Sunday, July 25, 2010

விடுதலையைச் சுட்டிக்காட்டி தினமணி தலையங்கம்

தமிழ்வெறும்துக்கடாவா...?
கடந்த ஒரு மாதமாக நடந்துவரும் சென்னை இசை விழா முடிவடையும் நிலையை எட்டிவிட்டது. முக்கியமான பழம்-பெரும் சபாக்களின் நிகழ்வுகள் முடிந்துவிட்டன. சென்னை சங்கமத்துடன் இந்த ஆண்டுக்கான இசைவிழா நிறைவு பெறும்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் இது போன்ற இசை, நாட்டியம் தொடர்பான கலை விழாக்கள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் மாதம் எடின்பரோ சர்வதேசக் கலைவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் விழா. 1947ஆம் ஆண்டு தொடங்கப்பட் இந்தஇசை, நாட்-டிய விழாவில் பங்கு பெறவும், கலந்து கொள்ளவும் உலகெங்கிலும் இருந்து கலைஞர்களும் ரசிகர்களும் குவிகிறார்கள். ஆனால், இந்த இசை விழா நடப்பது ஆறேஆறு அரங்கங்களில் மட்டுமே.
லண்டன் நாட்டிய விழா, நியூயார்க் நாட்டிய விழா, அய்ரோப்பிய நாட்டிய விழா என்று எத்தனை எத்தனையோ இசை, நாட்டிய விழாக்கள். ஆனால், அவை அனைத்துமே வியாபாரக் கண்-ணோட்டத்துடன், பல தொழில் நிறுவனங்-களும், அந்தந்த நகர அமைப்புகளும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்த இது போன்ற கலை நிகழ்ச்சிகளை விளம்பரப்-படுத்திக் குளிர் காய முற்படுகின்றனவே தவிர, கலைக்காக நடத்தப்படும் விழாக்களா என்றால் கிடையாது.
ஆனால், நமது சென்னையில் ஆண்டு-தோறும் நடைபெறும் இசை விழா அப்படிப்பட்டதல்ல. இது வியாபாரத்துக்காக நடத்தப்படுவது அல்ல. சுற்றுலாப் பயணி-களைக் கவரவேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்படுவதும் அல்ல. கலைக்--காகக் கலா ரசிகர்களால் நடத்-தப்படும் நமது சென்னை இசை விழா-வின் பிரமாண்டம் உலகில் வேறு எந்-தப் பகுதியில் நடை-பெறும் விழாக்-களுக்கும் இல்லை என்-ப-தால்தான், சென்னை மாநகரம் இந்தியா-வின் கலா-சார தலைநகரம் என்று போற்றப்-படு-கிறது.
73 சபாக்கள் ஏறத்தாழ 2,850 இசை, நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி நாலா-யிரத்-துக்கும் மேற்பட்ட கலைஞர்களின் திற-மையை ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் இந்த அதியசத்தைப் பார்த்து வட நாட்டவரும், வெளிநாட்டவரும் வாய் பிளந்து ஆச்சரியப்படுகிறார்கள். ஆண்டு தோறும் சில நூறு புதிய இளைய தலை-முறைக் கலைஞர்கள் அறி-முகமாகிறார்கள். சொல்லப்போனால் இந்த இளைய தலைமுறைக் கலைஞர்-களில் பலர் பணத்-துக்காக இசையைத் தேர்ந்தெடுக்காமல், இசையை இசைக்-காக நேசிப்பவர்களாகவும் இருக்-கிறார்கள்.
கர்நாடக இசை என்பதை நாம் தென்-னிந்திய இசை அல்லது திராவிட இசை என்று சொல்லுவதுதான் சரி. எப்-படித் தமிழர், கேரளத்தவர், கன்னடர், ஆந்திரர் ஆகிய அனை-வரையும் வட-வர்கள் மதராசிகள் என்று குறிப்பிடு-கிறார்களோ அதைப் போல, நமது தஞ்-சைத் தரணியில் தோன்றி தென்னக-மெங்கும் பரவிய தென்னக இசையைக் கர்நாடக இசை என்று குறிப்பிடுகி-றார்கள். ஆற்காடு நவாபுகள் அப்போது கர்நாடிக் நவாப் என்றும் அழைக்கப்-பட்டனர். இவர்கள் கிருஷ்ணா நதிக்கும் கொள்ளிடத்துக்கும் இடை-யிலான பகுதியை 1690 முதல் 1801 வரை ஆண்டு வந்தனர். மைசூர் உள்-பட உள்ள பகுதியை ஆண்ட கர்-நாடிக் நவாபுகளின் நாட்டுஇசையைக் கர்நாடக இசை என்று இந்துஸ்தானிய இசை மரபினர் அழைக்க முற்பட்ட-னர். இதுதான் வரலாற்று உண்மை.
