Thursday, December 30, 2010

பார்ப்பன ஊடகங்களின் பத்திரிகா தர்மம் இதுதான்!

உண்மைத் தமிழர்களே புரிந்துகொள்ளுங்கள்!!

சி.பி.அய். விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து சென்னை திரும்பிய முன்னாள் மத்திய அமைச்சர்  மானமிகு ஆ.இராசா அவர்கள், நேற்று தி.மு.க.வின் தலைவர், முதல்வர் கலைஞர் அவர்களைச் சந்தித்தார். முதல்வர் கலைஞர் அவர்கள் அவரை தனனுடன் வரச் சொல்லி, தனது காரில் அழைத்துச் சென்று, சில மணிநேரம் உரையாடி, பிறகு இவர் விடைபெற, அனுப்பி வைத்தார்!

தி.மு.கழகத் தலைவரின் கட்டளையை ஏற்று, நாடு முழுவதும் ஸ்பெக்ட்ரம் 2ஜி பற்றிய புரளிப் பிரச்சினை பலூனை தி.மு.க. பிரச்சார மேடைகளும், தி.க. பிரச்சார மேடைகளும் ஊசி குத்தி, ஒன்றுமில்லாமல் ஆக்கி உண்மை விளக்கங்களைத் தருகின்றனர்!

பார்ப்பன ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்கள் கிழிந்து, பலூன் சுருங்கி தொங்க ஆரம்பித்து விட்டனவே!
புரிந்துகொள்ளுங்கள்! புரிந்துகொள்ளுங்கள்!!

சிங்கள தேசிய கீதத்தை எதிர்த்த தமிழின அதிகாரி படுகொலை! - தமிழர் தலைவர் அறிக்கை

தமிழர்களுக்கென்று உலகில் ஒரு நாடு தேவை என்ற உணர்வைத்தான் சிங்கள அரசின் செயல்பாடுகள் ஏற்படுத்துகின்றன

தமிழில் தேசிய கீதம் பாடக் கூடாது; சிங்கள மொழியில்தான் பாடவேண்டும் என்ற நிலையை இலங்கை அரசு மேற்கொண்அடுள்ள நிலையில், அதனை எதிர்த்த தமிழின அதிகாரி மா. சிவலிங்கம் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். போர் ஓய்ந்து தமிழர்கள் மீதான அழிவு வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டி, ஈழத்தில் தமிழர்கள் உரிமை மீட்கப்பட, உலக அளவில் தமிழர்களுக்கென்று ஒரு நாடு தேவை என்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் லீக் வான்யூ - இலங்கை அதிபர் ராஜபக்சே பற்றி கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பது அன்றாடம் இலங்கைத் தீவில் தமிழர் களுக்கு எதிராக நடைபெற்றுவரும் கொடுமைகள் நிரூபித்து வருகின்றன.
சிங்கள இனவெறி இன்னும் அடங்கவில்லை

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொன்றொழிக் கப்பட்டும், இன்னும் சிங்கள வெறியர்களின் தமிழர் களுக்கு எதிரான படுகொலைப் பசியின் வெறி இன்னும் தீரவில்லை என்றே தெரிகிறது.

இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடக் கூடாது; சிங்கள மொழியில் மட்டுமேதான் அது இருக்கவேண்டும் என்ற ஒரு நிலையை சிங்கள அரசு மேற்கொண்டது. கடும் எதிர்ப்பு ஈழத் தமிழர்கள் மத்தியிலும், உலகத் தமிழர்கள் மத்தியிலும் வெடித்தெழுந்தது. இந்த நிலையில் அவ்வாறு முடிவெடுக்கப்படவில்லை என்று இலங்கை அமைச்சர் ஒருவர் சமாதானம் கூறினர்.

ஆனாலும், நடைமுறையில் சிங்கள மொழியில்தான் தேசிய கீதம் பாடப்பட்டு வருகிறது.
தமிழின அதிகாரி படுகொலை

யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியைச் சேர்ந்த கல்வித் துறை துணை இயக்குநர் மா. சிவலிங்கம் - சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் பாடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் கடந்த ஞாயிறன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி தமிழர்களின் ரத்தம் மட்டுமல்ல; மனிதநேயம் கொண்ட ஒவ்வொருவரின் ரத்தமும் உறைகிறது.

தமிழர்கள் எந்த வகையிலும் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கக் கூடாது; அப்படிக் குரல் கொடுத்தால் இந்தச் சிவலிங்கத்துக்கு ஏற்பட்ட கெதிதான் அவர்களுக்கும் என்று எச்சரிக்கின்ற அபாய அறிவிப்புதான் இது.

விபீஷணன் பிறந்த மண்ணில்...

சிங்கள அரசால் உருவாக்கப்பட்ட துரோகிகளான கருணா அல்லது டக்ளஸ் தேவானந்தாவின் ஆள்கள் தான் இதனைச் செய்திருக்கவேண்டும். அல்லது சிங்கள இராணுவத்தினரேகூட மாற்றுடையில் இந்தக் கேவல மான படுகொலையைச் செய்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.

அந்த இலங்கைத் தீவிலேதானே இராவணனோடு உடன் பிறந்து, காட்டிக் கொடுத்து ஆழ்வார் பட்டம் பெற்ற விபீஷணர்கள் தோன்றினார்கள் - அந்தக் கதை இன்னும் தொடர்வது வெட்கக்கேடு!

துரோகிகள் செய்திருந்தாலும் சரி, இராணுவத்தினரே செய்திருந்தாலும் சரி, அதற்குப் பின்புலமாகவும், பலமாக வும் இருந்து வருவது - இலங்கையின் சிங்கள அரசு - ராஜபக்சே என்னும் 21 ஆம் நூற்றாண்டின் ஹிட்லர்.

உலகம் முழுவதும் கடுமையான கண்டனத்துக்கும், வெறுப்புக்கும் ஆளாகியும்கூட, இந்த மனிதன் திருந்துவ தாகக் காணோம்.

லண்டனில் அவமானப்பட்டும் புத்தி வரவில்லையே!

சில நாள்களுக்குமுன் லண்டன் சென்று - அங்குள்ள தமிழர்களால் அவமானப்படுத்தப்பட்டு நாடு திரும்பிய நிலையில்கூட புத்தி கொள்முதல் பெறவில்லை.
போர்க் குற்றவாளியாக உலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டனை அளிக்கப்பட்டாலொழிய இதற் கொரு தீர்வைக் காணமுடியாது.

இதில் மிகவும் வருத்தப்படவேண்டியது - இந்த ஹிட்லரை போர்க் குற்றவாளியாக அறிவிப்பதற்குத் தடையாக இருப்பது இந்திய அரசுதான். இத்தகைய இந்திய அரசின் நடவடிக்கை மூலம் உலக அரங்கில் இந்தியாவின் மரியாதையில் கறை படிந்துவிட்டது. என்றாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் 2011 ஆம் ஆண்டில் இலங்கை, இந்தியக் கடற்படையினர் இணைந்து இலங்கைக் கடற்பரப்பில் பயிற்சி நடவடிக்கை களை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்!

இந்திய அரசின் வருந்தத்தக்க செயல்பாடு!

இந்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் பல வகைகளிலும் வேண்டுகோள் விடுத்தும், உலகத் தமிழர்கள் வலியுறுத்தியும், மனித உரிமை அமைப்புகள் எடுத்துச் சொல்லியும் இந்தியா ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற ரீதியில் செயல்பட்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

பன்னாட்டுப் பொது மன்னிப்புப் பேரவையும் (International Amnesty), ஆசிய இயக்குநர் சாம் ஜெர்பி விடுதலைப் புலிகள் அழிப்பு என்ற பெயரில் பெரும் அளவுக்குப் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று தெரிந்திருந்தும்கூட, இந்தியா இலங்கையை ஆதரித்தது என்று கூறவில்லையா?

தமிழர் இறையாண்மை மாநாடு

சென்னையை அடுத்த மறைமலை நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற தமிழர் இறையாண்மை மாநாட்டில் (26.12.2010) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிநாதம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இவற்றின் மூலம் பெறப்படும் உண்மையாகும்.

உலகில் தமிழனுக்கென்று ஒரு நாடு இருந்தால், ஈழத்தில் இவ்வளவுப் பெரிய கொடுமை தமிழர்களுக்கு எதிராக நடந்திருக்க வாய்ப்புண்டா?

இலங்கை சிங்கள அரசும், இந்திய அரசும் நடந்து கொண்டுவரும் போக்கு - இதுபற்றிய உரத்த சிந்தனையை உலகத் தமிழின மக்கள் மத்தியில் ஏற்படுத்தித்தான் தீரும் என்று சுட்டிக்காட்டுவது நமது முக்கிய கடமையாகும்.

விடுதலை பிறக்கும் இடம்!

கொடுமைகளின் மத்தியிலும், உரிமைகள் பறிப்பின் இடத்திலிருந்தும்தானே உரிமை முழக்கம் என்ற விடுதலைக் குழந்தை பிறக்கிறது. வரலாறு கற்பிக்கும் இந்தப் பாடத்தை அறிந்திராவிட்டால், அதற்கு உலகத் தமிழர்கள் பொறுப்பல்ல!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழர் இறையாண்மை மாநாட்டுத் தீர்மானங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகரில் 26.12.2010 அன்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற தமிழர் இறையாண்மை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

(கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முன்மொழிந்தவை)

1.வீரவணக்கம்

அன்னைத் தமிழையும் அருந்தமிழ் இனத்தையும் ஆதித்தமிழ் மண்ணையும் பாதுகாத்திடவும், மேம்படுத்திடவும் முதல் மொழிப்போர் தொடங்கிய காலமான 1938-லிருந்து இதுவரை யிலும் தமிழகம் தமிழீழம் உள்ளிட்ட அனைத்துலக நாடுகளெங் கிலும் அரசியல் இலக்கியம் பண்பாடு உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் பாடாற்றித் தம்வாழ்வை ஈகம் செய்த அனைத்துச் சான்றோருக்கும் அற வழியிலும், ஆயுத வழியிலும் போராடி களப்பலியான தமிழகத்தைச் சார்ந்த கரும்புலி முத்துக்குமார் உள்ளிட்ட போராளிகளுக்கும் தமிழீழ விடுதலைப்போரில் உயிரீந்த பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து மாவீரர்களுக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இம்மாநாடு தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.
அத்துடன் புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார் போன்ற மாமனிதர்களின் மகத்தான கொள்கை வழியில் தமிழகத்திலும் பிற இந்திய மாநிலங்களிலும் தீண்டாமை உள்ளிட்ட இந்துத்துவ வன் கொடுமைகளை எதிர்த்து சாதி ஒழிப்புக் களத்தில் போராடிக் களப்பலியான சாதி ஒழிப்புப் போராளிகள் அனைவருக்கும் இம்மாநாட்டில் திரண்டிருக்கும் இலட்சக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். மேலும் கடந்த 2004ஆம் ஆண்டு திசம்பர் 26 அன்று நடந்த ஆழிப்பேரலையின் தாக்குதலில் உயிர்நீத்த அனை வருக்கும் இந்நேரத்தில் எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம்.

