வேண்டும் என்பதற் காகத்தான் ஒரு அமைப்பை அதிகார பூர்வமாக ஒரு ஸ்திரமான நிலையை உருவாக்க வேண்டும். பெரியார் ஆய்வுப் புலம் என்ற ஒரு அமைப்பை உருவாக்க இருக்கின் றோம். (கைதட்டல்). அதற்கு வாழ்நாள் முழுவதும் பெரியாரின் மாணவர் களாக நினைத்துக்கொண்டிருக்கின்ற எங்களைப் போன்றவர்கள் அந்தப் பணியை செய்வோம். பெரியாருடைய கொள்கையைப் பரப்புவது மட்டு மல்ல. பெரியாரைப் பற்றிய குற்றச் சாற்றுகளுக்குப் பதில் சொல்லுவது-பெரியாரைப்பற்றிய திரிபுவாதங் களுக்கும் பதில் சொல்ல வேண்டும்.
-(தொடரும்).


குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...