சப்த ஸ்வரங்களின் அடிப்படை-யில் அமைந்த இசை எப்படித் தமி-ழிசை-யாகும் என்று கேட்பவர்கள் மறந்துவிடும் ஒன்று, இந்த சப்த ஸ்வ-ரங்கள் நமது பண்களின் பரிணாமம்-தான் என்பதை இசையும்,. முழவும், தாளமும், கூத்தும், அபிநயமும் ஆகிய இவை அய்ந்தும் பஞ்சமரபு என்பார்கள். பஞ்ச மரபு என்கிற சங்க கால நூலில் இசை மரபின் வங்-கிய மரபு என்கிற உட்பிரிவில் பாடல் 28-இல் சரி கம பத நி எனும் சுத்த எழுத்-தால், வரிபரந்த கண்மடவாய் வைக்கத் தெரிவரிய ஏழிசையும் தோன்றும். இதனுள்ளே பண் பிறக்கும். சூழ் முதலாம் சுத்தத் துளை என்று வங்கியம் (புல்லாங்குழல்) வர்ணிக்கப்-பட்டிருக்கிறது.
நமக்கே உரித்தான இந்த இசையை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்-டு-மானால் முதலில் அந்த இசை பாம-ரனுக்கும் புரியும் இசையாக இருக்க வேண்டும். அதற்கு அதிகமாகத் தமிழ் சாகித்யங்கள் (பாடல்கள்) கையாளப்-படவேண்டும். பெயருக்குத் துக்கடா-வாக ஒரு திருப்புகழோ, திருப்பா-வையோ பாடுவது என்பது இசையை மட்டுமல்ல, தமிழையும் கேவலப்படுத்து-வதாக இருக்கிறது.
இளைய தலைமுறைக் கலைஞர்கள் பலர் தமிழ் சாகித்யங்களை மட்டுமல்ல, தெலுங்கு சாகித்யங்களையும் ஆங்கி-லத்தில் எழுதி வைத்துப் பாடும் அவல நிலை ஏற்-பட்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தமிழில் பாடினால் மட்டும் போதாது. தமிழ் படித்துத் தமிழைச் சரியாக உச்சரித்தும் பாட-வேண்டும்.
கலைஞர்களை ஒப்பந்தம் செய்யும்-போது, நீங்கள் தமிழில் பாடுவதாக இருந்-தால்தான் வாய்ப்பு என்று ஏன் இந்த சபாக்-கள் நிபந்தனை விதிப்பதில்லை என்கிற நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறது விடுதலை நாளிதழ். நாமும் அந்தக் கருத்தையே பிரதிபலிக்கிறோம்.
இசை பாமரர்களைப் போய்ச் சேர-வேண்டும். இந்த நோக்கம் சென்னை சங்-கமத்தால் ஓரளவுக்கு செயல்வடிவம் கொள்-கிறது என்பதையும் இங்கே பதிவு செய்தாக வேண்டும். பூங்காக்களில் பாடும் பல கலை-ஞர்கள் பாமரர்கள் ரசிக்க வேண்டும் என்ப-தற்காகத் தமிழில் பாடுகிறார்கள். இவர்கள் சபாக்களில் பாடும்போது தமிழில் பாடுவ-தில்லையே ஏன்? அங்கே கூடும் ரசிகர்கள் தமிழ் பாடக்கூடாது என்று சொல்வார்களா என்ன? இல்லை. அவர்கள், வெளிநாட்ட-வர்களும் வெளிமாநிலத்தாருமா, தமி-ழர்கள்தானே?
பணக்கார நிலச்சுவான்தார்கள் மற்றும் ஜமீன்தார்களின் ஏகபோக உரிமையாக இருந்த இசை இன்று அனைவருக்கும் பொது-வாகி இருக்கிறது. இனி அதைப் பாம-ரனும் ரசிக்கும் நிலை ஏற்பட வேண்டும். அதற்குப் பள்ளிகளில் அய்ந்தாம் வகுப்பு வரை இசை கட்டாயமாகக் கற்றுத்தரப்பட வேண்டும். நமது சபாக்களும், இசைவாணர்-களும் தமிழிசைக்கு முன்னுரிமை தர-வேண்டும். தமிழகத்தில் தமிழில் பாடுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கும் கேவலம் இனியும் தொடரக்கூடாது!
(11.-1.-2010 நாளிட்டதினமணியின் தலையங்கம்இங்கேதரப்பட்டுள்ளது.)
(நன்றி: தினமணி 11.-1.-2010)