2.இறையாண்மையை வென்றெடுப்போம்

உலகிலுள்ள ஒவ்வொரு இனமும் மொழிவழி தேசியத்தின் அடிப்படையில் அல்லது மதவழி தேசியத்தின் அடிப்படையில் தமக்கான நாடு மற்றும் அரசை உருவாக்கி தம்மைத்தாமே ஆட்சி செய்து கொள்ளும் இறையாண்மையைப் பெற்றுள்ளது. மேலும் பல தேசிய இனங்கள் புதிது புதிதான தேசங்களையும் அரசுகளையும் உருவாக்கி தத்தமது இறையாண்மையென்னும் தன்னாட்சி உரிமைகளை வென்றெடுத்து வருகின்றன. இந்நிலையில் உலக மெங்கும் ஏறத்தாழ பத்து கோடி மக்கள் தொகையைக்கொண்ட உலகின் மூத்தகுடியும், முதல் குடியுமான தமிழ்க்குடி மக்களுக் கென ஒரு நாடு வேண்டும் என்றும் அது தமிழீழமாக மலர வேண்டு மென்றும் கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஆயுதமில்லா அறவழியிலும், ஆயுதமேந்திய அறவழியிலும் தமிழீழ விடுதலைப் போர் நடந்து வருகிறது. அப்போர் தற்போதைய சூழலில் இடைக் காலமாக ஒரு பெரும் பின்னடைவுக்குத் தள்ளப்பட்டிருந்தாலும் அது முற்றும் முழுதாக முடிந்து விட்ட ஒன்றல்ல! ஏனெனில் அது வெறும் மண்மீட்புப்போர் அல்ல ஒரு  தேசிய இனத்தின் இறையாண்மை மீட்சிக்கான போர்! ஏற்கெனவே நாடு அரசு ஆட்சி என்னும் கட்டமைப்புக்களைக் கொண்ட இறையாண்மையை யுடைய ஒரு தேசிய இனமாக வாழ்ந்த தமிழினம் இழந்து போன இறையாண்மையை வென்றெடுக்கவே இன்று இந்த விடுதலைப் போரை நடத்தி வருகிறது. எனவே தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றுத் தேவைகளான தாயகம் தேசியம் தன்னாட்சி என்னும் இறையாண்மைக் கோரிக்கைகளை அனைத்துலகச் சமூகம் முதலில் கொள்கையளவில் இசைந்தேற்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!  ஆயுதப் போராட்ட வடிவம் அங்கே இடைக்காலமாக அழித்தொழிக்கப் பட்டாலும் விடுதலைப்போராட்டத்திற்கான தேவைகளும் காரணங்களும் அழித்தொழிக்க முடியாதவைகளாக உள்ளன. எனவே இலங்கைத் தீவில் நீடிக்கும் இனச்சிக்கலுக்கு தமிழீழ விடுதலைதான் ஒரே தீர்வாகும் என்பதை அனைத்துலகச் சமூகம் கொள்கையளவில் ஏற்பதுடன் தமிழீழத்தை மீட்பதற்கு அனைத்து வகை ஆதரவையும் வழங்கிட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

3.ஈழத் தமிழர்களின் இறையாண்மை

50 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்து அனைத்து  வழிகளிலும் போராடித் தனித் தமிழ் ஈழ அரசை நடத்தி வந்த ஈழத்தமிழர்களின் இறையாண்மையினையும், அதன் வெளிப்பாடான தமிழ் ஈழ அரசையும் உலக நாடுகள் அங்கீ கரிக்க தவறிவிட்டன. வல்லரசிய நலன்களைக் கருத்தில்கொண்டு உலக நாடுகளால் ஈழ அரசு அங்கீகரிக்கப்படாமல் புறக்கணிக்கப் பட்டது என்பது அய்.நா.பேரவை தேசிய இனங்களுக்கு வழங்கி யுள்ள அரசியல் பாதுகாப்பை மீறிய செயலாகும். உலகிலுள்ள எண்ணற்ற தீவு நாடுகளில் மிகக்குறைந்த மக்கட்தொகையைக் கொண்ட 38 நாடுகளை உறுப்பு நாடுகளாக அய்.நா.பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் மிகக்குறைந்த மக்கட் தொகையைக் கொண்ட 14 தீவு நாடுகளை உறுப்பினரல்லாத அங்கீகரிக்கப்பட்ட நாடுகளாக அய்.நா.பேரவை அதிகாரபூர்வ மாக அறிவித்துள்ளது. அதனடிப்படையில் தமிழ் ஈழத்தையும் அங்கீகரிக்க வலியுறுத்தி அய்.நா. பேரவைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இம்மாநாடு தமிழக மற்றும் இந்திய அரசுகளுக்கும், உலகத்தமிழர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறது.

4.சிங்களமயப்படுத்தும் போக்கிற்குக் கண்டனம்

தமிழீழ மக்களின் பூர்வீகத்தாயகமான இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு மாகாணப் பகுதிகளில் நிலையான சிங்களப்படை முகாம்களை நிறுவியும் படையினரின் குடும்பத்தினர் என்ற பெயரில் சிங்களர்களை வெகுவாக குடியேற்றம் செய்தும் ஊர்கள், நகரங்கள், வீதிகள் என யாவற்றின் தமிழ்ப்பெயர்களையும் அகற்றி சிங்களப்பெயர்களைச் சூட்டியும், ஒட்டு மொத்த தமிழீழத்தையும் சிங்கள-பவுத்த மயமாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டும் வருகின்றனர் சிங்கள இன வெறியர்கள்! தமிழீழத்தை ஆக்கிரமிக்கும் இந்தக் கொடூரப்போக்கைத் தடுத்து நிறுத்தவும் அப்புறப்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அய்க்கிய நாடுகள் பேரவை மற்றும் இந்தியா உள்ளிட்ட அனைத்துலகச் சமூகம் உடனடியாக முன்வரவேண்டு மென விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

5.போர்க்குற்றங்களின் மீது விசாரணை

நாடுகளுக்கிடையில் நடக்கும் போர்களாக இருந்தாலும் ஒரு நாட்டுக்குள்ளேயே நடக்கும் உள்நாட்டுப்போர்களாக இருந் தாலும் அப்போரின் போது எத்தகைய மரபுகளை அல்லது விதி முறைகளைப் பின்பற்ற வேண்டுமென்று அனைத்துலக நாடுகளுக் கிடையே சில வரையறைகள் உள்ளன. பள்ளிகள் வழிபாட்டுத் தலங்கள் மருத்துவ மனைகள் போன்றவற்றின் மீதும் முதியோர மாற்றுத்திறனாளிகள் கர்ப்பிணிப்பெண்கள் நோயாளிகள் போன்றவர்களின் மீதும் தாக்குதல் நடத்தக்கூடாது என்பதும் பொதுமக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்லும் சதிநோக்கில் அதிஉயர் நச்சுவகைப் பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதும் உயிருடன் பிடிபடும் போராளிகளைக் கையாளுவதாக இருந்தாலும் போராளிகளின் இறந்த உடல்களைக் கையாளு வதாக இருந்தாலும் மனித உரிமைகளை மீறக்கூடாது என்பதும் போர்க்களத்தில் பின்பற்ற வேண்டிய மரபுகளாகும். ஆனால் அத்தகைய போர்மரபுகள் எதனையும் மதிக்காமல் காட்டு மிராண்டித்தனமாக ஈவிரக்கமில்லாமல் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவையும் ராஜபக்சேவின் சகோதரர்களையும் இன்னும் பிற சிங்கள இனவெறிக் கும்பலையும் போர்க் குற்றவாளிகளாக அறிவித்து அனைத்துலக நீதி மன்றத்தின்  போர்க்குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்கிட அய்.நா. பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகத் திற்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

6.போர்க்கைதிகளின் மனித உரிமைகள் பாதுகாப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளையும், புலிகள் என்ற அய்யத்தின் பெயரில் அப்பாவி இளைஞர் மற்றும் இளம்பெண்களையும் போர்க்கைதிகளாகக் கைது செய்து இருட்டுச் சிறைகளில் அடைத்து விசாரணைகள் ஏதுமின்றி மாந்தநேயமற்ற முறையில் சொல்லொணாக் கொடுமைகளை சிங்கள இன வெறி அரசு ஒவ்வொரு நாளும் அரங்கேற்றி வருகிறது. இத்தகைய காட்டு மிராண்டித்தனமான அரசப் பயங்கரவாதப் போக்கைத்தடுத்து நிறுத்தி இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரையும் சட்டப்பூர்வமாக விசாரிக்கவும் போர்க்கைதி களுக்கான மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அய்.நா. பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகத்தை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

7.அகதிகள் மறுவாழ்வு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைத் தொடர்ந்து அகதிகளாகச் சிறைப்படுத்தப்பட்ட சுமார் 3.5 லட்சம் பேரில் இன்னும் ஏறத்தாழ இரண்டு லட்சம் பேர் முள்வேலி முகாம்களி லேயே அடைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து விடுவிக்கப்பட்ட மக்களும்கூட தமது சொந்த வாழிடங்களை இழந்து விட்டதுடன்  உடைமைகள் மற்றும் உடனுறை உயிர்களையும் பறிகொடுத்த தனால் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே அம்மக்களுக்கு மீள்வாழ்வு அளிக்கும் வகையில் 'மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளைத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலமாக நேரடியாக மேற்கொள் வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அய்க்கிய நாடுகள் பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகத்திற்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

8. அய்.நா. பேரவை அகதிகள் நல ஆவணத்தில் கைச்சாத்து

தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் அகதிகளாக வாழ்ந்து வரும் தமிழீழ மக்களின் வாழ்நிலை கொத்தடிமைகளின் வாழ்க்கையை விட மிகுந்த வேதனைக் குரியதாகவுள்ளது. தங்குமிடம் குடிநீர் மருந்து போன்ற அடிப்படை வசதிகளும் போதிய அளவில் இன்றி அல்லல்படும் கொடுமை களுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு இந்திய அரசின் தமிழின விரோத அணுகுமுறைகளும் அகதிகளுக்கான அய்.நா. பேரவை ஆவணத்தில் கையெழுத்திடாத  நிலைப்பாடுமே காரணங் களாகும். எனவே இந்திய அரசின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதுடன் அகதிகளுக் கான அய்.நா. பேரவை ஆவணத்தில் கையெழுத்திட வேண்டு மென்றும் இம்மாநாடு இந்திய அரசை வலியுறுத்துகிறது.

9.தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான தடை நீக்கம்

ஈழத்தமிழினத்தின் ஒற்றைப் பாதுகாவல் அரணாகவும், ஆயுதமாகவும் விளங்குகிற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு மகத்தான விடுதலை இயக்கமாகும். வெகுமக்களின் பேராதரவோடும், பங்களிப்போடும் ஆட்சி நிர்வாகக் கூட்டமைப் புடன் கூடிய ஒரு தனி அரசையே நிறுவி ஆட்சி நடத்திய ஒரு பேரியக்கமாகும். ஆனால் அமெரிக்க வல்லரசின் ஒருங்கிணைப்பில் அனைத்துலகப் பயங்கரவாத ஒழிப்பு எனும் பெயரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்தி அவ்வியக்கத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டும் வருகிறது. போர்மரபுகளை மீறாமல் சிங்களப் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தாமல் சிங்களப்படையினரோடு மட்டுமே போர் நடத்திய-நடத்தி வருகிற தமிழீழ விடுதலைப்புலிகளை ஒரு வெகுமக்கள் இயக்கமாக இசைந்தேற்பு செய்து அதன் மீதான அனைத்துலகத் தடைகளை நீக்க வேண்டுமென்று இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளுக்கும் இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

10.அநீதியாக சிறைப்படுத்தப்பட்டோரின் விடுதலை

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக்குரிய சராசரி கால அளவையும் தாண்டி ஏறத்தாழ 20 ஆண்டுகளாகச் சிறையிலிருந்து வரும் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட அனைத்து தண்டனைக் கைதிகளையும் கோவை குண்டு வெடிப்பு வழக்கிலும் இன்னபிற வழக்குகளிலும் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலிருந்து வரும் இசுலாமியர் உள்ளிட்ட தண்டனைக்கைதிகளையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டுமென இம்மாநாடு கோருகிறது. அத்துடன் எந்த விசாரணையுமில்லாமல் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இலங்கைச்சிறையில் சிக்கி வாடும் தமிழக, கேரளா உள்ளிட்ட தென்னிந்தியர்களை இந்திய நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி அனைவரையும் உடனே இந்தியாவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இம்மாநாடு இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

11.தமிழக மீனவர்கள் பாதுகாப்பு மற்றும் கச்சத் தீவு மீட்பு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை இராணுவத்தாலும், இந்திய கடலோர பாதுகாப்புப் படையினராலும் கடல் எல்லை பாதுகாப்பு எனும் பெயரில் தாக்குதல்களும் ஒடுக்குமுறைகளும் தொடர்கதை யாகி வருகிறது. கடல் வளத்தில் மீனவர்களுக்குள்ள இயற்கை யான உரிமைகளை பறிக்கும் வகையில் இந்திய கூட்டரசின் கடல்சார் சட்டங்கள் உள்ளன. இச்சட்டங்கள் உடனடியாக திரும்பப்பட பெறவேண்டும். மேலும் சர்வதேச கடல் பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்டும் வகையில் சிறப்பு சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும். தென்தமிழக மீனவரகளுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் இலங்கை அரசு மீது இந்தியக் கூட்டரசு பொருளாதாரத்தடையை விதிக்க வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த இந்திய இலங்கைக்கு இடையே ஏற்படுத்திக்கொண்டு ஒப்பந்தம் தமிழக மீனவர்களின் பாதுகாப்பையும் - இந்திய கூட்டரசின் எல்லைப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்டு கச்சத்தீவு தமிழக எல்லைக்கு மீட்டுத்தர வேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

12.இந்தியாவில் உள்ள தேசிய இனங்களுக்கு அங்கீகாரம்

இந்தியா என்பது ஆங்கிலேயரகளின் சுரண்டலுக்கு வசதியாக ஒருங்கிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு நிருவாகக் கட்டமைப்பேயாகும். வெள்ளையனால் உருவாக்கப்பட்ட இன்றைய இந்தியாவில் தேசிய இன உணர்வுகள் மேலோங்கி வருகின்றன. அதன் அடையாளமாகவே இங்கு மொழிவழி மாநிலங்கள் 1956 இல் உருவாக்கப்பட்டன. அதாவது தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்து வருவதால் இவ்வாறு மொழிவழி மாநிலப் பிரிவினைகள் தோன்றின ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான மொழி இன உரிமைகளும், மண்ணுரிமை கனிமவள உரிமை ஆற்றுநீர் உரிமை போன்ற பிற உரிமைகளும் இங்கே இன்னும் கேள்விக்குறிகளாகவே இருக்கின்றன. இவ்வாறான நிலையில் தேசிய இனங்களுக்குரிய அனைத்து உரிமைகளும் அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து ஒவ்வொரு தேசிய இனமும் இறையாண்மை யுள்ள தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் முழுஅதிகாரம் பெற்ற மாநில அரசுகளைக்கொண்ட கூட்டரசாக இந்திய அரசு அமைந்திட மய்யத்தில் கூட்டாட்சி முறையைக் கொண்டு வர வேண்டுமென விடுதலைச்சிறுத்தை களின் இம்மாநாடு முன் மொழிகிறது.

13.மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்

மத்திய - மாநில பொதுப் பட்டியலில் உள்ளடக்கப் பட்டுள்ள அதிகாரங்கள் தவிர ஏனையவை குறித்து சட்டமியற்றும் அதிகாரத்தை மத்திய அரசுக்கே அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. இந்த அதிகாரத்தை மாநில அரசின் வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் எனவும் குறிப்பாக இத்தகைய இனங்களின் மீது வரிவிதிப்பு அதிகாரத்தை மாநில அரசிடம் வழங்க அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் மாநாடு வலியுறுத்துகிறது. தற்போது திரட்டப்படும்  மத்திய வரிகளிலும் கூடுதல் வரிகளிலும் மாநிலங்களுக்கு எழுபத்தைந்து விழுக்காடு வழங்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

14.மாநிலங்களின் அரசு கொடி
ஆகத்து -15 இந்திய விடுதலை நாள் மற்றும் சனவரி26 இந்தியக் குடியரசு நாளில் இந்திய தேசியக் கொடியுடன் மாநிலத்தின் கொடியை தலைமைச்செயலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஏற்றி வைத்திட வேண்டுமெனவும் இம்மாநாடு இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

15.கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்கு உரிமை

ஒவ்வொரு மாநில எல்லைகளுக்கும் உள்ள கனிம வளங்கள் மீதுள்ள உரிமை அந்தந்த மாநிலங்களுக்கே உரிய உயிராதார உரிமையாகும். இத்தகைய கனிம வளங்கள் மீது மாநிலங்கள் பயன்பெற வேண்டுமெனில் இந்தியக் கூட்டரசு ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டின் அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால்  அதற்கான வருவாயை மாநில அரசுகளே பயன் படுத்திக்கொள்ளவும் வகை செய்யப்பட வேண்டும். இதற்கு ஏதுவாக இந்தியக்கூட்டரசு கனிம வளங்களின் மீது செலுத்தும் மேலாண்மையை விலக்கிக்கொள்ளும் பொருட்டு கனிம வளங்கள் மேலாண்மையை  மாநில அரசுகளின் அதிகாரப்பட்டியலுக்கு மாற்றி அறிவிக்க வேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு வலியுத்துகிறது. 

16.மருத்துவம் உயர் கல்வி மற்றும் உயராய்வுக் கல்வி

மத்தியில் ஆளும் காங்கிரசு தலைமையிலான கூட்டணி அரசு மாநிலங்களின் உணர்வை மதிக்காமல்  உயர்கல்வி மற்றும் மருத்துவக்கல்வி தொடர்பான அதிகாரங்களை மத்தியில் குவித்துக்கொள்ளும் நோக்கோடு உருவாக்கியிருக்கும் மருத்துவம் உயர்கல்வி மற்றும் உயராய்வுக்கல்வி தொடர்பான அமைப்புகளைக் கலைத்திட வேண்டும் என  இம்மாநாடு வலியுறுத்துகிறது.

17.தேசிய புத்தக ஆதரவுக் கொள்கை
நூல்களின் அச்சு விநியோகம் உள்ளிட்டவற்றை மேலாண்மை செய்யும் வகையில் தற்போது மத்திய அரசு உருவாக்கியிருக்கும் தேசிய புத்தக ஆதரவுக்கொள்கை மாநில உரிமைகளைப் பறிக்கும் நிலையில் இருப்பதால் அதைக் கைவிட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது. அதற்குப் பதிலாக அந்தக் கொள்கையை மாநில அரசே உருவாக்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

18.தேசிய புலனாய்வு நிறுவனம் கலைக்கப்பட வேண்டும்

தேசிய புலனாய்வு நிறுவனம் என்ற அமைப்பு மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாநில காவல்துறை தொடர்பான உரிமைகளை பறிப்பதாக உள்ளது. எனவே இந்த அமைப்பை கலைத்திட வேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

19.வெளியுறவுக் கொள்கை முடிவுகளில் மாநிலங்களின் நலன்

மத்திய அரசு வெளியுறவுக்கொள்கை தொடர்பான முடிவு களை எடுக்கும் போதும் அண்டை நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளும் போதும் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள தேசிய இனங்களின் உரிமைகள் தொடர்புடையவையாக இருந்தால் அந்த தேசிய இனத்தைச் சார்ந்த மக்களின் கருத்தைக் கேட்ட பிறகே முடிவை எடுக்க வேண்டும். இதற்கு மாநில அரசு மட்டுமின்றி அங்கீகாரம் பெற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இடம்பெறக்கூடிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

20.வெளிநாடுகளில் தூதரகங்களில் தமிழ் அதிகாரிகள்

கடல் கடந்து திரவியம் தேடல் என்பது தமிழர்களின் பொருளாதார வாழ்வில் ஒரு பிரிக்கமுடியாத அம்சமாக இருந்து வருகிறது. எனவே தான் கடல் கடந்த நாடுகளில் தமிழர்கள் இன்றும் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது எழுந்துள்ள பொருளாதார மாற்றங்களினால் இலட்சக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் அவரகள் பாதுகாப்பாகத் தங்கி பணிபுரியவில்லை என்ற செய்திகள் நாள்தோறும் வந்தவண்ணம் உள்ளன. அப்படி சென்ற அவர்கள் அந்நிய நாட்டில் பணிகளை இழந்து உயிருக்கும் பாதுகாப்பின்றி இருக்கின்ற நிலையில் அந்நிய நாடுகளில் அவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை இந்திய தூதரகங்கள்தான். ஆனால், கெடு வாய்ப்பாக இந்திய தூதர கங்கள் வெளிநாடுவாழ் - பணிபுரியும் தமிழர்களுக்கு சரிவர உதவுவதில்லை என்பதுடன் தமிழர்களிடம் பாராமுகமாய் பொறுப்பற்று நடந்து கொள்கின்றன என்கின்ற அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வருகின்றன. இதற்கு காரணம் அந்த தூதரகங்களில் பெரும்பாலும் தமிழர் அல்லாதவர்கள் பணிபுரி வதுதான். மொழி வேற்றுமைகளால் அவர்கள் இப்படி கடுமையாக நடந்து கொள்வதை இந்த மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், வெளிநாடுவாழ் மற்றும் பணிபுரியும் தமிழர்களின் நலனைக் காக்கும் வகையில் தமிழர்கள் பெரும்பான்மையாக பணி செய்யும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் தமிழ் அதிகாரிகள் பெருமளவில் நியமிக்கப்பட வேண்டும் என இந்த மாநாடு இந்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

மேலும், லட்சக்கணக்கான ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்து தரப்படும் என்று பொய்யான வாக்குறுதிகளை அளித்து இளைஞர்களை ஏமாற்றி வெளி நாடுகளுக்கு அனுப்பி மோசடியாக பணம் சம்பாதிக்கும் முகமை களுக்கு தடை விதித்து அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்போது இருக்கக்கூடிய அனைத்து முகமைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென இந்த மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