Wednesday, July 21, 2010

அமர்தியா குமார் சென்


இவர் பகுத்தறிவாளர்
அமர்தியா குமார் சென்
பெயர் : அமர்தியா குமார் சென்
வயது : 76 (3-_11_1933) துறை : பொருளாதாரம்
நாடு : மேற்கு வங்கம், இந்தியா
விருதுகள் 1998 ஆம் ஆண்டில் பொருளா-தாரத்-திற்கான நோபல் பரிசு பெற்றார்.
1999 ஆம் ஆண்டுக்கான பாரத ரத்னா விருது பெற்றார்.
2002 ஆம் ஆண்டுக்கான சர்-வதேச மனித நேய விருது (International Humanist Award). சர்வதேச மனித நேய மற்றும் நன்நெறி அமைப்பினரால் (International Humanist and Ethical Union) வழங்கப்பட்டது.
இதுவரை இவர் 80க்கும் மேற்-பட்ட கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்-ளார் (Honourary Doctorates).

அமர்தியா குமார் சென்னின் நாத்திக பஞ்ச்:
இந்து மதம் என்பது மனிதர்களை சமுதாய மற்றும் அரசியல் ரீதியாகப் பிரிக்கும் சக்தியாகும்

அவாள் சாமியார்கள்


அவாள் சாமியார்கள்

மனிதர்களை நல்வழிப்படுத்த உருவாக்கப்-பட்டதே மதங்கள்; இதிலும் எங்களது இந்துமதம் இருக்கிறதே அதன் பெருமைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது; பாரத வர்தத்தில் தோன்றிய வேதகால மதமான இந்துமதத்திற்கு பெருமை சேர்ப்பவை புராணங்-கள், இதிகாசங்கள், வேதங்கள், மடங்கள் அதன் சாமியார்கள்; இவர்கள்-தான் மனுஷாளுக்கு முன் மாதிரிகள் என்றெல்லாம் கதாகாலட்சேபம் நடத்தி தமது மதத்தை காப்-பாற்றி வருகிறது ஆரியம்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட காட்டுமிராண்டிக்கால சமூக வழக்கங்களை இன்றும் பிடித்துக் கொண்டு தொங்கி தமது சமூக நலனைப் பேணிவரு-கிறார்கள்.
வெள்ளைக்காரன் கொடுத்த விஞ்ஞானக் கொடைகளையெல்லாம் வெட்கமில்லாமல் ஏற்றுக் கொண்டு (அவாள் பாஷையில் சொல்-வதானால் மிலேச்சர்கள்) இந்துமதப் பெருமை-களைப் பீற்றிக்கொள்வதும், பிரச்சாரம் செய்-வதும் அவாளின் பணி.
கால மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு புதிய புதிய உத்திகளைக் கடைப்பிடித்து தம்-மைத் தக்கவைத்துக் கொள்ளும் ஆரியம், தமது ஆதிக்கத்தை மட்டும் விட்டுவிடாது. எந்தச் சூழலி-லும் சமூக அரசியல் தளத்தில் உச்சத்தில் இருப்பது, மதத்தின்பெயரால் மூட-நம்பிக்கை-களைப்பரப்புவது, பெண்ணடிமையைத் தொடர்ந்து வலியுறுத்துவது, இந்த மண்ணின் மைந்தர்களை இணையவிடாமல் பிரித்து வைத்-திருக்க ஜாதியின் சூழ்ச்சி செய்வது இவை-யெல்லா-வற்றையும் செய்து கொண்டே எங்கே பிரா-மணன்? என்று எக்காளம் பேசுவது _ இதுதான் ஆரியம்.
இந்த ஆரியம் இப்படி இறுமாப்போடு வாய்ச்-சவடால் அடித்தாலும் ஆண்டுக்-கொரு-முறை அதன் நாற்றம் வெளியே வந்து விடுகிறது. மௌ-டீக மகான்களான அவாள் வகையரா சாமியார்கள் அடித்த லௌகீகக் கூத்துகள் அம்பலத்துக்கு வந்து விடுகின்றன.
காஞ்சி ஜெயேந்திர சங்கராச்சாரி அப்படித்-தான் மாட்டினார். கொலை வழக்கில் கைதான-வரின் கதையைத் தோண்டித் துருவிய போது பாலி-யல் சல்லாபங்கள் சதிராடின. இதே வழி-யில் காஞ்சியிலேயே ஒரு பார்ப்பன அர்ச்சகர் தேவனாதன் கடந்த மாதம் மாட்டி இப்போது கம்பி எண்ணிக்-கொண்டிருக்-கிறார்.