21.தாய்மொழி வழிக் கல்வி

கல்வி என்பது உலகிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இயற்கையான அடிப்படை உரிமையாகும். ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியில் கல்வி கற்கவும், அதன் மூலம் உலகை புரிந்து கொள்ளவும் சமூகத்துடன் சுமூகமாக கலந்துறவாடவும், சமூக வளர்ச்சியோடு தம்மை மேம்படுத்திக்கொள்ளவும் கல்வி அடிப்படையான ஓர் உரிமையாகும். தாய்மொழி வழியில் கற்பதும் கற்பிப்பதும் அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் என்பது உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளன. இந்த அறிவியல் ஆய்வு முடிவுகளை இந்தியக் கூட்டரசு ஏற்றுக்கொண்டு எல்லா குடிமகனும் அவரவர் தாய்மொழி வழியில் முழுமையான கல்வி பெற இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தகுந்த காப்புகளை உருவாக்க வேண்டும். அ) அதற்கு முதற்படியாக கல்வி மீது தனக்குள்ள அதிகாரத்தை இந்திய கூட்டரசு விட்டுக்கொடுக்கும் வகையில் கல்வித்துறையை முழுமையாக அரசமைப்புச் சட்டத்தின் பின் இணைப்பில் உள்ள பொதுப்பட்டியலில் இருந்து விடுவித்து மாநில அதிகாரங்களுக்கான பட்டியலில் இணைக்க வேண்டும். ஆ) இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள 1600-க்கும் மேற்பட்ட மொழிகளும் தமது இறையாண்மையைக் காத்துக் கொள்ளும் வகையில் அந்தந்த மொழிகளின் மீது பிற மொழி களின் ஆதிக்கத்தை ஒழிக்கவும் மொழி இன நலன்களுக்கான தேசிய பேராயம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் மூலம் தாய்மொழி வழிக்கல்வி கண்காணிப்பிற்கும் பாதுகாப்பிற்கும் உட்படுத்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டுவர வேண்டுமென இந்திய தமிழக அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

22.எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்

தமிழகத்தில் தமிழ்மொழியைக் காக்கும் வண்ணம் தமிழ்ப்பெயர் ஏற்போருக்கு பெயர்மாற்ற அரசிதழ் பதிவிற்கு முழு கட்டண விலக்கு அளிக்க வேண்டும். தமிழ்ப்பெயரில்லாத திரைப்படங் களுக்கு இரட்டிப்பு வரி விதிக்க வேண்டும். வணிக நிறுவனங்கள் தமிழ்ப்பெயர் பலகைகள் வைப்பதை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆங்கில வழி மழலையர் வகுப்புகள முற்றிலும் நீக்கப்பட வேண்டும்.
மருத்துவம், பொறியியல், சட்டம் முதலிய உயரகல்வி தமிழ்வழியில் வழங்கப்பட வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனும் நிலையை எட்ட தமிழக அரசின் ஆட்சி மொழியாகத் தமிழ் இருப்பதுபோல, உயர்நீதிமன்றம் மற்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் தமிழே வழக்காடு மொழியாக இருக்க வேண்டும். அதற்கு தமிழக அரசால் எடுக்கப்பட்ட முன்முயற்சி அப்படியே தேங்கிப்போய் உள்ளது. எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இதற்கு முனைப்புக்காட்டி வழக்காடு மொழியாக தமிழை சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

23.மனிதவள மேம்பாட்டுத்துறை பட்டியலில் தமிழ்ச் செம்மொழி

தமிழ்மொழியை செம்மொழி என ஏற்பளித்த இந்திய கூட்டரசுக்கு இம்மாநாடு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன் தமிழ்மொழியை செம்மொழியாய் அறிவிக்கச் செய்ய உறுதுணை யாக இருந்த தமிழக முதல்வர் சமத்துவப் பெரியார் கலைஞர் அவர்களுக்கு இம்மாநாடு நன்றி தெரிவித்துக்கொள்கிறது. மேலும் தமிழ் செம்மொழி என்பதை இந்தியக் கூட்டரசின் பண்பாட்டுத்துறையின் பட்டியலில் இருந்து மனிதவள மேம்பாட்டுத்துறையின் பட்டியலில் சேர்த்து அறிவிக்க வேண்டும். அதன் மூலம் உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு ஓர் இருக்கை அமைத்து, தமிழில் உள்ள அரிய இலக்கியங்களை உலக மொழிகளில் மொழிபெயர்க்கவும், பதிப்பித்து வெளியிடவுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

24.தமிழக எல்லைகள் மீட்பு

1956ஆம் ஆண்டு நடந்த மாநிலங்கள் எல்லை வரையறையின் போது தமிழகத்தின் பல பகுதிகள் கேரளம் ஆந்திரம் கருநாடகம் ஆகிய மாநிலங்களோடு இணைக்கப்பட்டுவிட்டன. இது தமிழ் மக்களின் இறையாண்மைக்கு எதிரான செயலாக இம்மாநாடு கருதுகிறது. எனவே தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தேவிகுளம், பீர்மேடு, மூணாறு முதலிய பகுதிகளிலும் கருநாடக மாநிலத்தில் சேர்க்கப்பட்டுள்ள கோலார தங்கவயல் பகுதியிலும் பொதுவாக்கெடுப்பு நடத்தி, அவ்வாக்கெடுப்பின் முடிவின் அடிப்படையில் இப்பகுதிகள் வாழும் தமிழர்கள் விருப்பப்படி இப்பகுதிகள் தமிழ்நாட்டின் எல்லைக்குள் கொண்டுவரப்பட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

25.தமிழகத்தில் உள்ள மொழிச் சிறுபான்மையினர் பாதுகாப்பு

பிரிட்டிசார் ஆட்சிக்கு முன்பிருந்தே தமிழகத்தில் திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்த பல இலட்சம் பேர் தமிழகத்தில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இரண்டு, மூன்று நூற்றாண்டு களுக்கு மேலாக வாழ்ந்துவரும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மற்றும் சிறு மொழிகளைப் பேசும் பழங்குடிகள் ஆகியோர் தமிழகத்தின் தாயக மக்களாகவே கருதப்பட்டு, அவர்களின் தாய் மொழி பாதுகாக்க அவர்களின் விருப்பப்படியான திட்டங்கள் தீட்டப்பட வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

26.நதிநீர் உரிமை

ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில எல்லைக்குள் ஓடும் நதிகள் அந்தந்த மாநிலத்தின் ஆளுகைக்கு உட்படும் அதற்கு முன்னோட்டமாக தமிழக அரசு தமிழக எல்லைக்குள் ஓடும் நதிகளைப் பாதுகாக்கும் வகையிலும் நீர்வள ஆதாரங்களைப் பாதுகாக்கும் வகையிலும் சட்டப்படி செயல் அதிகாரம் பெற்ற நதிகள் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகள் அனைத்தும் இந்திய கூட்டரசின் உடைமையாக்கப்பட வேண்டும். அதற்கு ஏதுவாக மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகள் அனைத்தையும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பின் இணைப்பில் கூட்டரசின் பட்டியலில் அறிவிக்க வேண்டும்.
ஆறுகள், நீர் நிலைகள், நீர்வழிகள் ஆகியன இயற்கை அன்னையின் உயிர்நாடிகள் இவற்றின் இயற்கைத் தன்மையில் எந்த ஒரு குறைபாடு ஏற்பட்டாலும் அது நிகழ்காலம் மற்றும் எதிர்கால சந்ததியை கடுமையாகப் பாதிக்கும். எனவே, ஆறுகள் கனிமவள வரையறையில் இருந்து நீக்கப்பட வேண்டும். ஆறுகளில் மணல் அள்ளுவது தடை செய்யப்பட வேண்டும். மணலுக்கு மாற்றான பொருளை மக்களிடையே பிரபலப்படுத்த வேண்டும். மேலும் ஆறுகளிலிருந்து மணல் கொள்ளயடிப்போர் மீது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய அளவில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். அதைப்போலவே ஏரிகள் மற்றும் குளங்கள் போன்ற நீர் நிலைகளில் கருவேல மரங்கள் வளர்ப்பது போன்ற நீர் வள ஆதாரங்களை சீர்குலைக்கும் நடவடிக்கை முற்றிலும் தடுக்க வேண்டும்.

27.தமிழக நிலங்களைப் பாதுகாக்க...

தமிழகத்தில் உள்ள நிலங்கள் அனைத்தும் இன்றைக்கு கேட்பாரின்றி வடஇந்தியர்கள், அன்னிய நாட்டு முதலாளிகள் மற்றும் இவர்களின் நிறுவனங்களால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், வேளாண் விளைநிலங்களும் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் ஊக வணிகத்திற்கு உட்படுத்தப்பட்டு, வீட்டு மனைகளாகவும், தொழில் வளாகங்களாகவும் மாற்றுவதாக் கூறி தரிசாக்கப்பட்டு வருகின்றன. இதனால் வேளாண் தொழில் தழைக்கும் என்பதற்கான நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் மறையத் தொடங்கி விட்டது. இந்நிலை தொடருமானால் சமூக உணவுச் சங்கிலி என்பது அற்றுப்போய்விடும் என்கிற மாபெரும் அச்சுறுத்தல் பெருகிவருகிறது. எனவே, தமிழக நிலங்களின்மீது தமிழ்நாடு அரசு தன்னுடைய சட்டப்பூர்வமான ஆளுமையை கொண்டுவர வேண்டும். அதற்கு அய்ந்து பரிந்துரைகளை இம்மாநாடு முன்வைக்கிறது.

அ) தமிழகத்தில் உள்ள அனைத்து நிலங்களையும் மாநில அரசின் மேலாண்மைக்கு உட்படுத்தும் வகையில் தமிழக நில ஆணையம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இவ்வாணையத் தின் வழியாக விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கான நிலங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவ்வகை நிலங்களின் விற்பனை மற்றும் பரிமாற்றங்கள் எதுவாயினும் இவ்வாணையத்தின் இசைவின்றி இறுதி செய்யப்படக்கூடாது. இவ்வாணையத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிகள், சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் முதலானோர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஆ) விவசாய நிலங்களை விவசாய பயன்பாடுகளுக்கு மட்டும் விற்கவோ - வாங்கவோ முடியும் என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும். நிலங்கள் தொடர்ச்சி யாக வடஇந்திய வெளிநாட்டு நிறுவனங்கள் கைப்பற்றுவதைத் தடுக்க சீனாவில் நிகழ்ந்த அந்நிய நிறுவனங்களின் நிலபறிப்பு மோசடியை படிப்பினையாகக்   கொண்டு நிதி மூலதன நோக்கிலான தமிழ்நாடு அரசின் தொழிற்கொள்கை மாற்றிய மைக்கப்பட வேண்டும். பெரிய அளவுகளிலான தொழில் முனைவுகள் மாபெரும் பொருளாதார அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ள இச்சூழலில், நகர்புறம் சார்ந்த தொழில்துறை வளர்ச்சி என்பது புதுவித காலனியத்தை உருவாக்கியுள்ளது. இது தமிழர்களின் வாழ்வுரிமையை கேள்விக் குறியாக்கி யுள்ளதால் பெருநகர் சார்ந்த தொழில்கள் பரவலாக்கப்பட வேண்டும்.

இ) தமிழ்நாடு முழுவதும் தொழில் முனைவுகள் பரவலாக் கப்படும் நிலையில், அதற்கு நில ஆணையம் அங்கீகரிக்கும் தரிசு நிலங்களையே பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட வேண்டும்.

ஈ) கோயில் நிலங்கள் அனைத்தும் நாட்டுடைமையாக் கப்படவேண்டும். நாட்டுமையாக்கப்பட்ட அந்நிலங்கள் ஏழைத் தமிழ் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதற்கு ஏதுவாக இந்திய அறக்கட்டளைகள் சட்டம் மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை சட்டங்களில் திருத்தங்கள் ஏற்படுத்த வேண்டும்.
உ) தமிழகத்தின் வேளாண் தொழிலை சீர்குலைத்து விதைகள் மற்றும் உணவு உற்பத்தி முறையை ஏகாதிபத்திய மூலதன மற்றும் விதை நிறுவனங்களை சார்ந்து இருக்கும்படி உருவாக்கப்பட்டதன் விளைவாக தமிழகத்தில் வேலிக் கருவை மரங்கள் விதைக்கப்பட்டன என்பதை சுற்றுச்சூழல் ஆய்வுகள் நிறுவியுள்ளன. இதனால் தமிழகத்தின் தென் கிழக்குக் கடலோர மாவட்டங்களின் ஒட்டுமொத்த வேளாண் நிலங்களும் தரிசாகிப் போயின. மேலும் இது தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் பரவிக் கிடக்கிறது எனவே, தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீராதாரத்தைப் பாதுகாக்கவும் வேலிக்கருவை மரங்களை ஒழிக்க சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுத்துகிறது.

28.சென்னை குடிசைப் பகுதி மக்களின் வாழ்வுரிமைப் பாதுகாப்பு

சென்னை மாநகர உருவாக்கப்பட்ட நாள் முதல் தலித் மற்றும் மத சிறுபான்மையினர் மாநகரின் உருவாக்கத்திற்கும், வளரச்சிக்கும் ஆதார ஆற்றலாக இருந்து வருகின்றனர். இம்மக்கள் இல்லையெனில் சென்னை என்பது இன்று உலகம் முழுவதும் தமிழர்களின் பெருமைமிகு பெருநகரமாக மாறியிருக்காது. ஆனால் எந்த மக்கள் இம்மாநகரை உருவாக் கினார்களோ அவர்கள் சென்னை மாநகரை விட்டு வெளி யேற்றப்படுவது இன்று தொடர்ந்து கொண்டிருக்கிறது. சென்னை நகராக இருந்த போதும், மாநகராக வளர்ந்த போதும், பின்பு பெருநகராக மாறிய போதும் ஒவ்வொரு வளர்ச்சிப் படிநிலையிலும் இம்மக்கள் வெளியேற்றப்பட்டு வந்துள்ளனர். குடிசை மக்களின் வாழ்விடங்களை மேம்படுத்த தொடங்கப்பட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இம்மக்களை சென்னையை விட்டு வெளியேற்றும் வாரியமாக மாறியுள்ளது. எனவே சென்னையில் உள்ள குடிசைப்பகுதி மக்களுக்கு அவர்கள் வாழுகின்ற பகுதியிலேயே வீடுகளைக் கட்டிக்கொள்ள தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். அப்படி கட்டாயமாக வெளி யேற்றப்படும் குடிசைப் பகுதி மக்களுக்கு அவர்கள் குடியிருந்த இடத்திற்கு அருகிலேயே கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கொள்கிறது.

29.முழு மதுவிலக்கு

மது உள்ளிட்ட போதைப் பழக்கவழக்கங்களால் நாடு தழுவிய அளவில் ஏழை எளிய மக்களின் வாழ்வு வெகுவாகப் பாதிக்கப் படுகிறது. எண்ணற்ற பல குடும்பங்களின் உறவுகள் சிதைந்து சிதறும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக இளைய தலைமுறையினர் பள்ளிப்பருவத்திலிருந்தே குடிப்பழக்கத்திற்கும் இன்னும் பிற போதைப் பழக்கங்களுக்கும் அறிமுகமாகின்றனர். இதனால் அவர்களின் எதிர்காலம் இருண்டு பாழாகிறது. இதற்கு அரசின் கொள்கை முடிவுகளே காரணமாக அமைகின்றன என்பதை வேதனையோடு விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது. தமிழகத்தில்  ஏழை எளியோரின் நலன்களுக்கென எண்ணற்ற பல திட்டங்களைத் தீட்டி தமிழக அரசு அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. எனினும் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகள்  தலித்துகள், மீனவர்கள் மற்றும் பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வெகுவாக பாதிக்கச் செய்கின்றன. எனவே மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் அடித்தட்டு மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு முழு மதுவிலக்குக் கொள்கையை ஏற்று அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக இழுத்து மூட வேண்டுமெனவும், பிற போதைப்பொருட்களின் புழக்கத்தை தீவிரமாக தடுத்திட வேண்டுமெனவும் இம்மாநாடு தோழமையோடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. அத்துடன் டாஸ்மாக் மதுக்கடைகளில் பணியாற்றும் அனைவருக்கும் பிற துறைகளில் தகுதிக்குரிய மாற்று வேலைகளை வழங்க வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. தேசத்தந்தை என காந்தியடிகளைப் போற்றும் இந்திய ஆட்சியாளர்கள் காந்தியடிகளின் மதுவிலக்குக் கொள்கையை இந்திய அரசின் தேசியக் கொள்கையென ஏன் அறிவிக்கக்கூடாதென இம்மாநாடு கேள்வியெழுப்புகிறது. இந்நிலையில் முழு மதுவிலக்குக் கொள்கையை அனைத்திந்திய அளவில் நடைமுறைப்படுத்திட சட்டம் இயற்ற வேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

30.விக்கிலீக்ஸ் ஜுலியன் அசாங்கேவுக்குப் பாராட்டு

உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டின் இறையாண்மைக்குள்ளும் மூக்கை நுழைத்து தனது வல்லாதிக்கத்தைத் திணித்து வரும் அமெரிக்க வல்லரசின் உச்சந்தலையில் இடி இறக்கியதைப்போல் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின்  அதிஉயர் கமுக்க நடவடிக்கைகளை விக்கிலீக்ஸ் எனும் இணைய தளத்தினூடாக அம்பலப் படுத்தியிருக்கிறார் ஆஸ்திரேலியாவைச் சார்ந்த இணையத்தள ஊடக வியலாளர் ஜுலியன் அசாங்கே! அவரின் இந்த அளப்பரிய செயல் ஊடகவியல் அறத்திற்கு எதி ரானது அல்ல! தனிநபரின் கமுக்கங்களை அம்பலப்படுத்துவதில் அரசும் ஆட்சியாளர்களும் ஊடகவியல் அறத்திற்கு ஊறு விளைவிக்காது என்று ஞாயப்படுத்தப்படுமேயானால் அமெரிக்க போன்ற வல்லரசியல் கொடு நெறியாளர்களின் கமுக்கங்களை அம்பலப்படுத்துவதிலும் ஞாயமுண்டு என விடுதலைச் சிறுத்தைகள் நம்புகிறது. எனவே, அமெரிக்க வல்லரசின் வல்லாதிக்க இடுப்பை முறித்து, வளரும் நாடுகளின் இறையாண்மைக்கு வலுவான பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ள ஜுலியன் அசாங்கேவை இம்மாநாடு நெஞ்சாரப் பாராட்டுகிறது. அவருடைய உயிருக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட வேண்டு மெனவும் அய்.நா. பேரவைக்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

விபீடணர்களின் கனவு பலிக்காது

விடுதலையில் தினமணி கூட்டத் திற்கு மின்சாரம் பாய்ச்சியது போல் 25.12.2010 வெளிவந்த மின்சாரம் அவர் கள் எழுதிய தினமணி அய்யர் வாளும் - வால்களும் கட்டுரை மிக வும் அற்புதமாக இருந்தது. தினமணி கூட்டத்திற்கும், இனத் துரோகிகளுக் கும் மின்சாரம் பாய்ச்சியது போல் இருந்தது. திராவிடர் கழகத் தோழர் கள் அனைவரும் படித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டிய அத்துணை குறிப்புகள் - பட்டியல்கள்! தந்தை பெரியாருக்குப்பின் பொதுவாழ் விலும்,  தனிவாழ்விலும் ஒழுக்கம் + நேர்மை= கி.வீரமணி என்ற இலக் கணத்தோடு வாழ்ந்து, இயக்கத்தைக் கட்டிக் காத்து இமயம் போல் உயர்ந்து நிற்பதை விபீடணர்களால் பொறுக்க முடியவில்லை -  தினமணி, தின மலர், சோ, சு.சாமி கல்கி, ஆனந்த விகடன் பார்ப்பன பனியா கூட்டங் களுக்கு. பிணந்திண்ணிக் கழுகுகள் போல் அலைகின்றனர். ஆவேசப்படு கின்றனர், சமீபகாலமாக விடுதலை யில் கட்டுரைகள் தலையங்கங்கள், ஆசிரியரின் பேச்சுகள் ஆரியர் - திராவிடர் போராட்டம் மீண்டும் என்பது குறித்து திராவிடர்கள் இனஉணர்வு கொண்டு எழுச்சி பெறும் விதத்தில் உள்ளது.
தமிழ்நாடு தந்தை பெரியாரின் பூமி. இங்கு ஆரிய மனுதர்மப் பார்ப்பனர் கள், விபீடணர்களின் கனவு பலிக் காது - ஜம்பம் சாயாது - வீரர்கள் பெரியாரின் தீரர்கள் வாழும் திராவிட நாட்டை வெல்பவர் கிடையாது.
வாழ்க பெரியார்! வளர்க பகுத் தறிவு!
- தி.க.பாலு,
திண்டுக்கல்