இவருக்கு அடுத்து புதிதாய் ஒருவர் விசா-ரணை வளையத்தில் இருக்கிறார். அவர் பெயர் ஈஸ்வரஸ்ரீகுமார் சாமியார். இவரும் அவாள் வகையறாதான் என்று அடையாறு பகுதி மக்கள் கூறுகின்றனர். இன்னும் ஒரு கொசுறுத் தகவல், இந்த ஈஸ்வர ஸ்ரீகுமார் சாமியார் காஞ்சி சங்கர மடத்துக்கு மிகவும் நெருக்கமானவர் என்கிறது பத்திரிகையாளர்கள் வட்டாரம். எப்படி மாட்டினார் இந்த சாமியார்? சென்னை அடையாறு சர்தார்பட்டேல் சாலையில் சக்தி விலாஸ் மெஷின் என்ற நிறுவனம் நடத்தி வந்தாராம். அங்கு வேலைக்கு ஆள் எடுப்பது அறிந்து சென்ற தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஹேமலதா என்ற பெண், நல்ல வேலை கிடைக்கும்கிற கனவோட அங்க போனேன். ஆனா அந்த சாமியாரால் என் வாழ்க்கையே நடுத்-தெருவுக்கு வரப்போகுங்கிறது அப்ப எனக்கு தெரியாமல் போச்சு, என்று அழுகிறார்.
தான் எப்படி அவமானப்படுத்தப்பட்டேன் என்பதை ஹேமலதா கூறுகிறார்:-_
இண்டர்வியூவில் சிவப்பு உடையில் இருந்த சாமியாரைப் பார்த்ததும் மரியாதையாகக் கும்பிட்டேன். ரொம்ப அன்பா என்னைப் பத்தி விசாரிச்சார். பிறகு உனக்கு என் நிறுவனத்தில் சூப்பர்வைஸர் வேலை போட்டுத்தர்றேன். எங்க நிறுவனத்தின் முழுப்பொறுப்பும் உன் கையில்-தான் இருக்கும். கொஞ்சநாள் இங்க வேலை பார்த்தபின் சிங்கப்பூரில் நம்ம பிராஞ்ச்-சைப் பார்த்துக்கணும். பெரிய சம்பளத்தில் வேலை போட்டுதர்றேன் என்று சாமியார் சொல்ல சொல்ல... பூரிச்சுப் போய்வட்டேன். சரி வேலைக்-கான ஆர்டரைத் தர்ரேன். வாங்கிட்டுப் போம்-மான்னு ஒரு அறையில் என்னை உட்காரச்-சொல்லிட்டு சாமியாரே காபி போட்டுக் கொண்-டு-வந்தார். அதைக் குடிச்ச நான்... அப்படியே மயக்கமாயிட்டேன்.
எனக்கு நினைவு திரும்பியபோது... என் ஆடைகள் அலங்கோலமா இருப்பதைப் பார்த்து பதட்டமா எழுந்திரிச்சி உட்கார்ந்தேன். பக்கத்தில் அந்த சாமியார் சிரித்தபடியே உட்-காந்திருந்தான். மயக்கத்தில் இருந்தபோது என்-னை இந்த சாமியார் சூறையாடியிருக்கான் என்று புரிஞ்சிபோச்சு... அடப்பாவி இப்படிப் பண்ணி-ட்டியேடான்னு சத்தம் போட்டேன். அந்த சாமி-யாரோ பதட்டமே இல்லாம... மயக்கத்-திலேயே உன்னை முழுசா படமெடுத்துட்டேன். சும்மா சொல்லக்கூடாது. உனக்கு அட்டகாச-மான உடம்பு. நீ சத்தம்போட்டு ஊரைக்கூட்-டினா... இங்க நான் மட்டும் பார்த்த உன் வெத்து-டம்-பை... உலகமே பார்க்கும்படி இண்டர்-நெட்டில் போட்டுடுவேன்னு மிராட்டினான். சாமியார் வேசம் போட்டு இப்படிப் பண்ணிட்-யேடா.. நீ நல்ல இருக்கமாட்டேன்னு... திட்டிட்டு வீட்டுக்கு வந்தேன். (நன்றி : நக்கீரன்)
பலமுறை இதேபோல மிரட்டியே பாலியல் வன்முறை செய்ததாக ஹேமலதா குற்றம் சாட்டி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
பகலில் சாதாரண உடையிலும் மாலை நேரங்களில் சாமியார் உடையிலும் இருப்பது ஈஸ்வர ஸ்ரீ குமாரின் வழக்கமாம். பெரிய தொழிலதிபர்களுக்காக சிறப்பு பூஜைகள் நடத்துவதும் இவரது தொழில் என்கிறார்கள். மத்திய அரசின் தொழிலாளர் நலக்குழுவின் உறுப்பினராக உள்ள இந்த ஈஸ்வரஸ்ரீகுமார், இந்த பதவியைக் காட்டி தன்னையாரும் நெருங்க முடியாதபடி அரண் அமைத்துக் கொண்டுள்-ளார்.