தந்தை பெரியாரும்-தமிழும் -மறைமலை இலக்குவனார்

ஈபுரூ இலக்கியத்திலும் கிரேக்க இலக்கியத்திலும் காணப்படும் தமிழ்ச் சொல்லாட்சியை அடிப்படையாகக் கொண்டு பழந்தமிழ்ச் செல்வாக்கு மூவாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததென அறுதியிட்டனர். இப்போது மண்பாண்டச் சில்லுகளில் தொல்தமிழ் வரிவடிவங்கள் காணப்பெறும் சூழலில் இன்னும் முற்பட்ட காலத்திற்குத் தமிழின் தொன்மையை அறுதியிடச் சான்றுகள் காட்ட வியலும் எனும் உறுதியைப் பெற்றுள்ளோம். இவ்வளவு தொன்மை வாய்ந்ததென நாம் மகிழ்வு கொண்டபோதிலும் தமிழின் வளர்ச்சி ஒரு தொடர்ச்சியுடன் அமைந்துள்ளதெனக் கூற இயலவில்லை.
சங்க இலக்கியத்திற்குப் பின் அமைந்துள்ள இலக்கியங்களில் வடமொழியின் செல்வாக்கு படிப்படியாக மிகுந்து ஏறுமுகமாகக் காணப்படுவதனையும் வடமொழி மட்டுமன்றி ஆரியரின் நால்வருணப் பாகுபாட்டுமுறையும் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் ஆழ்ந்த தாக்கத்தைச் செலுத்தி வந்தமையையும், தமிழ் வரலாறு காட்டுகிறது. வேற்றவர் படையெடுப்பும் வந்தேறிகளின் வல்லாண்மையும் தமிழில் பிறமொழிச் சொல்லாட்சிக்கு வித்திட்டன. எனினும் இத்தகைய கடன் சொல்லாட்சிகள் எளிதில் களைந்து விடக்கூடிய களைகளாக இருந்தன. ஆனால் ஆரியரின் ஊடுருவல் இலக்கியப் படைப்பிலும் அமைப்பிலும் இலக்கணப் போக்கிலும் கருத்துருவாக்கத்திலும் ஆழப் பதிந்து தலைமுறையாகத் தமிழினத்தை அடிமைத்தளையிட்டு வைத்திருக்கும் ஆற்றல் பெற்று விளங்கியது. தமிழனின் தன்னாண்மையையும் தறுகண்மையையும் எடுத்துரைக்கும் சான்றாக விளங்கும் சங்க இலக்கியங்களைவிடப் புளுகுப் புராணங்களும், வழுநிறைந்த இதிகாசங்களும் பெருமை வாய்ந்தவையெனத் தமிழ்ப்புலவர்களே தலையில் வைத்துக் கொண்டாடும் மனப்போக்கு வேரூன்றிவிட்டது.   இப் பொருந்தாப் போக்கு ஏட்டுப் படிப்பில் மட்டுமில்லாமல் நாட்டுப்புற நம்பிக்கைகளிலும் நஞ்சு கலந்தது.
பெண்பிள்ளை சிரிச்சால் போச்சு புகையிலை விரிச்சால் போச்சு என்றும், கார்த்திகைக்குப் பிந்திய மழையுமில்லை,  கர்ணனுக்கு மிஞ்சிய கொடையுமில்லலை என்றும் கற்றறியா மக்கள் வழக்கிலும் இதிகாசப் பொய்ம்மைகள் நிலை நிறுத்தப்பட்டன.
சாப்பாடு என்பது இழிந்தோர் வழக்கு எனவும் போஜனம் என்பதே உயர்ந்தோர் பயன்படுத்தத்தக்கதெனவும் மகாமகோபாத்தியாயர்கள் விளக்கிக் கொண்டிருந்த சூழல் தமிழக வரலாற்றில் தமிழன் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டிருந்தமைக்குச் சான்றாகும்.
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்கள் என வள்ளலார், மாயூரம் மேதை வேதநாயகர், மனோன்மணீயம் சுந்தரனார் ஆகிய மூவரையும் குறிப்பிட வேண்டும்.
புராணப் பொய்ம்மைகளைப் புறந்தள்ளி வைதிகத்தின் நச்சுப் பிடியிலிருந்து தமிழர் சமயத்தை விடுவிக்க முனைந்த வள்ளலார், பயிற்சி மொழியாகவும் வழக்குமன்ற மொழியாகவும் தமிழ் விளங்க வேண்டுமெனவும், ஜாதிப் பாகுபாடுகளையும் ஆண்-பெண் பாகுபாடுகளையும் வேரறுத்து, கல்வி வாய்ப்பு அனைவர்க்கும் வழங்கப்பட வேண்டுமென வாதாடிய வேதநாயகர், தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தியும் அறிவியற் கலைச் சொல்லாக்கம் தமிழில் வளர்ந்தோங்கவும் பாடுபட்ட சுந்தரனார் ஆகியோர் காட்டிய வழிமுறைகளே பாரதியார், மறைமலையடிகள் ஆகியோர்க்கு முன்னோடியாக அமைந்தன. எனினும் இவர்கள் காட்டிய வழிமுறைகள் தமிழனின் அடிமைத்தளையைக் கட்டறுக்கப் போதுமானவையாக விளங்கவில்லை. முறையான தமிழ்க் கல்வி பெறும் வாய்ப்பற்ற, ஏட்டுப்படிப்பை என்றும் போற்றாத பெரியார் அவர்களே தமிழின் விடுதலைக்கும் தமிழின விடுதலைக்கும் தக்க வழிமுறையைக் கண்டார்.
தமிழ்ச் சங்கங்களைப் பற்றிய கட்டுக்கதைகளையும், புலவர்களைப் பற்றிய பொருந்தாப் புளுகுகளையும் பற்றி நின்ற தமிழறிஞர்களுக்கு, அவர்களின் தவறான நிலைப்பாட்டை யுணர்த்தித் தமிழ் ஆராய்ச்சியைச் சரியான தளத்திற்குக் கொணர்ந்தவர் தந்தை பெரியார் அவர்களே.

தொல்காப்பியரின் இயற்பெயர் திரணதூமாக்கினி எனவும்,  அவர் அகத்தியரின் மாணவர் எனவும், அகத்தியரின் மனைவி உலோபாமுத்திரையை ஆற்றில் மூழ்கிவிடாமல் காப்பாற்றும் பொருட்டுத் தொட்டுத் தூக்கிவிட்ட காரணத்தால் அகத்தியரால் சாபமிடப்பட்டவர் எனவும் நிலவிய கதைகளைப் பெரியாருக்கு முன்னர் எந்தப் புலவரும் மறுக்க முற்படவில்லை.

மறைமலையடிகளும், சோமசுந்தரபாரதியாரும் பா.வே.மாணிக்க நாயகரும் நேரிய பாதையில் சீரிய ஆய்வு நிகழ்த்திடப் பெரியாரின் சுயமரியாதை இயக்கமே தக்க பின்புலம் அமைத்தது என்பதே தமிழாராய்ச்சி வரலாறு காட்டும் உண்மையாகும்.

தந்தை பெரியார் பற்றி தமிழர்களில் புரியாதவர்களும், பார்ப்பனர்கள் திட்டமிட்டும் ஒரு பிரச்சாரத்தைச் செய்வதுண்டு. தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் பெரியார் என்பதுதான் அந்தப் பிரச்சாரம். வெறும் சொற்களின் மீதான பார்வையால் மட்டும் சொல்லப்படும் குற்றச்சாற்று இது. ஆனால், தமிழ் வளர்ச்சிக்காகவும், மேன்மைக்காகவும் தந்தை பெரியார் பாடுபட்டது போலவும், கருத்துகளைச் சொன்னது போலவும் - ஆக்க ரீதியாக இன்னொருவர் செய்தார்; சொன்னார் என்று கூறிட முடியாது. என்னும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் கருத்து தந்தை பெரியார் தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்கு ஒரு சுருக்கமான அறிமுகம் என்று கூறத்தக்கது.
ஆராய்ச்சிக்குரிய படிப்பும், சுயமான கண்ணோட்டமும் ஈ.வெ.ராவுக்கு இல்லை. அவர் சங்க இலக்கியம் பற்றி, காப்பியங்கள் பற்றி ஏன் தமிழ் மொழி பற்றிச் சொல்லி இன்று அச்சில் கிடைக்கும் விஷயங்களையே பாருங்கள். அவற்றை இன்று ஈ.வெ.ராவை ஆதரிப்பவர்கள் எவராவது ஏற்றுக் கொள்வார்களா? தமிழரின் தொன்மை, நாகரிக வெற்றி எதுவுமே அவர் கண்ணுக்குப் படவில்லை. பெரும்பாலும் அய்ரோப்பியப் பகுத்தறிவு நோக்கில் அவற்றையெல்லாம் தூக்கி வீசுபவராகவே அவர் இருந்திருக்கிறார்.- என்னும் எழுத்தாளர் செயமோகனின்  கூற்று நகைப்பிற்கிடமானது. வடமொழி வல்லாண்மையையும் இந்தியின் கொடுங்கோலாதிக்கத்தையும் அஞ்சாது நின்று எதிர்த்த போராளியாகிய பெரியாரின் மேலுள்ள காழ்ப்பும் பகைமையுமே இக்கூற்றுக்கு அடித்தளமெனல் மிகையன்று.
இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும்விட தமிழ், நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் மற்ற வேறுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது.
வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள், கேடு பயக்கும் கருத்துகள், நம்மிடைப் புகுந்து, நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான், வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால்தான், அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி, தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல என்னும் தந்தை பெரியாரின் அழுத்தம் திருத்தமான விளக்கம் மொழிக்கலப்புக்கும் வேற்றுமொழி மேலாண்மைக்கும் எதிரான போர்முரசமாக விளங்குகிறது.
தந்தை பெரியாரின் நிலைப்பாடு முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த ஒன்று. இதனைத் தெரிந்து கொண்டவர்களே அவரது  பல கருத்துகளையும் உரியமுறையில் புரிந்து கொள்ளமுடியும். தமிழை வழிபட்டு நின்றவர்களிடமிருந்து அவர் விலகி நிற்கிறார். தமிழில் வழிபாடு வேண்டுமென்று அவர் குரல் கொடுத்தாரெனினும் தமிழை வழிபாடு செய்வதனை முற்றிலும் எதிர்த்தார். தமிழைப் போற்றிக் கொண்டாடுவதன் மூலம் அதனைத் தக்க கருத்து வெளிப்பாட்டுக் கருவியாக்கி விட முடியாது என்பது அவர் கருத்து.
தமிழ் மொழி, ஆங்கில மொழி இரண்டைப் பற்றிய என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லியிருக்கின்றேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி என்பதும், தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ்மொழி - ஆங்கிலமொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ்மீது எனக்குத் தனி வெறுப்பில்லை  (விடுதலை, 1.12.1970) என்று தெளிவாகத் தம் கருத்தினை வெளிப்படுத்தியவர் தந்தை பெரியார். தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால், தமிழையும் மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தைக் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்... என்னும் பெரியாரின் கருத்து செயமோகன் போன்ற போலி முற்போக்காளர்களை எரிச்சலடையச் செய்திருக்கும்.

தமிழ் இலக்கியங்களைப் பற்றிய பெரியாரின் ஆய்வு, பெரியாரியத் திறனாய்வுமுறை என்னும் புதிய ஆய்வுமுறைக்கு வித்திட்டுள்ளது. இனிமேலாவது பல்கலைக்கழக ஆய் வாளர்கள் இத் திறனாய்வுமுறையின் நலன்களை மனத்துட்கொண்டு ஆய்வு மாணவர்களை இத் திசையில் வழி நடத்தினால் தமிழ் விரிவும் வளர்ச்சியும் பெறுதற்குரிய வழிமுறைகள் வழிமுறைகள் மலரும் எனதில் எள்ளளவும் அய்யமில்லை.

(24.12.2010 அன்று சென்னை-பெரியார் திடலில் நடைபெற்ற தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கில் வழங்கப்பட்ட எழுத்துரை)

நுழைவுத் தேர்வை எதிர்த்து தமிழ்நாடெங்கும் தி.க. ஆர்ப்பாட்டம்

சென்னை, டிச. 30- மத்திய அரசின் மருத்துவக் கவுன்சில் மருத்துவக் கல்லூரிக்கு பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டம் ஓயாது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அறிவித்தார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் போராடிப் பெற்ற சமூக நீதிக்கான உரிமைகளை பார்ப்பன அதிகார வர்க்கம் கொல்லைப்புறம் வழியாக அதைத் தட்டிப் பற்றிகும் சதியில் ஈடுபட்டுள்ளது.
மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வினை நடத்தி அதன் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற சமூக நீதிக்கு விரோதமான முடிவை அகில இந்திய மருத்துவக் குழு எடுத்துள்ளது.
இந்த அபாயத்தினை நாட்டு மக்களுக்கு உணர்த்திடும் வகையில் திராவிடர் கழகம் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலம் எதிர்ப்பைத் தெரிவித்திட முரசு கொட்டியது.
நாடு முழுவதும் தி.க. ஆர்ப்பாட்டம்!
நாடு முழுக்க 29-12-2010 நேற்று மத்திய அரசின் நுழைவுத் தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (29-12-2010) மாலை 4 மணிக்கு அரசு பொது மருத்துவ மனைக்கு எதிரில் உள்ள மெமோரியல் ஹால் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசியோர்
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.சென்னியப்பன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசினார்.
அடுத்து மு.அ.கிரிதரன், அ. இறைவி, செ.வை.ர. சிகாமணி, கோ.வீ.ராகவன் ஆகியோர் ஆர்ப்பாட்ட ஒலி முழக்கங்களைத் தொடர்ந்து முழங்கினர். அதனைத் தோழர்கள் பின் தொடர்ந்து முழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங் களைச் சுருக்கமாக விளக்கினர்.
தமிழர் தலைவர் உரை

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் -தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆர்ப்பாட்டத்தை விளக்கி உரையாற்றினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:

இதுவரை மிக நீண்ட காலமாகப் போராடி ஒழித்த நுழைவுத் தேர்வை மீண்டும் மருத்துவக் கல்லூரியில் படிக்க நுழைவுத் தேர்வை நடைமுறைப்படுத்திட மத்திய அரசின் மெடிக்கல் கவுன்சில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசும் மெடிக்கல் கவுன்சிலின் முடிவை வரவேற்பதாக சொல்லியிருக்கிறது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலிருந்து...
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்த பொழுதே, அவருடைய காலத்திலேயே தி.க., தி.மு.க., கடும் எதிர்ப்பைத் தெரிவித்து, நுழைவுத் தேர்வை அப்பொழுதே ரத்து செய்திட வைத்தது.

கலைஞர் சட்டமே இயற்றினார்!
தற்பொழுது கலைஞர் அவர்கள் அய்ந்தாவது முறையாக முதலமைச்சராக வந்த நிலையில், நுழைவுத் தேர்வை ரத்து செய்து சட்டமே இயற்றியதை நாங்கள் பாராட்டுகிறோம் வரவேற்கிறோம்.
கிராமத்துப் பிள்ளைகள் வரக்கூடாது...
கிராமத்துப் பிள்ளைகள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெண்கள் படித்து டாக்டர் ஆகக் கூடாது என்பதற்காகவே மத்திய அரசு மீண்டும் நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்திருக்கிறது.

மருத்துவக் கவுன்சிலில் இருந்த கேத்தான் தேசாய் என்ற பார்ப்பனர் - பல கோடி கொள்ளையடித்த பார்ப்பனர் இன்றைக்கு குஜராத் மாநிலத்தில் பதவியில் இருக்கிறார்.
பார்ப்பனர் மனுதர்மத்தை அமல்படுத்த...
மனுதர்மத்தை அமல்படுத்த பார்ப்பன ஆதிக்க வர்க்கம் நுழைவுத் தேர்வை மீண்டும் அமல்படுத்தப் பார்க்கிறது. அதன் மூலம் நமது பிள்ளைகளின் படிப்பைத் தடுக்கப் பார்க்கிறார்கள்.

மத்திய அரசின் கல்வி அமைச்சரோ மருத்துவக் கல்லூரி பொது நுழைவுத் தேர்வைக் கொண்டு வர உடன் படக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறார்.
மருத்துவக் கல்லூரிக்கு மட்டுமல்ல, எந்தக் கல்லூரிக்கும் நுழைவுத் தேர்வு என்பதைக் கொண்டு வரவே கூடாது.
சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கக்கூடியது
இந்த நுழைவுத் தேர்வு சமூக நீதிக்கு விரோதமானது. சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கக்கூடிய ஆபத்தான ஒன்றாகும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் மட்டும் நடைபெறவில்லை. தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. புதுச்சேரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திரும்பப் பெறவேண்டும்
எனவே, மருத்துவக் கல்லூரிக்கு பொது நுழைவுத் தேர்வு என்று மருத்துவக் கவுன்சில் அறிவித்த அறிவிப்பைத் திரும்பப் பெறவேண்டும்.

இந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுகிற வரை எங்களது போராட்டம் தொடரும்.
இந்த நுழைவுத் தேர்வு எனும் பார்ப்பனர்களின் சதித் திட்டத்தை - உயர்ஜாதிக்காரர்களின் சதித் திட்டத்தை முறியடிக்கும் வரை திராவிடர் கழகம் ஓயாது. இந்த எதிர்ப்பு, கண்டனஆர்ப்பாட்டம் என்பது இது முதல் கட்டம்தான்.
போராட்டம் தொடரும்
மத்திய அரசின் மருத்துவக் கவுன்சிலும், மத்திய அரசும் இதில் பிடிவாதம் காட்டக்கூடாது. எனவே, எங்களுடைய போராட்டம் அடுத்த கட்டமாக மீண்டும் தொடரும். மக்கள் மத்தியில் இந்த செய்திகளைக் கொண்டு சென்று மக்களைத் திரட்டுவோம். இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஒலி முழக்கம்!
அதன்பின் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களே ஆர்ப்பாட்ட ஒலி முழக்கங்களை எழுப்பினார். அதைக் கூடியிருந்த தோழர்கள், தோழியர்கள் ஆர்ப்பரித்து முழங்கினர். நுழைவுத் தேர்வு கூடாது!
தடுப்போம், தடுப்போம்
நுழைவுத் தேர்வைத் தடுப்போம்!
எங்கள் கிராமத்துப் பிள்ளைகள்
டாக்டராக வருவதைத் தடுக்கும்
தடுப்புச் சுவரை உடைப்போம்!
தமிழகத்தில் நுழைவுத் தேர்வைத் ரத்து செய்து சட்டம் இயற்றிய
முதல்வர் கலைஞரைப் பாராட்டுகிறோம்!
நுழைவுத் தேர்வை தெளிவு படுத்தி
மத்திய அரசுக்கு எடுத்துரைத்து எழுதிய
முதல்வர் கலைஞரைப் பாராட்டுகிறோம்
ஒன்று சேர்வோம்
ஒன்றுசேர்வோம்
நுழைவுத் தேர்வை எதிர்க்க கட்சி வேறுபாடின்றி அனைவரும்
ஒன்று சேர்வோம், ஒன்று சேர்வோம்!
தகுதி,திறமை என்ற முகமூடியைக் கழற்றி எறிவோம்!
ஏமாற்றாதே!
ஏமாற்றாதே, ஏமாற்றாதே
கிராமத்து மக்களை ஏமாற்றாதே!
ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றாதே!
இவ்வளவு ஒலி முழக்கங்களையும் தமிழர் தலைவர் எழுப்பினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
முக்கிய பிரமுகர்கள்
திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி தலைவர் கவிஞர் செ.வை.ர. சிகாமணி, திராவிடர் கழக கலைத் துறை அமைப்பாளர் இனமான நடிகர் மு.அ.கிரிதரன், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராசன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் திருமகள்.
சமாஜ்வாடி கட்சி
சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் இளங்கோ யாதவ், மாநில பொதுச் செயலாளர் வாசு, மாநிலப் பொருளாளர் ராஜேந்திரன், மாநில இளைஞரணி தலைவர் ஆர்.சம்பத், சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் என். பாஸ்கரன் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
பெரியார் பெருந்தொண்டர் வந்தவாசி வேல். சோமசுந்தரம், சீர்காழி ஜெகதீசன், பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் சத்திய நாராயணன் சிங், துணைச் செயலாளர் த. சுப்பிரமணியம், பொருளா ளர் கு.மனோகரன், திராவிடர் தொழிலாளர் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த நாகரத்தினம், இராமலிங்கம்,
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, தோழர்கள் இரா. பிரபாகரன், மு.சண் முகப்பிரியன், மு.ந. மதியழகன், எம்.பி.பாலு, டி.ஆர். சேதுராமன், கு.பா.அறிவழகன், அரவிந்த்.ச., தேசி. கணேஷ், சௌ. சந்தோஷ்குமார், சு.கிருஷ்ணமூர்த்தி, ம.மணியரசு, செ. இராமு, சிறீதர், ச.தாஸ், மாரியப் பன், க.விசயராசா, கு.செல்வேந்திரன், கோ.வீ. ராகவன், வடசென்னை மாவட்ட தலைவர் கோ. தங்கமணி வி., அஜந்தா பி., சந்தோஷ், வீர. சுவீன், அன்புச்செல்வம், சி.செங்குட்டுவன், விருகைநாதன், கே.எம்.சிகாமணி,
வடசென்னை மாவட்ட தி.க. தலைவர் கோ. தங்கமணி, செயலாளர் தி.வே.சு.திருவள்ளுவர், துணைத் தலைவர் தி.செ.கோபால், மற்றும் தோழர்கள் வாசு, தங்க. தனலட்சுமி, பிரபாகரன், விமலா, அறிவுசெல்வன், மணிமாறன், விசாலி, சரிதா, அன்புராசா, தம்பி. பிரபாகரன், ச.மனோகரன், இந்திரா, பெரம்பூர் ஜோதி, செம்பியம் கி. இராமலிங்கம், கோபாலகிருஷ்ணன், எண்ணூர் மோகன், கவிஞர் மணி காளியப்பன், மங்களபுரம் பாஸ்கர், சரவணா காலணியகம் சரவணன், தே. ஒளி வண்ணன், மு.ஜான்சன், சு. செல்வம், மு.லோகநாதன், இரா. சார்லஸ், வ.மாதேஸ்வரன்,
கும்மிடிப்பூண்டி தி.க. மாவட்டத் தலைவர் செ. உதயகுமார், துணை செயலாளர் க.ப.சக்கரவர்த்தி, துணைத் தலைவர் ந.கசேந்திரன், தோழர்கள் பழனி பன்னீர்செல்வம், வினோத்குமார், ஏமந்த்குமார், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் வ. இரவி,
சென்னை மண்டல தி.க. செயலாளர் நெய்வேலி வெ. ஞானசேகரன், தாம்பரம் மாவட்ட தி.க. தலைவர் ப.முத்தையன், செயலாளர் அனகை ஆறுமுகம், அடையாறு கோ. அரங்கநாதன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், மற்றும் தோழர்கள் பம்மல் கோபி, கண்ணன், விஜய்குமார்.கெ. சன் சரவணன், முருகவேல், மோகன், கோ. நாத்திகன், பரந்தாமன், பிரதாப், சுரேஷ், இர. சிவசாமி, திருஞானம், அரங்க நாதன், கலாநிதி, முத்தரசன், கண்ணன், நாகரத்தினம், கழக மகளிரணி கு. தங்கமணி, பசும்பொன், செல்வி, மணிமேகலை, இள. இந்திரா, இள. தேன் மொழி, வெற்றிச்செல்வி பூங்குன்றன், கனிமொழி, காயத்திரி, மலர்விழி, வி.வளர்மதி, வி. யாழ்ஒலி, வி. தங்கமணி, பி.அஜந்தா, விமலா, த.பங்கஜம், மோகன பிரியா, சங்கரி, வனிதா, இளமதி, வழக்கறிஞர் வீரமர்த்தினி, ஆனந்தி, மரகதமணி, துரை மீனாட்சி, திவ்யா, பா. மணியம்மை,
ஆவடி மாவட்ட தி.க. தலைவர் ம.ஆ.கந்தசாமி, செயலாளர் பா. தட்சணா மூர்த்தி, அமைப்பாளர் அ.அருண், ஆவடி நகர கழகத் தலைவர், இரா ஜேந்திரன், செயலாளர் கோ. முருகன், நகர அமைப்பாளர் இரவிச்சந் திரன், மாவட்ட இளைஞ ரணி துணைத் தலைவர் உ.கார்த்திக், ஆவடி மாவட்ட மகளிர் பாசறைஅமைப்பாளர் வனிதா, மற்றும் தோழர் கள் வேப்பம்பட்டு இரவிச் சந்திரன், பட்டாளம் பன்னீர், திருநின்றவூர் இரகுபதி, கு.சங்கரி, மோகனப்பிரியா, ஆவடி மாவட்ட மாணவரணி செயலாளர் கு. இளமதி, பூவிருந்தவல்லி, பெரியார் மாணாக்கன், மாட்சி, மணிமேகலை, பட்டா பிராம் அறிவுமணி, திரு வூர் கோரா, மதுரவாயல் நாகராஜ், அம்பத்தூர் அரவிந்தன், திவ்யபிரியா, காரல் மார்க்ஸ் மற்றும் விடுதலை மாதவன், பெரு.இளங்கோவன், உடுமலை வடிவேல், செங்கை பூபதி, புருனோ, கருணாகரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். நிறைவாக பா. மணியம்மை நன்றி கூறினார்.
கோவை
பொது நுழைவுத் தேர்வை கண்டித்து, கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட இளைஞர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 29.12.2010 புதன் காலை 11.30 மணிக்கு, செஞ்சிலுவை சங்க அலுவலகம் முன்பு கோவை மண்டல திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளர் ம.சந்திரசேகர் தலைமையில், மாநகர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் மா.சிவதாஸ், மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மு.தமிழ் செல்வம், புறநகர் மாவட்ட மாணவரணி அமைப் பாளர் சு.ஜீவா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் சிங்கை ஆறுமுகம், மாநகர் மாவட்ட செயலாளர் அன்பரசு, புறநகர் மாவட்ட செயலாளர் பழ.அன்பரசு, புறநகர் மாவட்ட அமைப்பாளர் ச.சிற்றரசு, ஒன்றிய செயலாளர் ச.சிவக்குமார், ரங்கசாமி, புலியகுளம் ஜார்ஜ், திக.செல்வம், மு.தமிழ்செல்வம், போத்தனூர் சுகுமார், பெரியார் பெருந் தொண்டர் இ.கண்ணன், தா.சூசைராசு, ஆட்டோ சக்தி, விஜயன், ரகுநாத், வெற்றி செல்வன், கு.வெ. கி.செந்தில், வெள்ளலூர் மணி, தலைவர் பழனி சாமி, புண்ணியமூர்த்தி, தர்மலிங்கம், பொள் ளாச்சி மாவட்ட துணை செயலாளர் மாரிமுத்து, நகர தலைவர் வீரமலை, நகர செயலாளர் செழி யன், சிவானந்தம், இளை ஞர் அணி அமைப்பாளர் அனந்தசாமி, சிவக்குமார், முனியன், சதீசு, அடைக் கலம், வெள்ளலூர் ஆறுச் சாமி, மாவட்ட அமைப் பாளர் திராவிடமணி, சுரேசு, ரமேசு, மகாலிங் கம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலை செல்வி, சுயமரியாதை திருமண நிலைய அமைப் பாளர் ராஜேசுவரி, தி. கவிதா, திலகம், ஜோதி, சகுந்தலா, பிரியா, பெரி யார் பிஞ்சுகள் ரா.சி. பிர பாகரன், தா.க.கவுதமன், தா.க.யாழினி, தி.ச.யாழினி, தி.ச.கார்முகிலி, த.செ.இனியா, மதிவாணன், கு.விஜய், கு.அஜித், பெரியார்மணி, ஜெயந்த்,சக்தி பழனிசாமி, தமிழரசு, நான்சி, மற்றும் இந்நிகழ்வில் சமாஜ்வாடி கட்சியின் மாநில துணைத்தலைவர் சதீஷ், க.செல்வ ராசு, செல்வம்,ராமு ஆகியோர் கலந்து கொண் டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனை வருக்கும் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வே.தமிழ்முரசு நன்றி கூறினார்.