இந்த நிலையில் ஹேமலதா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரின் பேரில் மாம்பலம் காவலர்கள் ஈஸ்வரஸ்ரீகுமாரின் மீது கற்பழிப்பு மற்றும் கொலைமிரட்டல் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி-யுள்ளனர். ஹேமலதாவை மருத்துவ பரி-சோதனை செய்ய காவல்துறை முடிவுசெய்து சென்னை அரசு பொதுமருத்துவமனையிலும், எழும்பூர் மகப்பேறு மருத்துவ மனையிலும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்-பட்-டுள்ளன. புகார் கொடுத்த ஹேமலதா உள்பட 4 பேரிடம் இதுவரை விசாரித்துள்-ளோம். விசா-ரணை முடிந்த பிறகுதான் சாமியார் ஸ்ரீகுமாரை கைது செய்வது பற்றி முடிவு செய்யப்படும் என்று சென்னை காவல் ஆணையர் ராஜேந்-திரன் கூறியுள்ளார்.
ஹேமலதா மீதான வன்தாக்குதல் தவிர சிங்கப்பூரில் உள்ள இந்த சாமியாரின் வீட்டில் வேலை பார்த்த லூசி என்ற கேரள பெண்ணை ஆபாச படம் என்று பலமுறை நாசம் செய்த-தா-கவும், அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்-டதாகவும், இந்த விவகாரத்தில் சிங்கப்பூர் காவல்-துறை சாமியார் சிக்கியதாகவும் ஹேமலதா குற்றம் சாட்டியுள்ளார்.
யாரும் எந்த வாழ்க்கை நிலையிலும் எந்த வயதிலும் திடீரென காவி அணிந்து மடம் அமைத்து சாமியார் என தன்னைப் பறை சாற்றிக் கொள்ள இந்து மதம் லைசன்ஸ் அளித்-துள்ளது. மதரீதியாக இந்துமதத்தலைவர்-கள் வழி-காட்டிகள் என்று கூறிக் கொள்ளும் ஆச்-சார்யார்கள் இந்தச் செயல்களைச் கண்டிப்-ப-தில்லை. இதனால்தான் 10 வயது குட்டி சாமி-யாரில் தொடங்கி குமரிகளைக் களங்கப் படுத்தும் குடுகுடு கிழட்டு சாமியார்கள் வரை படை-யெடுக்கிறார்கள்.
பொது நலம் சார்ந்தாவது ஒழுக்க நெறிகளை மீறும் இத்தகைய பேர்வழிகளை இந்துமத அபி-மானிகளோ, இந்துத்துவம் ஒரு வாழ்வியல் வழி முறை என்று சொல்லிக்கொள்வோர்களே கண்டிப்-பதில்லை. கோயில் கருவறையில் சரச சல்லாபம் நடத்திய அர்ச்சகர் தேவநாதனையோ, அரசுக் குழு ஒன்றின் உறுப்பினர், ஒரு வி.அய்.பி என்ற போர்வையிலும் இந்துமதம் வழங்கிய சாமியார் லைசன்சுடனும் இருக்கும் ஈஸ்வர ஸ்ரீகுமாரையோ கண்டித்து இந்துத்துவாக்கள் இதுவரை ஒரு வார்த்தைகூட உதிர்க்கவில்லை.
மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்ற மனப்பான்மையில்தான் பார்ப்பனீயம் இன்னும் இருக்கிறது. ஊரு உலகத்துக்கெல்லாம் நியாயம் பேசும் சோவானவர் வாய்மூடிக்கொண்டு பேனாமூடியைத் திறக்காமல்தான் உள்ளார். பார்ப்பனப் பத்திரிகைகளும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை, இதுதான் அவாள் தர்மம்.
இத்தகைய சாமியார்கள் மீது புகார்கள் எழும் போதெல்லாம் பொது மக்களிடம் இருந்து ஒரு குரல் எழுகிறது. சாமியார்களும் மடங்கள் நடத்துவோர்களும் தொடர்ந்து கண்காணிக்கப் படவேண்டும் என்றே அந்தக் குரல் ஒலிக்கிறது.
- மணிமகன்

இங்கே பிராமணர்கள்!


இங்கே பிராமணர்கள்!
எங்கே பிராமணன் எங்கே பிராமணன்? என்று திருவாளர் சோ ராமசாமி அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கிறார். துக்ளக்-கில் எழுதி ஒரு புத்தகமாக-வும் போட்டு விட்டார். ஜெயா தொலைக்-காட்சியிலும் தோன்றி விளக்கங்களை விஸ்தாரமாக அள்ளியும் கொட்டினார்.
அதற்கெல்லாம் பெரிய விளக்கங்கள் தேவைப்-படாது எங்கே பிரா-மணன் என்ற அவரின் கேள்விக்கு முகவரியுடன் மிக எளிமையாகப் பதில் சொல்லிவிடலாம்.
காஞ்சிபுரம், காஞ்சி-புரம் என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கே மச்சேஸ்வரர் மச்சேஸ்வரர் என்று ஒரு கோயில் இருக்கிறது. அந்தக் கோயி-லில் தேவநாதன் _ தேவ-நாதன் என்று அர்ச்சகன் இருக்-கிறான் _ அவன்-தான் பிராமணன் அந்த முகவரியைத் தேடி இப்-பொழுது அலைய வேண்-டாம் சோ.
அவன் மச்சேஸ்வரன் கோயில் கர்ப்பக்கிரகத்-திலேயே பல பெண்-களைக் கெடுத்திருக்கிறான். கிருஷ்ண பகவானின் காமலீலைகளை நடத்தி-யிருக்-கிறான்.
இப்பொழுது அந்த ஆசாமி வேலூர் ஜெயி-லில் இருக்கிறான். இனி நீதி-மன்றத்துக்கும் அவ-னால் வரவே முடியாது. காரணம் நீதிமன்றம் வந்தால் _ அந்த அர்ச்-சகப் பார்ப்பானைப் பார்த்த மாத்திரத்தி-லேயே தமிழச்சிகள் கையில் செருப்பையும், துடைப்பத்-தையும் எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்கள். அத-னால் அவன் இருக்கும் வேலூர் ஜெயிலுக்கு திரு-வாளர் சோ ராமசாமி மனுப் போட்டுப் பார்க்க-லாம்; பட்சணங்களையும் கொண்டு போய் கொடுக்--கலாம்.
இன்னொரு கொசுரு பேஷா இருக்கிறது -_ அந்தத் தேவ-நாதனின் தோப்பனார் ஒன்-று சொல்லியிருக்-கிறார்.
சின்ன வயதிலிருந்தே வேத சாஸ்திரம், ஸ்மிருதி-களையெல்லாம் சொல்லிக் கொடுத்து வளர்த்தேனே _ அவனா இப்படி ஆகி விட்டான் என்ற கண்ணீர் வடித்-திருக்கிறார்.
பிரச்சினையே அது-தான். வேதங்களும், உபநிஷத்துகளும் இந்தச் சமாச்சாரங்-களைத் தானே சொல்லிக் கொடுக்கின்றன.
உடம்பு முழுவதும் நெய்யைத் தடவிக் கொண்டு ஒரு பெண்-ணானவள் யாருடன் புணர்ந்தாலும் விபச்சார தோஷம் இல்லை என்று யாக்ஞவல்யர் எழுதி வைத்து விட்டுப் போயி-ருக்-கிறாரே (நூல்: சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஞானசூரியன்)
ஓர் அழகிய பெண்-ணின் குறியைப் பார்த்துக் கொண்டு பத்தாயிரம் மந்திர செபம் பண்ணு-கிறவன் தேவகுருவுக்குச் சமமானவன் (நூல்: ஞான-சூரியன்).
தேவகுரு என்றாலும் தேவநாதன் என்றாலும் (என்னே பெயர் பொருத்-தம்!) ஒன்றுதானே! இவற்-றையெல்லாம் தன்மகன் தேவநாதனுக்குச் சிறு வயதி-லேயே சொல்லிக் கொடுத்தால் அவன் இப்படித் தானே நடந்து கொள்-வான்?
- மயிலாடன்