நாகர்கோவில்
மருத்துவக் கல்லூரி படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வை மத்திய மருத்துவ கவுன்சில் புகுத்துவதைக் கண்டித்து குமரி மாவட்ட தி.க. இளைஞரணி சார்பில் நேற்று காலை 10 மணிக்கு (29.12.2010) நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
குமரி மாவட்ட தி.க. இளைஞரணி செயலாளர் த.சுரேஷ் வரவேற்றுப் பேசினார். தி.க. மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்கறிஞர் வே.சதா தலைமை தாங்கினார். தி.க. மாவட்ட தலைவர் ப.சங்கர நாராயணன், தி.க. மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன், தி.க. மாவட்ட துணை செயலாளர் சோ.பன்னீர்செல்வம், தி.க. மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
விளிம்பு நிலை மக்கள் குரல் அமைப்பாளர் சி.மா.பிருதிவிராஜ், வழக்கறிஞர் கோ.தமிழ்ச் செல்வன், தி.க. மாவட்ட மகளிரணி தலைவர் ச.ச.மணிமேகலை, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு ஆகியோர் உரையாற்றினர். சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் அ.செய்யது அலி கருத்துரை ஆற்றினார்.
தி.க. நெல்லை மண்டல செயலாளரும், கழக பேச் சாளருமாகிய மா.பால் ராசேந்திரம் ஆர்ப்பாட் டத்தின் நோக்கங்களை விளக்கியும், நுழைவுத் தேர்வால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற மாணவர் களுக்கு ஏற்படும் பாதிப் புகள் குறித்தும், நுழைவுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் சிறப்புரை ஆற்றினார்.
தி.க. மாவட்ட மகளி ரணி தலைவர் ஆ.செல்வி, தி.க. நகர செயலாளர் செ.ஆனந்தன், நகர அமைப் பாளர் ச.நல்ல பெருமாள், தி.க. குருந்தன்கோடு ஒன் றிய செயலாளர் ம.ப. நூர்தீன், தோவாளை ஒன் றிய தி.க. செயலாளர் மா. ஆறுமுகம், தி.க. நகர இ. அணி செயலாளர், மு.சேகர், தி.க. நகர துணைத் தலை வர் கவிஞர் எச்.செய்க் முகமது, தி.க. கருங்கல் கிளை செயலாளர் அ.மத் தியாஸ், தி.க. மகளிரணி தோழர் சொர்ணா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட் டத்தின் நோக்கங்கள் குறித்து முழக்கமிட்டனர். தி.க. மாணவரணி செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
திருச்சி
நுழைவுத்தேர்வை அனுமதிக்கக் கூடாது என்ப தனை வலியுறுத்தி திருச்சி சந்திப்பு காதி கிராப்ட் அருகில் நேற்று மாலை 4.00 மணியளவில் மாவட்ட மாணவரணித் தலைவர் ப.பாலகிருஷ்ணன் தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டஇளைஞரணித் தலைவர் நேதாஜி, செயலாளர் தமிழ்மணி, இலால்குடி மாவட்ட இளைஞரணித் தலைவர் அன்புராஜா, செயலாளர் ஆசைத்தம்பி, மாவட்ட மாணவரணித் தலைவர் முரளிதரன், மாவட்ட இளைஞரணித் துணைச் செயலாளர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டலத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்டச் செயலாளர் மா.செந்தமிழினியன், இலால்குடி மாவட்டச் செயலாளர் ஆல்பர்ட், மாவட்ட அமைப்பாளர் இளவரி, இலால்குடி ஒன்றியத் துணைச் செயலாளர் ஆசிரியர் அமிர்தம், உடுக்கடி அட்டலிங்கம், சமாஜ்வாடி கட்சி மாநில பொதுச் செயலாளர் நீலமேகயாதவ் ஆகி யோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள். பின்னர் ஆர்பாட்ட நோக்க ஒலி முழக்கமிட்டனர்.
மாநகர செயலாளர் ஜெயராஜ், எஸ்.பி.செல் வம், மாநகர அமைப்பா ளர் குணசேகரன், திரு வெறும்பூர் ஒன்றியச் செயலாளர் தமிழ்ச்சுடர், திருவரங்கம் நகரத் துணைத் தலைவர் வே.முத்துக்குமா ரசாமி, அமைப்பு சாரா தொழிற் சங்கத் தலைவர் திராவிடன் கார்த்திக், சோமசரம்பேட்டை தியாகராஜன், சேவியர், ஜெயில் பேட்டை அருள், மாநகர அமைப்பாளர் விடுதலை செல்வம், உண்மை துரை ராஜ், பால்ராஜ், ஆட்டோ பழனி, ஸ்டா லின், சட்டக் கல்லூரி மாணவர் தலைவர் அருண்பாண்டியன், திலீபன், கோபிநாத், ஆனந்த்,சின்னராசு, செந்தில், மணிகண் டன், சமாஜ்வாடி கட்சி சார்பில் ஜோசப்ராஜ், ராமானுஜம், கேசவன், தண்டபாணி, இலால்குடி மாவட்ட தோழர்கள் வெங்கடாசலம், கலியபெரு மாள், செல்வராஜ், பிச்சைமணி, ஜான் லூயிஸ், இராஜகோபால், பொதுக்குழு உறுப்பினர் பொன் மலை கணபதி, பாலமுருகன் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர் மாநகர தலைவர் கணேசன் நன்றி கூறினார்.
காரைக்குடி
காரைக்குடியில் நுழைவுத்தேர்வு திணிக்கப் படுவதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு தி .க தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி தலைமையேற்றார். மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி, மண்டல செயலாளர் சாமி.சமதர்மம், மாவட்ட செயலாளர் தி.என்னா ரெஸ் பிராட்லா, தி.தொ.ச.மாநில துணைத்தலைவர் அ.கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் சா.இராமன், சாக்கோட்டைஒன்றிய செயலாளர் சி.செல்வமணி, நகர அமைப்பாளர் செஞ்சை பழனிவேலு, தேவகோட்டை நகர தலைவர் தி.கலைமணி, பெரியார் வீர விளையாட்டு கழக செயலாளர் ஒரத்தநாடு இராமகிருட்டினன், மாவட்ட ப.க.தலைவர் ந.ஜெகதீசன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் சிவ.கிருட்டினன், செயலா ளர் ப.சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்
29.12.2010 அன்று மாலை 4 மணிக்கு காஞ்சியில், காஞ்சி மாவட்ட தி.க. தலைவர் டிஏஜி அசோகன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி தொடக்க உரையாற் றினார். செங்கை கழக மாவட்ட செயலாளர் துரை. முத்து அனைவரையும் வரவேற்றார். ஆர்ப் பாட்டத்தை விளக்கி செங்கை மாவட்ட தி.க. தலைவர் அ.கோ. கோபால்சாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் மு.அருண்குமார், செங்கை சுந்தரம், பழனி சு.அழகிரிசாமி, செங்கை மாவட்ட இளைஞரணி தலைவர் படாளம் கருணாநிதி, காஞ்சி மாவட்ட தி.க. செயலாளர் செ.ரா.முகிலன், தலைமை கழகப் பேச்சாளர் காஞ்சி பா.கதிரவன் ஆகியோரின் உரைக்குப்பின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தமிழ் சாக்ரட்டீஸ் தலைமை உரையாற்றினார். நுழைவுத் தேர்வு என்ற நரித் தனத்தை பார்ப்பனர்கள் திணிப்பதால் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி உரிமை பறிக்கப்படும் அபாயத்தையும், கழகத்தின் போராட் டத்தின் நியாயத்தையும் விளக்கி உரையாற்றினர். காஞ்சி மண்டல தி.க. தலைவர் பு.எல்லப்பன் நன்றி கூறினார்.
மதுராந்தகம் ஏழுமலை, சுந்தர பிரபாகரன், கி.இளையவேள், திருக்கழுக்குன்றம் சண்முகம், ஓட்டுநர் விஜி, மாணவரணித் தோழர்கள் வி.சுரேஷ், சி.ஜானகிராமன், எ.பிரபாகரன், பாரதிதாசன், வெற்றித்தமிழன், தியாகராஜன், மைக்செட் சேகர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...