Friday, July 9, 2010

அசத்திய சூரிய கிரகணம் அகன்ற மூடநம்பிக்கைகள்



1. அழைப்பு மணி, 2. அல்லிப்பூ, 3. உமி, நெல், 4. கீரை விதை, 5. அரிசிச் சோறு, 6. வயிறு, 7. கண்கள், கைகள், விரல்கள், நாக்கு, 8. பாகற்காய், 9. வானில் நிலா, 10. ஊமத்தம் பூ சூரிய கிரகணம் எனப்படும் சூரியன் மறைப்பு என்பது வானில் நடக்கும் இயல்பான நிகழ்வுகளில் ஒன்றாகும். தத்தமது வட்டப்பாதையில் சுற்றிவரும் சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றும் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை ஒரே நேர்கோட்டில் வரும். அவ்வாறு வரும்போது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு வந்தால், பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனின் ஒளியை நிலவு மறைக்கும். இதுவே சூரிய கிரகணம் எனப்படும்.

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வந்தால், பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும். இம்மறைப்பை சந்திர கிரகணம் என்கிறோம். இது மிகவும் இயல்பான நிகழ்வு ஆகும். ஆனால், ஒளிவீசி நிற்கும் கதிரவனின் ஒளி பகல் வேளையிலேயே மறைவது என்பது ஆச்சரியப்படத்தக்க ஒன்றாகும். அதனால் தான் சூரிய கிரகணம் பெரிதும் எதிர்பார்ப்போடு நோக்கப்படுகிறது. இவ்வாறு நிகழும் கிரகணங்கள் பூமியின் ஒரு பகுதியில் முழுமை யாகவும், மற்ற பகுதிகளில் பாதி மறைப்பாக வும், அதற்கும் குறைவாகவும் தெரியும். இம்முறை சூரிய கிரகணம் இந்தியாவின் வட பகுதிகளில் தெரிந்தது. தமிழ்நாட்டில் பகுதி மறைப்பாகத் தெரிந்தது.

ஆதிகாலத்தில், இது பற்றிய அறிவற்ற மனித இனம், வழக்கமான இரவு, பகல் என்பது மட்டுமல்லாமல், பகல் வேளையிலேயே திடீரென நடக்கும் இரவு போன்ற இந்நிகழ்வைக் கண்டு அஞ்சியது. அதனால், இதற்குக் காரணமாக பல்வேறு மூடநம்பிக்கை கள் உருவாயின. சூரியனை பறவை ஒன்று மறைப்பதாக தென் அமெரிக்காவிலும், சூரியனை டிராகன் மறைப்பதாக சீனாவிலும், ராகு, கேது என்ற பாம்புகள் சூரியனையும், சந்திரனையும் விழுங்குவதாக இந்து மதத்திலும், இன்னும் இது போன்ற மூட நம்பிக்கைகள் எங்கும் நிறைந்தன. அறிவு வளர்ந்த இக்காலத்திலும், இத்தகைய மூடநம்பிக்கைகள் பெருகி, அதற்குப் பெரு விளம்பரமும் கிடைத்துவிடுகிறது. சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் வெறுங்கண் ணால் சூரியனை பார்த்தால் திடீரென வெளிச்சக் குறைவும், மிகுதியும் மாறி மாறி ஏற்படுவதால் விழித்திரை பாதிக்கப்படும் என்பதால் அறிவியலாளர்கள் எச்சரிக்கை வெளியிட்டனர். ஆனால் மூடநம்பிக்கை வியாபாரிகளோ, இதுதான் சமயமென்று தங்கள் கொள்ளையைத் தொடங்கி விடுகின்றனர்.

சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் மீண்டும் சுனாமி ஏற்படும் என்று ஒரு ஜோதிடர் புருடா கிளப்பிவிட்டார். அதை அனைத்து பத்திரிகைகளும் பெரிதாய் வெளியிட்டன. இயற்கை நிகழ்வான சூரிய கிரகணம் ஏன் நடக்கிறது என்றும் இவர்களுக்குத் தெரிவ தில்லை; இயற்கைப் பேரழிவான சுனாமி எப்படி ஏற்படுகிறது என்றும் இவர்களுக்குத் தெரிவதில்லை. ஆனால், ஏதாவதொன்று கிடைத்தால் போதுமென்று மூடநம்பிக்கை சரக்கை மட்டும் அவிழ்த்துவிட்டுவிடுவார்கள்.

இது மட்டுமல்ல... சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் சாப்பிடக்கூடாது என்றும் ஒரு மூட நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட நமது ஆசிரியர் தாத்தா கி.வீரமணி அவர்கள் என்ன செய்தார் தெரியுமா? சென்னை பெரியார் திடல், தஞ்சையில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், திருச்சி உள்ளிட்ட பிற இடங்களில் உள்ள பெரியார் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் 2009 சூலை 22-ஆம் தேதி சூரியகிரகணம் நிகழ்ந்த அதே காலை 6 மணி முதல் 7.30 மணி வரையிலான நேரத்தில் காலை சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்தார். வேடிக்கையாக அதற்கு உண்ணும் விரதம் என்றும் பெயரிட்டார்.

இவையெல்லாம் மூடநம்பிக்கைகள் என்று சொல்லிக்காட்டுவதைக் காட்டிலும், அதை முறியடிக்கும் விதமாக செய்முறை விளக்கம் தந்தால் தானே சரியாக இருக்கும். அதிலும் கரும்புதின்னக் கூலியா என்று கேட்பதைப்போல, மூடநம்பிக்கையை முறியடிக்க சிற்றுண்டி என்றால் சும்மாவா? 22-ஆம் தேதி காலையில் மூடநம்பிக்கை யாளர்களெல்லாம் வீட்டுக்குள் பசியுடன் முடங்கிக் கிடக்க, பெரியார் திடலிலும், பெரியார் கல்வி நிறுவனங்களிலும், இனிப்புடன் கூடிய சிற்றுண்டியை சுவைத்து மகிழ்ந்தார்கள்.
ஜூலை 22-ஆம் தேதி நமது பெரியார் பிஞ்சு ஒருவருக்கும் பிறந்தநாள். வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தோழர் பிரபாகரன் - லதா இணணயரின் மகனான அந்த பெரியார் பிஞ்சுக்கு அறிவுச் செல்வன் என பெயர் சூட்டி, பிறந்த நாள் கேக்கினை வெட்டி ஊட்டினார் ஆசிரியர் தாத்தா.

மூடநம்பிக்கையை முறியடிக்க நடைபெற்ற வித்தியாசமான இந்த உண்ணும் விரதம் குறித்து செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் வந்திருந்தவர்களைப் பார்த்து பிரமித்தார்கள். ஆசிரியர் தாத்தாவிடமும் மற்றும் பிறரிடமும் இந்நிகழ்ச்சி குறித்து பேட்டியெடுத்தார்கள். செய்தியாளர்களையும் உணவருந்தச் சொன்ன ஆசிரியர் தாத்தா, "தைரியமா சாப்பிடுங்க... நாங்கள்லாம் சாப்பிட்டுட்டு நல்லாத் தானே இருக்கோம். பயப்படாதீங்க!" என்று அழைத்து, மேலும், "நாளைக்கு கூட வந்து பாருங்க.. நாங்கள்லாம் நல்லாத்தான் இருப்போம்." என்றார் பாருங்க.. அன்னைக்கு காலையில சிற்றுண்டி சாப்பிட்ட நானும் நல்லா இருக்கிறதினால்தானே இப்போ இதை எழுதியிருக்கேன்....!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...